புதன், 30 மார்ச், 2016

இயலான் மண்ணில் அயலான் ஆட்சி.தமிழக அரசியலில் நாள்தோறும் நடைபெறும் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது திரைப்படங்களில் கூட இப்படியெல்லாம் காட்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லையே என்றுதான் தோன்றுகிறது. அரசியல்வாதிகளைக் குறைசொல்வதைவிட அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம்மைநாம் தன்மதிப்பீடுசெய்துகொள்ளவேண்டி நிலையில் உள்ளோம் என்பதை நினைவுபடுத்துவதாகவே இவ்விடுகை அமைகிறது.

அரசியல் என்பது கொள்ளையடிப்பது
தேர்தல் என்பது நல்ல கொள்ளையனை மக்களே தேர்ந்தெடுப்பது

என்பதுதான் இன்றைய நிலைப்பாடாகவுள்ளது.
இன்றைய தமிழக அரசியல் நிலையைப் பார்க்கும்போது கவிஞர் காசியானந்தன் அவா்களின் கதைகளுள் காவல் என்ற கதைதான் நினைவுக்கு வந்தது..
விழித்துக்கொள்வோம்.ஊழல் இல்லா தேசத்தை உருவாக்குவோம்.
இலவசங்களை மறுப்போம்
நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்ப்போம்
கட்சிக்கொரு தொலைக்காட்சியும், நாளிதழும் உண்டு என்பதை உணர்வோம்
நடுநிலையான சிந்தனைகளை 
சமூகத்தளங்களில் சுதந்திரமாக எழுதுவோம், அதை பகிா்வோம்.
மறதி நம் தேசிய நோய் என்பதை நினைவில் கொள்வோம்.
இளைஞர்களும், படித்தவா்களும் அரசியலுக்கு வர வழி வகுப்போம்

இவையெல்லாம் நம்மால் இயலாது என்றால்
நம் மண்ணில் அயலான் ஆட்சிதான் நடைபெறும்.

11 கருத்துகள்:

 1. நம் நாட்டில் நிலவும் உண்மை அவலங்களை அழகாக சொன்னீர் ஐயா.அதுவும் தேர்தல் என்பது நல்ல கொள்ளையர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை.இதில் எவ்வளவு உண்மை உள்ளது மேலும் இப்பதிவு ஊழலின் பிறப்பிடத்தின் துவக்கம் என்ன என்பதை சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தது ஐயா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நல்ல பகிர்வு. இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் மக்கள். ஒரு விஷயம் - எல்லோருமே இப்படி இருக்கும் போது யாரைத் தான் தேர்ந்தெடுப்பது எனும் குழப்பமும் உண்டு.

  பதிலளிநீக்கு
 3. உண்மை. அருமையான, அவசியமான பதிவு.

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப சரியா சொன்னீங்க! இங்க இலவசம்ன்னா மக்கள் எல்லாத்தையும் மறந்து ஊழல் பெருச்சாளிகள தலைவராக்கராங்க. இதுல ஊழல ஒழிக்கறது ரொம்ப கஷ்டம். யாரு மனசாட்சிக்கு பயந்து வேலை செய்றாங்க! வெட்கங்கெட்ட மக்கள்..
  `கட்சிக்கொரு தொலைக்காட்சியும், நாளிதழும் உண்டு என்பதை உணர்வோம்`, உண்மைதான் தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் வருவதுதான் உண்மைங்கற நிலைமை..
  இங்க யாரும் தெரியாம தப்பு செய்யறதில்ல, எல்லாரும் தெரிஞ்சுதான் செய்றாங்க!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பரே

   நீக்கு
 5. ஜனநாயக நாடு பணநாயக நாடாகி விட்டது.எத்தனை முறை அடிபட்டாலும் அறிவில் படமாட்டேன் என்கிறதே என்ன செய்ய.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. உண்மைதான் அம்மா. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் கவி வெற்றி செல்வி அம்மா

   நீக்கு