வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 31 மார்ச், 2017

வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!


வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!

என்று என் மாணவிகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு..
என் மாணவிகளுள் தமிழ்மணி முருகன் அவர்கள் எங்கள் கல்லூரியில் வேதியியல்துறை பயின்று வருகிறார். இவருக்கு வானொலி அறிவிப்பாளராகவேண்டும் என்பது பெரிய கனவு.
அதற்கான வாய்ப்புக்காக பலமுறை என்னைச் சந்தித்தார்..
அவருக்கான வாய்ப்பை நான் அவருக்காக உருவாக்கியுள்ளேன்.
இனி நாள்தோறும் ஒரு சிந்தனையை வேர்களைத்தேடி என்னும் யுடியுப் வலைக்காட்சி வழியாக இணையத்தில் பதிவேற்றவுள்ளேன்.
உங்கள் ஊக்குவித்தலுடன் இன்று அவரது குரல் யுடியுப், முகநூல், கட்செவி உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்களிலும் ஒலிக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்மணி முருகன்!
எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்!

7 கருத்துகள்:

  1. superb tamil all ur wishes will come true one day.I will pray for that.All the best

    பதிலளிநீக்கு
  2. superb tamil all ur wishes will come true one day.I will pray for that.All the best

    பதிலளிநீக்கு
  3. தமிழ்மணி முருகன் அவர்களின் ஆற்றல்
    எட்டுத் திக்கெங்கும் பரவ வாழ்த்துகள்!

    ஐயா!
    "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன்.
    அதற்கொரு கட்டுரை தாங்களால் ஆக்கி அனுப்பமுடியுமா?
    அதேவேளை தங்கள் மாணவர்களையும் இத்தலைப்பில் கட்டுரை ஆக்கி அனுப்ப உதவுங்கள்.

    முழு விரிப்புமறிய
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கட்டுரையை அனுப்புகிறேன் நண்பரே. மாணவிகளுக்கும் இதுகுறித்து எடுத்துரைக்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
  4. வாவ் அருமை....
    நல்ல குரல் வளம்...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு