வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 28 செப்டம்பர், 2026

புரிதல் I சான்றோர் சிந்தனை I வானொலி உரை I

 

பறவைகளும் விலங்குகளும் மனிதர்கள் போல பேசுவதில்லை..

என்றாலும் அவை வெளிப்படுத்தும் ஒலிகளுக்குள் புரிதல் நிகழ்கிறது..

மனிதரின் மொழிகளில் பல வகை உண்டு..

இருவர் இருவேறு மொழிகளில் உரையாடும்போது அவர்களுக்குள் தவறான புரிதல் ஏற்படுவது இயல்பு. ஆனால் ஒரு மொழியை நன்றாக அறிந்த இருவர் உரையாடும்போதும் தவறான புரிதல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

அறிவு, அனுபவம், ஆர்வம், தேடல் என பல்வேறு பண்புகளால் புரிதல் என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது..

தமிழ்க் காப்பியங்கள் வினாடி வினா

📚 தமிழ்க் காப்பியங்கள் வினாடி வினா
ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் பிற சமயக் காப்பியங்கள்

வணக்கம்! வினாடி வினாவிற்கு வரவேற்கிறோம்

இலக்கியத் தேர்வுகளுக்கும் போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ள வகையில் தமிழ்க் காப்பியங்கள் சார்ந்த 30 பலவுள் தெரிவு வினாக்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

விதிகள் & அமைப்புகள்:
  • மொத்தம் 30 வினாக்கள்; ஒரு திரையில் ஒரு வினா மட்டும் தோன்றும்.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 30 விநாடிகள் கால அவகாசம்.
  • சரியான விடைக்கு பச்சை நிறமும், தவறான விடைக்கு சிவப்பு நிறமும் மாறும்.
  • விடையளித்தவுடன் அதற்கான எளிய விளக்கம் உடனடியாகக் கீழே தோன்றும்.
  • கீழே உள்ள வட்டப் பொத்தான்களைப் பயன்படுத்தி எந்த வினாவிற்கும் எளிதாகத் தாவலாம்.
வினா: 1 / 30
⏳ 30 விநாடி
வினா வழிகாட்டிப் பலகை:
🏆

வினாடி வினா நிறைவடைந்தது!

0 / 30

வியாழன், 24 செப்டம்பர், 2026

விக்கித் திட்டங்கள் (Wiki Projects)I வினாடி வினா

விக்கித் திட்டங்கள் வினாடி-வினா
விக்கிமீடியா வினாடி-வினா

விக்கித் திட்டங்கள் (Wiki Projects)

விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிநூல்கள், விக்கிமேற்கோள் சிறப்பு வினாக்கள்

பதிலளித்தவை: 0 / 30
சரியானவை: 0

புதன், 23 செப்டம்பர், 2026

கட்டற்ற வளங்களும் உரிமங்களும் - வினாடி வினா

கட்டற்ற மென்பொருள்கள் & காப்புரிமைகள் - வினாடி வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து உடனடி விளக்கத்தையும் மதிப்பீட்டையும் பெற்றிடுங்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2026

பொறுப்பு -சான்றோர் சிந்தனை - வானொலி உரை



பொறுப்பு (Responsibility) மற்றும் கடமை (Duty) ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றாலும், அவற்றுக்கு இடையே  நுட்பமான வேறுபாடு உண்டு.

கடமை என்பது, சமூகம், சட்டம் அல்லது விதிமுறைகளால் நமக்கு வழங்கப்பட்ட செயல். பொறுப்பு என்பது, ஒரு செயலின் விளைவுகளுக்குத் தானே முழுமையான பொறுப்பேற்கும் மனநிலை.

கடமை, வெளிப்புறத்தில் இருந்து கட்டாயப்படுத்தப்படுவது

பொறுப்பு மனதிலிருந்து தானாக எழுவது.

திங்கள், 21 செப்டம்பர், 2026

எல்லை - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

  


எல்லைகளற்றது வானம். ஆனால் நிலம் மனிதர்களால் எல்லைகளாகப் பகுக்கப்பட்டது. நிலங்களில் மட்டுமல்ல மனித மனங்களிலும் எல்லைக்கோடுகள் உண்டு. தெரிந்தே எல்லைகளை மீறுவோர் பலர். தெரியாமல் எல்லைகளைத் தாண்டுவோர் சிலர். எது எல்லை என்றே தெரியாதவர்கள் பலர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது எல்லைகளைக் கடந்த உயரிய சிந்தனை.

 எல்லையற்ற ஆற்றல், எல்லையற்ற உற்சாகம், எல்லையற்ற துணிச்சல் மற்றும் எல்லையற்ற பொறுமையுடன் முன்னேறுங்கள் - அப்போதுதான் மாபெரும் செயல்களைச் சாதிக்க முடியும் என்றார் விவேகானந்தர், மாபெரும் செயல்களை சாதிக்கவிரும்புவோர் எது எல்லை என்பதை அறிவதும், எல்லைகளை எப்போது தாண்டலாம் எந்த எல்லைகளைத் தாண்டவே கூடாது, எந்த எல்லைக்குள் வாழ்வது பெருமை என்பதை உணர்ந்திருப்பார்கள்.

வியாழன், 17 செப்டம்பர், 2026

திறமை - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 

திறமை

 திறமை என்பது ஒரு குறிப்பிட்ட வேலையைச் சிறந்த முறையில் செய்து முடிக்கும் ஆற்றல். இயற்கையாக அமையும் திறன் அல்லது பயிற்சியால் வளர்த்துக்கொள்ளப்படும் புலமை.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (972) என்று திருவள்ளுவர் சொல்வதுபோல, திறமையில்லாதவர்கள் யார்? ஆனால் தமக்குள்ள திறமையை அறியாதவர்களும், அறிந்தும் வெளிப்படுத்தாதவர்களும் பலர் உண்டு.

  “எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல் என்றார் விவேகானந்தர்.

 

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

மனநிறைவு

 


 

இன்றைய வேகமான உலகில் நாம் அனைவரும் ஏதோ ஒன்றை நோக்கி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணம், புகழ், பதவி எனப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆனால், இவை அனைத்தையும் அடைந்த பிறகும் நம் மனதில் ஒரு வெற்றிடம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் பொறாமை, பேராசை அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு நிறைந்துவிட்டால் மனநிறைவு பெற இடம் கிடைக்காது.

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள் மனநிறைவடைவார்கள். ஆனால் போதும் என்ற மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்துவிடாது. நாம் வாழத் தேவை குறைவுதான் என்றாலும், அடுத்தவரைப் போல வாழ்வதற்காகவும், அடுத்தவரைவிட சிறப்பாக வாழ்வதற்கும் தான் அதிகமாக செலவிடுகிறோம்.

புதன், 9 செப்டம்பர், 2026

கீழடி - கொடுமணல் வினாடி வினா

கீழடி - கொடுமணல் அகழாய்வு வினாடி-வினா
தமிழ் தொல்லியல் வினாடி-வினா

கீழடி - கொடுமணல் அகழாய்வுச் சான்றுகள்

விடையைத் தேர்ந்தெடுத்த உடனே சரி/தவறு மற்றும் விளக்கத்தைப் பெறலாம்

பதிலளித்தவை: 0 / 25
சரியானவை: 0
```