Friday, May 2, 2014

பெரிதே உலகம் ! பேணுநர் பலரே!நான்கு சுவர்களுக்குள் நம் உலகம் அடங்கிவிடுகிறது. அது வீட்டுக்கு உள்ளேயோ, வெளியோ நாம் படிக்கும், பணிபுரியும் இடமாகவோ அமைகிறது. இன்று இணையம் வந்து உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது என பெருமிதமடைந்தாலும், சிந்தித்துப் பார்த்தால் நாம் வாழும் உலகம் மிகவும் சிறியது என்பது புரியவரும்.

நான், எனது குடும்பம், எனது அலுவலகம், எனது ஊர், எனது நாடு, எனது மொழி, என் மக்கள் என இத்தனை படிநிலைகளையும் கடந்து யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உலகமகா சிந்தனையை உணர்ந்தோர், கடைபிடிப்போர், இந்த உலகம் பெரியது என வாழ்வோர் மிகவும் குறைவு.

மூன்றுவகை மனிதர்கள் இந்த உலகில் உள்ளனர்.
·        என் தகுதிக்கு மதிப்பில்லை எனப் புலம்புவோர்!
·        கிடைத்ததுபோதும் என தன்னை தேற்றிக்கொள்வோர்!
·        இந்த உலகம் மிகவும் பெரிது, என் தகுதிக்கு மதிப்பளிப்போர் உலகில் எங்கும் உள்ளார்கள் எனத் தன் தகுதியின் மீது தன்னம்பிக்கை கொண்டோர்!
இதில் மூன்றாவது வகை மனிதர்கள் அரிதானவர்கள். அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, தன்மானம் ஆகிய பண்புகளை ஒன்றாகப் பெற்று வாழ்பவர்கள். இப்பண்புடைய ஒரு புலவரின் தன்மான உணர்வை எடுத்தியம்பும் புறப்பாடலைக் காண்போம்.

ளவெளிமான் என்பவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். வள்ளல்  வெளிமானின் தம்பியாவான். வெளிமான் காலமான பின்னர் இளவெளிமான் அரசனானான். புலவர் பெருஞ்சித்திரனார் இளவெளிமானைக் கண்டு பரிசில் வேண்டினார். அவன் ஏதோ கடமைக்குச் சிறிது பரிசில் கொடுத்தான். அதனைப் பெறப் புலவருக்கு மனமில்லை. பெறாது திரும்ப முடிவெடுத்தபோது பாடிய தன்னம்பிக்கை தரும் பாடலைக் காண்போம்.

எழுக எம் நெஞ்சமே! நாம் செல்வோமாக! தனக்குரிய இரை கிடைக்காதபோதும் மன எழுச்சி குறையாமல் இரைதேடும் யாளியைப் போன்று பரிசிலருக்கு மன ஊக்கம் வேண்டும்.
நன்கு கனிந்துவராத பழத்திற்காகக் கவலைப்படுவார் இங்கில்லை!

நீர்ப் பருகுவது போன்ற வேட்கையுடன் புலவரை வரவேற்றிருக்க வேண்டும்! முகம் மலர்ந்து பரிசில் தருதல் வேண்டும்!
அருகில் இருக்கக் கண்டும் அறியாதவன் போலப் பரிசில் தந்தால் தகுதியில்லாதவர்களும், முயற்சியில்லாதவர்களும் மட்டுமே விரும்பி ஏற்பார்கள்
பரிசில் நல்கும் உள்ளம் அவனுக்கு இல்லை.
உலகம் பெரிது. தகுதியுடையவர்களை விரும்பி வரவேற்போரும் பலராவர்.

பாடல் இதோ..
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்வழி,
அருகில் கண்டும் அறியார் போல,
அகம் நக வாரா முகன் அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர்?
'
வருக' என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே. (புறநானூறு 207)

தொடர்புடைய இடுகை


எத்திசைச் செலினும் சோறே! 


8 comments:

 1. புலவர்கள் அரசர்கள் பற்றி அறிந்துக்கோண்டேன் . மிக சுவராசியமாய் இருக்கிறது. பாடல் வரிகள் தேடி கொடுத்தமைக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 2. நல்லதொரு பகிர்வு அய்யா...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 3. சிறந்த இலக்கியப் பகிர்வு - அதை
  நான் விரும்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 4. பாடும் பாடித் தொலையும் என்று வடிவேலு 23 ம் புலிகேசியில் சொல்வது போல அந்தக் காலத்திலும் புலவரை மதிக்காத அரசர்கள் இருந்திருக்கிறார்கள் போலிருகிறது.
  ஒரு சங்கப் பாடலை சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete

உள்ளடக்கம்

1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பழமொழி பழைய வெண்பா பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு யுடியுப் வலைச்சரம் ஆசிரியர் பணி. வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து