Monday, October 10, 2011

தாவரங்கள் பேசுகின்றன..

மொட்டொன்று திடுக்கிட்டு விழித்தது
ஏனென்று கேட்டேன்?

'ஒலி மாசுபாடு' என்றது!

மலர் ஒன்று தும்மியது
என்ன ஆச்சு என்றேன்?

'சுற்றுச் சூழல் சீர்கேடு' என்றது!

மரம் ஒன்று மருத்துவமனையில்
வரிசையில் காத்திருந்தது
உடம்புக்கு என்ன ஆச்சு என்றேன் ?

'செயற்கை உரம்' என்னை 
நோயாளியாக்கிவிட்டது என்றது!

புயல் ஒன்று சீற்றத்தோடு வந்தது.
அதை நிறுத்தி 
ஏனிந்த வேகம் என்றேன்?

என்னைவிட வேகமாகத் 
தாவர இனத்தை அழிக்கும் 
மனிதர்களை நான் அழிக்கத்தான்
இந்த வேகம் என்றது!

வீட்டுச் சுவர் ஒன்றில்
செடி ஒன்று முட்டிக் கொண்டு
கிளைத்து வளர்ந்தது!
அதனிடம் சென்று..

ஏ செடியே..
மனிதன் அரும்பாடுபட்டுக் கட்டிய 
வீட்டில் வாடகை தராமல் நீ 
குடியேறுவது சரியா என்றேன்?

செடி சொன்னது..
இது எனக்கும் மனிதனுக்கும் 
நடக்கும் விளையாட்டு..

சில நேரம் மனிதன் என்னை வெல்வான்
இறுதியில் நானே வெல்வேன்! என்றது!!

தொடர்புடைய இடுகைகள்.
39 comments:

 1. நச்... ஆன்மா குறித்து பேசுபவர்களிடம் நான் கேட்க்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான், செடி கோடிகளுக்கு ஆன்மா எங்கு உள்ளது... என்பது தான்... இதை தெரிந்து கொண்டால் தெளிந்து விடுவார்கள்

  ReplyDelete
 2. சிறப்பான சிந்தனை
  அருமையான சமூக கருத்துக்கள்
  கவிதை எழுதிய முனைவர் அவர்களுக்கு சல்யூட்

  ReplyDelete
 3. இதற்க்கு சரியான தீர்வு காணவில்லையென்றால்
  உலகம் அழிவை நோக்கி போவதை யாராலும் தடுக்க முடியாது..

  ReplyDelete
 4. தாவரங்களை நாம் அழித்தால்
  தாவரங்கள் நம்மை அழிக்கும்

  எச்சரிக்கை வரிகள்...

  ReplyDelete
 5. இறுதியில் நானே வெல்வேன்! கவிதையில் சொன்ன விதம் அருமை முனைவரே...

  ReplyDelete
 6. சமூக அக்கரை வரிகளிள் விலாவரியாக. அருமை..

  ReplyDelete
 7. இயற்கையை வெல்ல மனிதனால் ஒருபோதும் இயலாது. சுற்றுச்சூழல் குறித்த உங்கள் கருத்து அழகாக கவிதையாய் வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 8. சில நேரம் மனிதன் என்னை வெல்வான்
  இறுதியில் நானே வெல்வேன்! என்றது!!//
  நல்ல சிந்தனை.. சூப்பர்.

  ReplyDelete
 9. ~*~சில நேரம் மனிதன் என்னை வெல்வான்~*~ என்பது கூட ஒரு மாயை...
  மரம், செடி கொடிகளை அழித்துக்கொண்டே போனால் இறுதியில் மனிதன் வாழ்வதற்க்கான சூழலே இருக்காது.. அந்தஇடத்தில் தான் தன் தோல்வியை உணர்வான் மனிதன்...
  இயற்கையை காப்பதுதான் மனிதனின் முழு வெற்றி...

  ~*~இறுதியில் நானே வெல்வேன்! என்றது!!~*~ இதுதான் இயற்கை...

  நல்ல ஆழ்ந்த கருத்துள்ள கவிதை தந்தமைக்கு என் நன்றி... நண்பரே....

  ReplyDelete
 10. //
  மலர் ஒன்று தும்மியது
  என்ன ஆச்சு என்றேன்?

  'சுற்றுச் சூழல் சீர்கேடு' என்றது!


  //
  உண்மைதான் .. அழிவு ஆரம்பம்

  ReplyDelete
 11. இந்த கமெண்ட் பாக்ஸ்ல மொபைல் ல இருந்து கமெண்ட் போடா முடியவில்லை

  ReplyDelete
 12. //சில நேரம் மனிதன் என்னை வெல்வான்
  இறுதியில் நானே வெல்வேன்! என்றது!!//

  உன்மை!

  ReplyDelete
 13. நல்லதொரு கவிதை. அருமை. சமூக சிந்தனை மிக்க சிறந்த கவிதை.

  ReplyDelete
 14. நல்ல சிந்தனை முனைவரே

  ReplyDelete
 15. //செடி சொன்னது..
  இது எனக்கும் மனிதனுக்கும்
  நடக்கும் விளையாட்டு..

  சில நேரம் மனிதன் என்னை வெல்வான்
  இறுதியில் நானே வெல்வேன்! என்றது!!//

  சரியாகத் தான் சொல்லி இருக்கு செடி.....

  ReplyDelete
 16. தாவரங்கள் நமக்குத் தருவரங்களை மறந்து அவற்றை அழிக்கும் முயற்சியில் நாம்! தக்கப்பாடம் புகட்டுவதற்குள் நாமே தவறுணர்ந்து திருந்துதல் அறிவுடைமை. விழிப்புணர்வுண்டாக்கும் நல்லதொரு பதிவு.

  ReplyDelete
 17. @கவிதை வீதி... // சௌந்தர் // புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி சௌந்தர்.

  ReplyDelete
 18. @ராஜா MVS ஆழமான புரிதலுக்கு நன்றி ராஜா.

  ReplyDelete
 19. @"என் ராஜபாட்டை"- ராஜா வருகைக்கு நன்றி இராஜா..

  எனக்கு அலைபேசியில் கருத்துரையிடும் போது எவ்வித சிக்கலும் கிடையாதே..

  ஒருவேலை அலைபேசி உலவியல் ஏதும் இடர் இருக்குமோ..

  பார்க்கிறேன் நண்பா..

  ReplyDelete
 20. நிதர்சன கவிதை முனைவரே !

  ReplyDelete
 21. நன்றி தென்காசித் தமிழ்ப்பைங்கிளி

  ReplyDelete
 22. இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
  காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்.

  ReplyDelete
 23. மரங்கள் பற்றிய அருமையான விழிப்புண்ர்வு கவிதை!

  இவ்விசயத்தில் என் சிறு கவிதை

  http://npandian.blogspot.in/2011/10/blog-post_14.html

  ReplyDelete