வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

உயிர்களைப் புதுப்பிக்கும் வேதியியல் மாற்றம்!

வாழ்க்கையை அகம், புறம் என வகுத்த மரபல்லவா நம் மரபு!
“களவும் கற்று மற”
என்று களவியலும் - கற்பியலும் வகுத்து
களவு என்னும் காதலுக்கும் ஒரு காலஅளவுண்டு
களவுக் காதல் சில நாட்களில் திருமணம் செய்துகொண்டு கற்புக்காதலாக மாறவேண்டும் என்று சொன்னவர்களல்லவா நம் முன்னோர்.

நான் காதலர் தினம் கொண்டாடுவதைவிட
காதலைத் தினம் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
அதனால் தான் எனது இடுகைகளில் 60 விழுக்காடு காதலைச் சொல்லியிருக்கிறேன்..

காதல் குறித்த எனது சில புரிதல்கள்....



எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் !
எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை - காதல்!

காதலர்கள் மாறலாம் 
காதல் மாறுவதில்லை!

மண்ணில் உயிர்களைப் புதுப்பிக்கும் 
வேதியியல் மாற்றமே காதல்!

உணர்வுக்கும் அறிவுக்கும் 
இடையே நடக்கும் 
போராட்டமே காதல்!

அறிவின் அனுமதியோடு 
வரும் காதலுக்கு வாழ்நாள் அதிகம்!
உணர்ச்சியின் வேகத்தில் குதிக்கும்
காதலுக்கு வாழ்நாள் குறைவுதான்!

பணம் - காதல் என்னும்
 இரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்!

இவ்விரண்டும் சிலர் பின்னால் மட்டுமே ஓடுகின்றன!

காதலிக்கும்போது....

ஐம்புலன்களும் காதலிப்பவர்களுக்கெதிராய் போர்க்கொடி உயர்த்தும்.

 நீ பார்த்ததால் தான் நான் மெலிகிறேன் 
என்று உடல் கண்ணிடம் முறையிடும்!

நீ மெலிவதால் நான் தூக்கம் தொலைந்தேன் 
என்று கண் உடலிடம் எதிர்வாதம் செய்யும்!

சும்மா பேசிக்கிட்டே இருக்காதீங்க 
நீங்க செய்த தவறுக்கு 
என்னை நானே அடித்துக்கொள்கிறேன் 
என தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் இதயம்!

கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் எனக்கு வலியில்லை 
என்று நினைத்துவிட்டீர்களா? 
என்று இந்த சண்டைக்கிடையே பாவமாகக் கேட்கும் மனம்!

என்னடா இது குடியிருக்கலாம்னு வந்தா இந்த வீடு சரியில்லையே நான் வீட்டைவிட்டுப் போறேன் என்று 
உடலிடம் உயிர் சொல்லும்!

நான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா?
நான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்தித்துப் பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.

இது வலியா? சுகமா?

காதலிக்காமலும் சாகக்கூடாது
காதலுக்காகவும் சாகக்கூடாது!

வாழ்ந்துகாட்டனும் அதுதான் காதல்!

தொடர்புடைய இடுகைகள்

29 கருத்துகள்:

  1. எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் !
    எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை - காதல்!

    அருமையான பகிர்வு முனைவரே....

    பதிலளிநீக்கு
  2. super... ethai solvathu enaru theriyavillai... kaathalar thaina vaalththukkal enpathai vida kaathalai virumbum umakku ... roja poonkoththu valangkukiren..

    பதிலளிநீக்கு
  3. sir !
    konnudeenga sir!
    naan padiththa idukaikal ellaam
    innaikku vimarsanam seyya vaarthai illaamal-
    tavikkiren!
    nantru!

    பதிலளிநீக்கு
  4. \\காதலிக்காமலும் சாகக்கூடாது
    காதலுக்காகவும் சாகக்கூடாது!


    வாழ்ந்துகாட்டனும் அதுதான் காதல்!\\

    மிகவும் அழகான கருத்து. தினமொன்று வைத்துக் காதல் செய்யாது, மனமொன்றித் தினமும் காதலித்தால் இவ்(ல்)வாழ்க்கை என்றென்றும் இனிக்குமே.

    இன்றைய பதிவும் தொடர்புள்ள இடுகைகளும் அசத்தல். பாராட்டுகள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  5. காதலுக்காகவும் சாகக் கூடாது, காதலிக்காமலும் சாகக் கூடாது. பணம், காதல் இரண்டின் பின்னாலும் பலர் ஓடுகிறார்கள். இவை இரண்டும் சிலர் பின்னாலேயே ஓடுகிறது. -ரசித்து, வியக்க வைத்த சிறப்பான வரிகள் முனைவரையா! காதல் என்ற உணர்வினை அலசி ஆராய்ந்து நற்கருத்துக்களை வழங்கியுள்ளீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அள்ள அள்ள குறையாத அமுதக் கடலாம் காதல் பற்றிய, வேதியல் மாற்றம் சொல்லும் அருமையான படைப்பினை கொடுத்திருக்கிறீங்க.
    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. காதலிக்காமலும் சாகக்கூடாது
    காதலுக்காகவும் சாகக்கூடாது!...........சட்டமாக்கப் படவேண்டிய வாசம் ........முனைவர் இரா.கு,அவர்களே.....!!

    பதிலளிநீக்கு
  8. //எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் !
    எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை - காதல்!

    //

    அற்புதமான வரிகள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு
  9. அறிவின் அனுமதியோடு
    வரும் காதலுக்கு வாழ்நாள் அதிகம்!
    உணர்ச்சியின் வேகத்தில் குதிக்கும்
    காதலுக்கு வாழ்நாள் குறைவுதான்!

    \\காதலிக்காமலும் சாகக்கூடாது
    காதலுக்காகவும் சாகக்கூடாது!


    நன்றாகச் சொன்னீர் முனைவரே!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. //காதலிக்காமலும் சாகக்கூடாது
    காதலுக்காகவும் சாகக்கூடாது!//

    காதலைப்பற்றி மிக வித்யாசமான, சிறப்பான சிந்தனை.மிகவும் ரசித்தேன்.நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  11. அன்பைப் பற்றி அருமைப் பதிவு ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  12. நான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா?
    நான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்தித்துப் பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.

    இது வலியா? சுகமா?

    அருமையான பதிவு !

    பதிலளிநீக்கு
  13. அன்புன் காதலும் ஒன்றா தன பாலன்

    பதிலளிநீக்கு
  14. அன்பின் குணா - காதலினை அலசி ஆய்ந்து பல பதிவுகள் இட்டமை நன்று - காதலுக்காக சாகக் கூடாது - சரி - காதலிக்காமல் சாகக் கூடாதா - குணா - இது சரியா ? - குறைந்த பட்சம் மனைவியையாவது காதலித்துவிட்டு சாக்லாம் - அப்படியா ? நல்வாழ்த்துகள் குணா - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. Vanakkam gunaaa avarkale. tharpozhuthuthaan ungal thalathirku vanthu padiththen miga arumayaana pathivu.

    ungalin natp vendi intha azhaippu ennai thodarbu kollungal

    facebook: bala.kentz

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு காதல் என்பது ஆண் பெண் இவர்களுக்கு மட்டும் இல்லை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை.

    காதல் இல்லாமல் எதுவும் இல்லை. காமம் கலந்த காதலை விட அன்பு கலந்த காதல் சிறந்தது.

    நம்மை நாமே காதல் செய்து வந்தலே இவ்வுலகமே அழகாக இருக்கும்.

    அன்பை பகிர்ந்து கொள்வோம். வாழ்த்துகள் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு