Wednesday, January 4, 2012

லன்டன் டங்க்!மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டும்தானா.?
ஒரு இனத்தின், பண்பாட்டின், அனுபவத்தின், அறிவின் குறியீடல்லவா மொழி...

அறிவின் மொழி என்று எதுவும் உள்ளதா?
மொழிகளில் ஏது ஏற்றத்தாழ்வு..
சில மொழிகளைப் பேசும் போது மட்டும் சிலர் பெருமிதம் கொள்வது ஏன்..?
சில மொழிகளைப் பேசும் போது மட்டும் மனம் வாடி தாழ்வுமனம் கொள்வது ஏன்?

நோயல்லவா இது..

ஏன் இருமொழிகளையும் ஏமாற்றி நம்மை நாமும் ஏமாற்றிக்கொள்ளவேண்டும்..

இதோ உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் சிந்தனை ஒன்று..


காய்ச்சல் என்று சொல் ஜூரம்  என்று சொல்லாதே
எலும்புருக்கி என்று சொல் சயரோகம் என்று சொல்லாதே
எனத் தமிழறிவூட்டி மறைமலையடிகள் முதல் பாவேந்தர், பாவாணர், பெருஞ்சித்திரனார் வரை உணர்ச்சியற்ற தமிழ்மாடுகளுக்கு  முறையான மேய்ச்சல் பழக்கினார்கள்.

இன்று..

தமிழ்நாட்டில் ஒருவகைக் கண்நோயை “மெட்ராஸ் ஐ“ என்கிறான். Madras Eye என்கிறானே இவனுக்கு ஏன் London Tongue  என்பதுதான் புரியவில்லை.

நோயைக் கூடத் தமிழில் சொல்லமுடியாத நோய் தமிழனை அழித்துக்கொண்டிருக்கிறது.


இந்தநோய் உங்களுக்கு உள்ளதா?

தொடர்புடைய இடுகைகள்

17 comments:

 1. ஆமாம் தோழர் ..தமிழில் வேற்று மொழிக் கலப்பு ஆங்கிலேயருக்கு முன்பே இருந்தாலும் கூட ஆங்கிலதைக் கலந்து பேசுவதைத்தான் தமிழன் அதிகம் விரும்புகிறான்..கொடுமை..
  ஈரோட்டு சூரியன்

  ReplyDelete
 2. அருமை குணா, தொடருங்கள்.

  ReplyDelete
 3. இந்த நோய் என்னிடம் இல்லை முனைவரையா... நன்றி.

  ReplyDelete
 4. மொழிக்கலப்பைப் பற்றிப் பேசினால் கோவம்தான் வரும் குணா.அத்தனை அட்டகாசம் பண்றாங்க நம்மவங்க.நம்மவங்க மட்டும்தான்.எந்த ஒரு நாட்டவரிடம் இந்தக்குணம் இல்லை.சுவிஸ்காரர் ஆங்கிலம் தெரிந்தால்கூட பேசமாட்டார்கள்.தம்மால் முடிந்தளவு தம் மொழியில் முயற்சித்துவிட்டுத்தான் ஆங்கிலத்தில் சொல்ல முயல்வார்கள் !

  ReplyDelete
 5. மொழி நல்ல வந்திருக்கு.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. தவிர்க்க முடியாமல் பிற மொழி கலந்து பேசினால் கூட பரவாயில்லங்க,தமிழை மறந்த மாதிரி பிற மொழிகளை கலந்தடிப்பவர்களை என்ன செய்வது.

  ReplyDelete
 7. சென்னைக்கண் நோயை ( ) செங்கண் நோய் எனலாமே. எல்லோரும் பயன்படுத்தினால் எளிதாய் எவர்க்கும் விளங்கும். ஆங்கிலம் அறியாத் தமிழர் அதை அறிந்ததாய்க் காட்டிக்கொள்வதும் தமிழ் அறிந்தோர் அறியாததுபோல் நடிப்பதும் நாகரீக மோகத்தின் மற்றோர் பிரதிபலிப்பு. அத்தகையோர் தம் செயலை எண்ணி வெட்கவேண்டும். நல்லதொரு சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. ஆங்கிலம் கலந்து பேசுவதையே நாகரீகத்தின் வெளிப்பாடாய் பார்க்கிறான் தமிழன்.

  ReplyDelete
 9. என்று நாட்டில் தொழில்நுட்ப புரட்சி என்று ஒன்று வந்ததோ அன்றே கலாச்சாரமும், மொழிப்பற்றும் பறந்து போய்விட்டது...

  ReplyDelete
 10. Mozhiyil illai Kouravam. Vaazhum Muraigalil than ullathu enpathai makkal unara vendum.


  Arumai Sir.

  ReplyDelete
 11. குணா...காலப் போக்கில் எது நமது மொழி என்றே மறந்து விடும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம்தான் ஏற்படுகிறது.

  அருமையாக கூறியிருக்கிறீர்கள்..!

  ReplyDelete
 12. நன்றாக சொல்லியிருக்கிறியள். வேறு எந்தமொழிக்காரனுக்கும் இல்லாத அளவில் தமிழனுக்குத்தான் வேற்றுமொழிகளில் பற்று அதிகம்.

  ReplyDelete
 13. தமிழால் பணம் படைக்க இயலுமானால் தமிழ் அனைவருக்கும் அவசியமாகும் அதுவரை இதையெல்லாம் பொருத்து தான் ஆகவேண்டும். தான் தன் சுகம் பணம் இதில் தான் இருக்கு இன்றைய நிலை இது கட்டாயமும் கூட..அதனால் யாருக்கும் மொழிக்கு நேரம் ஒதுக்க நேரமில்லை..ஆதங்கம் தொடரும்!!!!

  ReplyDelete
 14. நன்றாகச் சொன்னீர்கள். நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு.

  ReplyDelete
 15. உண்மையான ஆதங்கம்.....ஆங்கிலமொழி கலப்பு ஒரு நோய்தான்.

  ReplyDelete
 16. நன்றி மதுமதி
  நன்றி ஆருரன் ஐயா
  நன்றி கணேஷ் ஐயா
  நன்றி ஹேமா
  நன்றி திருமதி ஸ்ரீதர்
  நன்றி கஸாலி
  நன்றி சேகர்
  நன்றி டேனியல்
  நன்றி தேவா
  நன்றி அம்பலத்தார்
  நன்றி தமிழரசி
  நன்றி மாதேவி
  நன்றி செந்தில்

  ReplyDelete