செவ்வாய், 6 மே, 2014

நம்மை மாற்றும் மாபெரும் ஆற்றல்!


குழந்தைப் பருவத்திலிருந்து இன்றுவரை நாம் கடந்துவந்த பாதையை, சற்று திரும்பிப் பார்த்தால்…

பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், நூல்கள், அனுபவங்கள், வெற்றிகள், தோல்விகள் என நாம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு உறவுகளும், சூழல்களும் நம் பழக்கவழக்கத்தை, பண்பாட்டை செதுக்கியிருக்கின்றன என்பதை நாம் உணரமுடியும். மேற்சொன்ன உறவுகளையும், சூழல்களையும்விட நாம் தேர்ந்தெடுக்கும் நட்பு நம்மை மாற்றும் மாபெரும் ஆற்றலாக அமைவதை நாம் உணரவேண்டும்.


நம்மை இந்த உலகத்துக்குத் தந்தது நம் பெற்றோராக இருக்கலாம்!

நம் திறமைகளை நமக்கு அறிமுகம் செய்பவர் நம் ஆசிரியாராக இருக்கலாம்!

நம்மை ஊக்கப்படுத்தி நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தருபவர் நண்பராகவே இருப்பார்.

அதனால் நாம் நண்பரை தேர்ந்தெடுப்பதற்கு முன் பலமுறை சிந்திக்கவேண்டும். தேர்ந்தெடுத்தபின் அவரை முழுமையாக நம்பவேண்டும். நாம் நல்லவராக இருந்தால் நாம் தேர்தெடுப்பவரும் நல்லவராகவே இருப்பார். நாம் தீய பண்புடையவராக இருந்தால் நம்மைத் தேடிவரும் நட்புகளும் அத்தன்மையுடையவராகவே அமைவர்.


14 கருத்துகள்:

 1. சரியான நண்பர்கள் அமைந்து விட்டால் வெற்றி நம்வசமாகிவிடும்

  பதிலளிநீக்கு
 2. அருமையான இலக்கிய பாடலுடன் விளக்கம் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. கண்டிப்பாக சிந்தித்து செயல் பட வேண்டும்... ஐந்து அதிகாரங்கள் இதற்கே தான்...

  பதிலளிநீக்கு
 4. இதுவரை அறியாத அற்புதமான
  கவிதையை எளிய அருமையான
  விளக்கத்துடன் பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. பெற்றோர்கள் அதைவது விதி!
  நண்கர்கள் அமைவது மதி என்பதை
  அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் முனைவர் ஐயா.

  பதிலளிநீக்கு