யாருக்கும் வெட்கமில்லை! 1. உனக்கு அந்த நாள் நினைவிருக்கா..?

 2. ஆகஸ்ட் 15 நாம இரண்டுபேரும் தேசியக் கொடி வாங்குவதற்காகக் கடைக்குப் போனோம்..

  கடைக்காரன் கொடி தந்தபோது நீ அவனைப் பார்த்துக் கேட்ட பாரு ஒரு கேள்வி..

  வேற கலர் இருக்கா?“ என்று..

  நினைவிருக்கா?

  வெட்கமா இல்லை... சிரிக்காத..

  சுதந்திரத்திருநாள் வாழ்த்துக்கள்.

  என்றொரு குறுந்தகவல் உலவி வருகிறது.


 3. ஒரு காலத்தில் அரசாங்கம் சொன்னது...

 4. குடிமக்களே வீட்டுக்கு வீடு மரம் வளருங்கள் என்று..

  மக்கள் அரசிடம் கேட்டார்கள்...

  மரம் வளர்க்கிறோம் வீடு தாருங்கள் என்று..


 5. இன்று அரசு சொல்கிறது வட்டியில்லாக் கடன் ஐந்து இலட்சம் ரூபாய் தருகிறோம் வீடு கட்டிக் கொள்ளுங்கள் என்று...

 6. இன்றும் மக்கள் அரசிடம் கேட்கிறார்கள்...

  நீங்கள் தரும் பணம் வீடு கட்டிக்கொள்வதற்கே சரியாக இருக்கும் நிலத்தை யார் தருவார்கள்...? 
  இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன மரங்களிலா வீடு கட்டிக் கொள்வோம் என்று...


 7. அரசும் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை
 8. இந்த மக்களும் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை

 9. ஏனென்றால் யாருக்கும் வெட்கமில்லை.

  நல்ல கல்வியைத் தவிர வேறு எதையும் அரசு மக்களுக்குக் கொடுக்கவேண்டியதில்லை.
  அப்படிக் கொடுத்தால் அரசு அதற்குப் பதிலாக வேறு ஏதோ எதிர்பார்க்கிறது என்று தானே பொருள்...!

  கொஞ்சநேரம் இருங்க மக்கள் கூட்டமா எங்கேயோ ஓடுறாங்க.. எங்கே என்று  கேட்டுட்டு திரும்பி வருகிறேன்..


  ம்பா.......
  எங்கே எல்லோரும் கூட்டமா ஓடுறீங்க...

  என்னது....
  அரசாங்கம் இலவசமா.... அலைபேசி (செல்போன்) கொடுக்கறாங்களா...???

  தொடர்புடைய இடுகைShare on Google Plus

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் உதவிப் பேராசிாியா், கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
  Blogger Comment

20 கருத்துகள்:

 1. //கேட்ட பாரு ஒரு கேள்வி..

  “வேற கலர் இருக்கா?“ என்று..

  நினைவிருக்கா?

  வெட்கமா இல்லை... சிரிக்காத..//

  ஹா..ஹா...


  ReplyDelete
 2. அருமை முனைவரே!
  வெட்கமில்லை,வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை!

  ReplyDelete
 3. நாடு எந்தளவு மோசமாகி வருகிறது என்பதை, பதிவின் மூலம் அறிய முடிகிறது. நன்றி. (TM 4)

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி அன்பரே.

   Delete
 4. //நல்ல கல்வியைத் தவிர வேறு எதையும் அரசு மக்களுக்குக் கொடுக்கவேண்டியதில்லை/

  சத்தியமான உண்மை!

  ReplyDelete
 5. அருமை அருமை
  மக்களின் பிச்சைக்கார மன நிலையையும்
  அதனி மிகச் சரியாகப் பய்ன்படுத்திக் க்கொள்ளும்
  அரசியல்வாதிகளையும் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ஆழமான புரிதலுக்கு நன்றி அன்பரே.

   Delete
 6. சரியாகச் சொன்னீர்கள். இலவசமாய் எது கிடைக்கும் என்றே முக்கால்வாசி மக்களின் எண்ணம் இருக்கிறது, ஏழையோ பணக்காரரோ!
  கல்வி மட்டுமே தனிமனித வாழ்வையும் நாட்டையும் உயர்த்தும்!

  ReplyDelete
  Replies
  1. ஏழையோ பணக்காரரோ!
   கல்வி மட்டுமே தனிமனித வாழ்வையும் நாட்டையும் உயர்த்தும்!

   அழகாகச் சொன்னீர்கள் கிரேஸ்

   தனிமனித உயர்வு சமூகத்தின் உயர்வல்லவா.

   Delete
 7. சிறப்பான பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
  குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
  ReplyDelete

Labels

1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பழமொழி பழைய வெண்பா பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு யுடியுப் வலைச்சரம் ஆசிரியர் பணி. வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து