வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

திருக்குறளின் எதிர்காலம்


கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை
மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று திருக்குறளைப் பெருமையாகச் சொல்வதுண்டு.
 
·         முகநூலில் திருக்குறள் குறித்து நான் கண்ட இரு செய்திகள், திருக்குறளின் எதிர்காலம் குறித்து என்னைச் சிந்திக்கச் செய்வனவாக அமைந்தன.
 
1.       ஆங்கிலவழி  படித்த குமாருக்கு நேர்முகத்தேர்வில், எழுத்துத் தேர்வு. கேள்வி இதுதான். திருவள்ளுவர் பற்றி செய்திகளை எழுதுக. குமாரோ பள்ளிகூடத்துல தமிழே படிக்கலை. என்ன செய்வார்? இருந்தும் எப்படி எழுதுகிறார் என்று பார்க்கலாமா......

1.
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

2.
திருக்குறள் திருவள்ளுவரால் தான் எழுதப்பட்டது.

3.
வள்ளுவர் எழுதியது தான் குறள்.

4.
குறளை எழுதியது வள்ளுவர் தான்.

இது நான்கையும் எழுதிவிட்டு பத்து நிமிடமா காத்திருந்தவருக்கு எதுவும் தோன்றவில்லை...ரொம்ப ரொம்ப யோசித்தர் உடனே முகம் மலர்ந்து ஐந்தாவது கருத்தை எழுதி உடனே தேர்வுத்தாளை நீட்டினார்..அதென்ன 5ஆவது கருத்து..?
*
*
*
*
*
5.
திருவள்ளுவர் ஒரு தமிழ்நாடு பஸ்கம்பெனி ஓனரும் கூட.
என்று எழுதினார். இது கற்பனையாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் இன்றைய தலைமுறை மாணவர்களை எண்ணிப்பார்க்கும்போது இதுவும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது.
 
 1. திருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்துகல்லூரி மாணவியின் சாதனை ! 

    திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் விளக்கும் வகையில், ஒவியங்களாக வரைந்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். சிறுவயது முதலே கல்வியின் மீதும், தமிழ் மொழியின் மீதும் தனக்கு இருந்த ஆர்வமே இந்த முயற்சியை செய்யத் தூண்டியதாகக் கூறுகிறார் கணினி அறிவியலில் இளநிலை படிக்கும் அந்த மாணவி.

விருதுநகர் மாவட்டம் மாணிக்கம் நகரில் வசித்து வரும் சேர்மநாதனின் மகள் ஹேமசௌந்தரி. சிறுவயது முதலே, ஓவியம் வரைவதில் திறன் பெற்றவராய் திகழ்ந்த இவர், தமிழ்ப் பற்றின் காரணமாக, திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்.

இவரது எண்ணங்கள் மூலம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும், வண்ண வண்ண ஒவியங்களாக உயிர் பெற்றுள்ளன. கற்றோருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப தன்னுடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிவதாக கூறுகிறார் இவர்.

21
மீட்டர் நீளமும் ஒரு அடி அகலமும் உள்ள காகிதத்தில், சுமார் 3 வார காலம் இடைவிடாது வரைந்து தன் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் ஹேமசௌந்தரி. தன் முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 1330 திருக்குறளுக்கும் ஒவியங்களால் விளக்கம் அளிக்கும் பணியை தொடங்கியிருக்கிறார் இவர். தங்கள் மகளின் முயற்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாக கூறும் ஹேமசௌந்தரியின் பெற்றோர், அவரது அடுத்த முயற்சியும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

படித்துக் கொண்டிருக்கும் போதே, காலையிலும், மாலையிலும் ஓய்வு நேரத்தில் இத்தகைய சாதனை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்கின்றனர் ஹேமசௌந்தரியின் ஆசிரியர்கள். செய்யுள் வடிவிலான திருக்குறளுக்கு, ஓவியம் மூலம் விளக்கம் கொடுத்திருப்பது வித்தியாசமான முயற்சி என்றும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

கல்வி பயிலும் வயதில் ஏதாவது ஒரு துறையில் சாதனை புரிய வேண்டும் என்று ஒவ்வொரு மாணவரும் கருதுவது உண்டு. பெற்றோர், ஆசிரியர், மற்றும் நண்பர்கள் அளிக்கும் ஊக்கமே, இத்தகைய சாதனை இலக்குகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திண்மையை மாணவர்களுக்கு அளிக்கும் என்பது கல்வியாளர்களின் கருத்து.


இவரைப் போன்ற மாணவர்களைப் பார்க்கும்போது மனதில் நம்பிக்கை பிறக்கிறது. ஹேமசௌந்தரி அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
·         இத்தனை காலமாக செவிவழியாகவும், ஓலைச்சுவடிகளிலும், நூல்களிலும் இருந்துவந்த திருக்குறள், இன்று இணையத்தில் மின்னூலாகவும், ஒலிநூலாகவும், அசைபடமாகவும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. இன்று அலைபேசிகளிலும், பலகைக் கணினிகளிலும் திருக்குறள் ஒலிக்கோப்புகள் உலா வருவதைக் காணும்போது என் மனம் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறது. இன்னும் எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப திருக்குறளை இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்வது நம் கடமை என்பதை நாம் உணர்வோம்.
 • திருக்குறளின் எதிர்காலத்தில் தமிழர்களின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் திருக்குறள் எந்த அளவுக்கு உலகு பரவி செல்வாக்குப் பெருகிறதோ, தமிழரின் பெருமையும் அந்த அளவுக்குச் செல்வாக்குப் பெறும் என்பதை நாம் உணரவேண்டும். 
 • நம் குழந்தைகளுக்கு திருக்குறளின் பெருமைகளை எடுத்துரைப்பதும் அவர்களை வழிநடத்துவதும் நம் கடமை. 

9 கருத்துகள்:

 1. திருக்குறள் வழியாக கதைகளை சொல்லியும் குழந்தைகளிடத்தில் ஆர்வத்தை வளர்க்கலாம்..

  பதிலளிநீக்கு
 2. திருக்குறள் தமிழின் அடையாளம்!
  "விருதுநகர் மாவட்டம் மாணிக்கம் நகரில் வசித்து வரும் சேர்மநாதனின் மகள் ஹேமசௌந்தரி. சிறுவயது முதலே, ஓவியம் வரைவதில் திறன் பெற்றவராய் திகழ்ந்த இவர், தமிழ்ப் பற்றின் காரணமாக, திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்."
  தகவல் அருமையானதாக இருக்கிறது. மாணவிக்கு எமது இனிய வாழ்த்துகள்!!
  இவ்வோவியங்களை தமிழர்களின் வரவேற்பறைகளில் வைத்து அழகு பார்க்கும் பணியைச் செய்திடுவோம்!! வாழ்க வளமுடன்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே தாங்கள் சொல்வதுபோல செய்தால் இளம் தலைமுறையினர் இதுபோல மேலும் குறள் குறித்து ஆக்கபூர்வமாக சிந்திப்பார்கள்.

   நீக்கு
 3. //திருவள்ளுவர் ஒரு தமிழ்நாடு பஸ்கம்பெனி ஓனரும் கூட.//
  இப்படியும் நடக்கலாம்.ஆனால் ஒரு செய்தி.இன்று பஸ்களில் கட்டாயம் திருக்குறளைக் காண முடிகிறது!

  பதிலளிநீக்கு
 4. மாணவிக்கு வாழ்த்துக்கள்...
  திருக்குறள் கேள்விக்கு எனது (குமாரின்) பதில் வருத்தத்தைவிட சிந்திக்கவே வைத்தது.

  இப்ப எல்லா இடத்திலும் இந்தக் கொமாரு ரொம்பப்பாடு படுறான் முனைவரே...
  என் 4 வயது மகன் போனில் பேசினால் தீயா வேலை செய்யணும் கொமாருன்னு சொல்லுறான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே ஊடகங்களின் பிடியிலிருந்து இளம் தலைமுறையினரைக் காப்பது கடினமான வேலையாகவே உள்ளது.

   நீக்கு