வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

கல்வி - தமிழ்நாடு - வேலைவாய்ப்பு

                     இன்றைய இந்தியக் கல்விமுறை செல்லும் திசையைப் பார்த்தால் எதிர்காலத்தில் இந்திய வரைபடத்திலிருந்தே இந்தியா தொலைந்துபோகுமோ என்றே அச்சம் தோன்றுகிறது. ஒருகாலத்தில் இங்கு படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலைபார்த்தார்கள். இன்றோ இங்கு இருந்துகொண்டு வெளிநாட்டுக்கு அவர்களுக்காக இரவுபகல் என்று பாராமல் உழைக்கிறார்கள்.

                   இன்றைய சூழலில் மாணவர்களுக்கான கல்விச்சாலைகள் இருக்கும் அளவுக்கு அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இல்லை. அவர்கள் தாம் படித்த படிப்புக்கு ஏற்ப சொந்தமாக தொழில்செய்து தங்கள் குடும்பத்தையும், நாட்டையும் வளப்படுத்தத் தேவையான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது. 

             தவறான மொழிக்கொள்கை, தவறான கல்விக்கொள்கை முறையான கட்டுபாடுகள் பின்பற்றப்படாமை என பல குறைபாடுகளால் இன்றைய மாணவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொத்தடிமைகளாக மாறிவருகிறார்கள் என்பதை அரசு உணரவேண்டும். வளர்ந்த நாடுகளைப் பார்த்தாவது நமது கல்விக்கொள்கைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். 

தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களின் மொத்த அறிவும் முதலில் தமிழ்நாட்டுக்குப் பயன்படவேண்டும் பிறகு உலகத்துக்குப் பயன்படவேண்டும். அதுபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்களின் அறிவும் முதலில் அந்தந்த மாநிலத்துக்குப் பயன்பட்டுப் பிறகு உலகத்துக்குப் பயன்பட்டால் நம் இந்தியா உலகநாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கும் என்பது எனது எண்ணம். 

உலக நாடுகளிலேயே மக்கள்வளம் அதிகமாகக் கொண்ட நம் நாட்டின் மக்கள் வளத்தை அரசு மிகசரியாகப் பயன்படுத்தினால் நாம் எங்கோ போய்விடுவோம். 

இதை உணராமல் தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் நாம் எங்கோ போய்விடுவோம்!




15 கருத்துகள்:

  1. எங்கேயோ போய் விட்டதை முடிவு படம் 'தெளிவாக' சொல்கிறது...!

    பதிலளிநீக்கு
  2. கொடுமையான விஷயம்தான்

    கல்விக்கென்று சரியான பாதையை அரசுகள் வகுக்கவேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் முனைவரே! ஆதங்கமாக இருக்கிறது..புரிந்துகொள்ள வேண்டியவர்கள் வேண்டுமென்றே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்களே!!! :(

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் முனைவரே! பள்ளிகளை விட டாஸ் மாக் கடைகளே அதிகம்!

    பதிலளிநீக்கு
  5. கொடுமையான விஷயம்தான்...
    பெரியசாமி ஹோட்டலுக்குப் போயிடலாம் போல இங்க குப்பை கொட்டுறதுக்கு....

    பதிலளிநீக்கு
  6. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. உண்மையான கருத்துக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் அப்பா.. நன்றி

    பதிலளிநீக்கு