பாவ மன்னிப்பு என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் இயற்றிய மனிதன் மாறிவிட்டான்.. என்ற பாடல் சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் விருப்பமான பாடலாகும்.
ஒவ்வொரு முறையும் மனிதனின் கண்டுபிடிப்புகளைப் பார்க்கும் போதும்.. எனக்கு நினைவுக்கு வரும் பாடல் இது.
போலச் செய்தல் தான் மனிதனை இந்த அளவுக்கு வளரச் செய்திருக்கிறது.
இதனை கவிஞர் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்..
பறவை - விமானம்
எதிரொலி - வானொலி
மீன் - படகு..
மனிதன் - கணினி!!!!!!!
இப்படி எல்லாமே மனிதனின் ஒப்புநோக்குச் சிந்தனைகள் தான்.
'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
ம்..ம்..ம்..ம்..
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
சனி, 21 மே, 2011
மனிதன் மாறிவிட்டான்.
Labels:
அன்றும் இன்றும்,
அனுபவம்,
சிந்தனைகள்,
நகைச்சுவை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



பதிவு உங்கள் பாணியில் நச்.
பதிலளிநீக்கு@சசிகுமார் தொடர் வருகைக்கு நனறி நண்பா.
பதிலளிநீக்குஅசத்தல் பதிவு நண்பா..
பதிலளிநீக்குஇனி தொடர்ந்து வருகிறேன் ..
@!* வேடந்தாங்கல் - கருன் *! மகிழ்ச்சி நண்பா.
பதிலளிநீக்குமனிதன் மாறி மனிதம் தொலைந்துகொண்டிருக்கும் காலம் இது.நாகரீகத்தின் பெயரால் அழிவுகள் !
பதிலளிநீக்கு@ஹேமா உண்மைதான் ஹேமா..
பதிலளிநீக்குவிஞ்ஞானம் வளர வளர மனிதாபிமானம் மண்ணுக்குள் தான் சென்று கொண்டிருக்கிறது.
அர்த்தமுள்ள அழகான பாடல் வரிகள். அருமையான இசை அமைப்பு.
பதிலளிநீக்குஎனக்கும் மிகவும் பிடித்த காதில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல் இது.
பகிர்வுக்கு நன்றி.
நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
பதிலளிநீக்குநீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்
எனக்கும் ரொம்ப பிடித்தமான பாடல் இது. மனிதன் மாறிவிட்டான்; மறுபடி மரத்தில் ஏறி விட்டான்:(
பாடல் வரிகளுக்கான படங்களை தொகுத்தவிதம் அருமையாக உள்ளது நண்பரே...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வேலன்.