Saturday, May 3, 2014

பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே பலரும் அறிந்திருப்பார்கள். பல விழாக்களிலும் விழாக்களைத் தொடங்க மேற்கண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையோ, கடவுள் வாழ்த்துப் பாடல்களையோ பாடி விழாவைத் தொடங்குவர். 

லரும் அறியாத, சமயச் சார்பற்ற, தமிழின் பழமையையும், பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல் ஏதாவது சொல்லுங்களேன் என்று என்னிடம் கேட்போருக்கு நான் பரிந்துரை செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதுதான். இதனை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பாடியுள்ளார். இப்பாடல் கனிச்சாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.


தமிழ்த் தாய் வாழ்த்து

********************

அன்னை மொழியே

      அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
      முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
      கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
      மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே!

      திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே!

      எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
     மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
     முடிதாழ வாழ்த்துவமே!

சிந்தா மணிச்சுடரே!

       செங்கை செறிவளையே!

தந்த வடமொழிக்கும்

       தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
      சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
      மூத்த சுமேரியத்தார்

செந்திரு நாவில்

     சிரித்த இளங்கன்னீ !

சிந்துங் கலைவடிவே !

     சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
      நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
      வாழ்த்தி வணங்குவமே

                      
   - பாவலரேறு  பெருஞ்சித்திரனார்

11 கருத்துகள்:

 1. சிறப்பான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்... நன்றி ஐயா...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே

   Delete
 2. அருமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மிகவும் ரசித்துப் படித்தேன்
  பகிர்வுக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 3. கனிச்சாறென இனிக்கும் கவிச்சாறு. தமிழின், தமிழ்மரபின் சிறப்புகளை இனிதே எடுத்தியம்பும் பாடல் வரிகளில் மனம் பறிகொடுத்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்மா.

   Delete
 4. அற்புதமான பாடல். தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைவதற்கு முழுத் தகுதி உடைய பாடல்தான்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே

   Delete
 5. பாடும்போது மகிழ்வாய் உள்ளது.
  பெருஞ்சித்திரனார் அய்யா அவர்களின் 72 வது நினைவுநாள் சென்றவாரம் நடந்த விழாவில் பங்கேற்றபோது இன்னும் நிறைய அறிந்துகொண்டேன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே

   Delete
 6. சிறந்த 'தமிழ்த் தாய் வாழ்த்து' பா அறிமுகம்.
  பாராட்டுக்கள் ஐயா!

  ReplyDelete

உள்ளடக்கம்

1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் அறிவிப்பு ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 உன்னையறிந்தால் உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) உளவியல் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கதை கருத்தரங்க அறிவிப்பு கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை சிலேடை சென் கதைகள் சொல்புதிது தன்னம்பிக்கை தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொன்மம் தொல்காப்பியம் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நற்றிணை நல்வழி நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிற்றுப்பத்து பழமொழி பழைய வெண்பா பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பிள்ளைத்தமிழ் புதிர் புறத்துறைகள் புறநானூறு புள்ளிவிவரங்கள் புவிவெப்பமயமாதல் பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு யுடியுப் வலைச்சரம் ஆசிரியர் பணி. வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து