வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 6 மே, 2014

நம்மை மாற்றும் மாபெரும் ஆற்றல்!


குழந்தைப் பருவத்திலிருந்து இன்றுவரை நாம் கடந்துவந்த பாதையை, சற்று திரும்பிப் பார்த்தால்…

பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், நூல்கள், அனுபவங்கள், வெற்றிகள், தோல்விகள் என நாம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு உறவுகளும், சூழல்களும் நம் பழக்கவழக்கத்தை, பண்பாட்டை செதுக்கியிருக்கின்றன என்பதை நாம் உணரமுடியும். மேற்சொன்ன உறவுகளையும், சூழல்களையும்விட நாம் தேர்ந்தெடுக்கும் நட்பு நம்மை மாற்றும் மாபெரும் ஆற்றலாக அமைவதை நாம் உணரவேண்டும்.

திங்கள், 5 மே, 2014

தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!


* இந்தியாவில் தோன்றிய மிகத் தொன்மையான மொழி தமிழ்
* திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரி விடிவ எழுத்தைக் கொண்ட மொழி தமிழ்.
* திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி தமிழ்
* தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.
* தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.

ஞாயிறு, 4 மே, 2014

தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே பலரும் அறிந்திருப்பார்கள். பல விழாக்களிலும் விழாக்களைத் தொடங்க மேற்கண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையோ, கடவுள் வாழ்த்துப் பாடல்களையோ பாடி விழாவைத் தொடங்குவர். 

லரும் அறியாத, சமயச் சார்பற்ற, தமிழின் பழமையையும், பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல் ஏதாவது சொல்லுங்களேன் என்று என்னிடம் கேட்போருக்கு நான் பரிந்துரை செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதுதான். இதனை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பாடியுள்ளார். இப்பாடல் கனிச்சாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளி, 2 மே, 2014

பெரிதே உலகம் ! பேணுநர் பலரே!



நான்கு சுவர்களுக்குள் நம் உலகம் அடங்கிவிடுகிறது. அது வீட்டுக்கு உள்ளேயோ, வெளியோ நாம் படிக்கும், பணிபுரியும் இடமாகவோ அமைகிறது. இன்று இணையம் வந்து உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது என பெருமிதமடைந்தாலும், சிந்தித்துப் பார்த்தால் நாம் வாழும் உலகம் மிகவும் சிறியது என்பது புரியவரும்.

வியாழன், 1 மே, 2014

பிறந்த ஊருக்குப் பெருமைசேர்த்தவர்கள்!


1. உ
. வே. சாமிநாதையர் – உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக .வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார்.  தமிழ் நாட்டில்  கும்பகோணத்துக்கு அருகே உள்ள "உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்