விலைகொடுத்து
வாங்கமுடியாது!
பட்டத்தை
விலைகொடுத்து வாங்கலாம்!
அறிவை
விலைகொடுத்து வாங்கமுடியாது!
உழைப்பை
விலைகொடுத்து வாங்கலாம்!
திறமையை
விலைகொடுத்து வாங்கமுடியாது!
பதவியை
விலைகொடுத்து வாங்கலாம்!
மதிப்பை
விலைகொடுத்து வாங்கமுடியாது!
நூலை
விலைகொடுத்து வாங்கலாம்!
ஆர்வத்தை
விலைகொடுத்து வாங்கமுடியாது!
மருந்தை
விலைகொடுத்து வாங்கலாம்!
உடல்நலத்தை
விலைகொடுத்து வாங்கமுடியாது!
கடிகாரத்தை
விலைகொடுத்து வாங்கலாம்!
நேரத்தை
விலைகொடுத்து வாங்கமுடியாது!
ஓட்டை
விலைகொடுத்து வாங்கலாம்!
மக்கள்
நம்பிக்கையை விலைகொடுத்து வாங்கமுடியாது!
ஊடகங்களை
விலைகொடுத்து வாங்கலாம்!
உண்மையை
விலைகொடுத்து வாங்கமுடியாது!
புற
அழகை விலைகொடுத்து வாங்கலாம்!
அக
அழகை விலைகொடுத்து வாங்கமுடியாது!
இப்படி
எதையும் விலைகொடுத்து வாங்கலாம்!
ஆனால்
மனநிறைவை விலைகொடுத்து வாங்கமுடியாது!
விலை கொடுத்து வாங்க முடியாதது!
ReplyDeleteநிலை அறிந்து உணர வேண்டியதே!
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Deleteஆமாம் விலை கொடுத்து வாங்க முடியாதவையை நாம் அடைந்துவிட்டால் எல்லாம் சுகமே...
ReplyDeleteவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Deleteநல்ல பகிர்வு. பாராட்டுகள்.....
ReplyDeleteவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Deleteநூற்றுக்கு நூறு உண்மை.
ReplyDeleteவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Deleteஉண்மை தான் பா.
ReplyDeleteநன்றி