வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 15 டிசம்பர், 2010

ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010
மறக்கமுடியுமா....
ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு முடிந்து ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றால் நம்பமுடியவில்லை.நேற்றுதான் சந்தித்ததுபோல இருக்கிறது


பள்ளிக்கால பழக்கமா..?
கல்லூரி தந்த நட்பா..?
தொப்புள் கொடி உறவா..?

இவையெல்லாவற்றுக்கும் மேலே தமிழ்மொழி தந்த உறவிது..!

தமிழின் இனிமையை,

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில் போற் பேசிடும் மனையாள் = அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் = தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்
.“

என்பார் பாரதிதாசன். இவ்வினிய மொழிதந்த உறவிது அதனால் இவ்வுறவுக்குத் தனிச்சிறப்பு உண்டு.

எழுத்துக்களால் மட்டுமே அறிமுகமான உறவுகளை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சங்கம முயற்சி இணையத்தமிழ் வளர்ச்சியின் அடுத்த படிநிலையாகவே கருதத்தக்கதாகும்.

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.

தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இடுப்பில் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது.

அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
துருப்பிடித்த கத்தியைத் தூர வீசுங்கள்.

தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவுஜீவிகளே!

நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில் யோசிக்கவுமில்லை.
முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல நமது மூத்த மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.

நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.
ஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.


இதோ நாம் தமிழர் என்று கர்வப்பட ஓர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது ஈரோடு வலைப்பதிவர் சங்கமக்குழு..

நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு


தமிழன்பர்கள் அனைவரையும் வருக வருகவென ஈரோடு பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்..

17 கருத்துகள்:

 1. தமிழ்மொழி, பதிவுலகில் தந்த உறவில் மலர்ந்திட்ட நட்"பூ" ............ வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. //நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.
  ஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.//

  Kandippaga...

  Erode pathivar santhippu vettri pera vazhththukkal munaivarey....

  பதிலளிநீக்கு
 3. பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பாராட்டுகள் ஐயா உங்களின் பணி வெற்றியடைய விழைகிறேன் .

  பதிலளிநீக்கு
 5. அன்பின் குணா

  நீங்க கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இடுகைக்கு நன்றி.

  அசத்தல் அழைப்பு......

  பதிலளிநீக்கு
 6. மிக அழகான வெளிப்பாடு!

  பகிர்வுக்கு மிகுந்த நன்றிகள் முனைவரே!

  பதிலளிநீக்கு
 7. வருக வருக என்று எல்லோரையும் வரவேற்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. தகவலுக்கு மிக்க நன்றி...அய்யா..

  பதிலளிநீக்கு
 9. அனைத்தும் மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. இந்த வலைப்பதிவு மிகவும் அருமை

  பதிலளிநீக்கு
 11. வருக வருக என்று எல்லோரையும் வரவேற்கிறோம்.

  பதிலளிநீக்கு