புதன், 12 மே, 2010

எண்தேர் செய்யும் தச்சன்.என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின்றவர். (குறள் -771)

படைச்செருக்கு என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் இக்குறளைச் சுட்டிச் செல்கிறார்.

பகைவர்களே, எம் தலைவனை எதிர்த்து அவன் முன்னே நிற்காதீர்கள். அவனை எதிர்த்து நின்றவர்களெல்லோரும் இப்போது நடுகல்லாக நிற்கிறார்கள் என்பதே இதன் பொருளாகும்.

இந்த குறள் சுட்டும் சூழல் போலவே ஔவையார் பாடிய புறப்பாடல்,


களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.


திணை - தும்பை
துறை - தானை மறம்

அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது.


தானை - படை (படைகளின் வலிமையும் வீரமும் கூறுவது தானை மறமாகும்)

பகைவீர்!
போர்க்களம் புகுதலைத் தவிருங்கள்.
போரை எதிர்நோக்கியவனாக எம்மிடத்தும் ஒருவன் உள்ளான்.
அம்மறவன்,
ஒரு நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன்,
ஒரு மாதம் முயன்று செய்த ஓர் தேர்க்காலுக்கு ஒப்பானவன்!


அதனால் அவனை எதிர்ந்து நீங்கள் அழிந்து போகவேண்டாம் என்று “களம் புகல் ஓம்புமின் என்றார்.

இப்பாடலில் அதியமானின் வீரத்தை படைவீரனின் வீரமாகக் கூறியதால் “தானை மறமானது“


பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.


• “தும்பை“ என்னும் புறத்திணை விளக்கப்படுகிறது.

• “தானை மறம்“ என்னும் புறத்துறையின் பொருள் சுட்டப்படுகிறது.

• அதியமானின் வீரமும், ஔவையார் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் இப்பாடல் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

15 கருத்துகள்:

 1. அருமை முனைவரே கலக்குங்கள் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் பாடலை விளக்கும் பாணி மிக அருமை முனைவரே.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  www.thalaivan.com


  You can add the vote button on you blog:

  http://thalaivan.com/page.php?page=blogger

  THANKS

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
  http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 5. குறளும் புறமும் தலைவன் வலிமையை மிகவும் வலிவுடன் சொல்கின்றன.

  பதிலளிநீக்கு