ஞாயிறு, 5 மார்ச், 2017

அறிவை இலவசமாக்கியவர்!

அறிவை இலவசமாக்கியவர்!
285 மொழிகளில் 24 மில்லியன் கட்டுரைகள்!
100,000 முனைப்பான பங்களிப்பாளர்கள்!
அலெக்சா தரவரிசையில் ஆறாவது இடம்!
 365 மில்லியன் வாசகர்கள்!
விளம்பரங்களே இல்லாத சேவை!
நமது தேடல்களுக்கு முதல் பரிந்துரையாகக் கிடைப்பது!
என பல பெருமைகளுக்கும் உரிமையுடையது விக்கிப்பீடியா!
இதை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸ் அவா்கள் பொருளாதாரம் படிக்க கல்லூரிக்குச் சென்றார். பின் ஸ்டாக் எக்ஸேங்கில் வேலைப் பார்த்தார். விரைவில் அதிலிருந்து விலகியவருக்கு நெட்ஸ்கேப் நிறுவனத்திடம் பங்குகள் வாங்கினார். படங்களைத் தேடித்தரும் போமிஸ் எனும் தளத்தை நடத்தினார். அது ஓரளவு லாபம் ஈட்டித்தந்தது. தொடர்ந்து ஜிம்மி வேல்ஸ் நுபீடியா எனும் தளத்தை தொடங்கி அதில் அறிவுபூர்வமான கட்டுரைகளை வெளியிட்டார்,எதிர்பார்த்த அளவுக்கு அந்தத் தளத்துக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில்,
     ஜிம்மிக்கு ஒரு சிந்தனை தோன்றியது இந்தத் தளத்தை நாம் ஏன் பொதுவான திறந்த செயல்பாட்டுக்குக் கொண்டுசெல்லக்கூடாது என்று, இந்த சிந்தனை அவர் வாழ்வில் மட்டுமல்ல இணைய வரலாற்றிலும் திருப்புமுனையாக அமைந்தது.
     யார் வேண்டுமானாலும், எழுதலாம், திருத்தலாம், பார்வையிடலாம் என்ற வசதிகளுடன் அறிமுகமானது விக்கிப்பீடியா. காப்புரிமை என்ற பெயரில் தம் படைப்புகளுக்கு ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கும் காலத்தில் “ஒட்டுமொத்த மனித அறிவும் எல்லா மனிதருக்கும் இலவசமாக போய் சேர வேண்டும்”என்று கனவு கண்ட ஜிம்மி வேல்ஸ் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் முன்மாதிரி!

                                          

4 கருத்துகள்:

 1. ஒட்டுமொத்த மனித அறிவும் எல்லா மனிதருக்கும் இலவசமாக போய் சேர வேண்டும்”

  எத்துனை பெரிய பரந்தஉள்ளம்
  போற்றுதலுக்கு உரியவர்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 2. சிறந்த பணியை ஆற்றிய
  அவரைப் பாராட்டாமல்
  இருக்க முடியாதே!

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான சிந்தனை... அனைவருக்கும் பயன் தரும் சிந்தனை...

  பதிலளிநீக்கு