பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
செவ்வாய், 13 மார்ச், 2012
சாலை ஆத்திச்சூடி
Labels:
அனுபவம்,
சமூகம்,
சாலையைக் கடக்கும் பொழுதுகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 11 மார்ச், 2012
வெற்றிதரும் பேச்சுக் கலை (ஆசிரியர்களுக்காக)
·
நான் பலமுறை எண்ணிப்பார்த்திருக்கிறேன்.
வேறு எந்தப் பணிக்காவது நாம்
சென்றிருந்தால் இவ்வளவு மன நிறைவு கிடைத்திருக்குமா? என்று...
·
இளைய தலைமுறையினருடன் கருத்துக்களைப்
பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் மனநிறைவைவிட. நான் சொன்ன சின்னச்சின்னக்
கதைகளும்,பொன்மொழிகளும், சிந்தனைகளும் அவர்களைச் சிந்திக்கச் செய்திருக்கிறது
என்பதை உணரும்போது பெரிதும் நெகிழ்ந்துபோயிருக்கிறேன்.
·
நான் இயல்பாகவே குறைவாகப் பேசக்கூடியவன்.
பேசவேண்டிய சூழலில் மட்டுமே பேசிவந்திருக்கிறேன்.
- இரண்டுகாதுகளையும் ஒரு வாயையும் இயற்கை நமக்குத் தந்தது. நாம் நிறைய கேட்கவேண்டும் குறைவாகப் பேசவேண்டும் என்பதற்காகவே என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வேன்.
- நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பதை எப்போதும் எண்ணிக்கொள்வேன்.
·
மேடை நடுக்கம் ஏற்பட்டபோதெல்லாம், அதை நீக்க..
முதலில்
நமக்கு முன் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் நான மட்டுமே அறிவாளி என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் பேசுவதை அவர்கள்
உற்றுநோக்க ஆரம்பித்தபிறகு...
இங்கு நம்முன்
இருப்பவர்கள் எல்லோருமே பெரிய அறிவாளிகள்
நாம் மட்டும் தான் முட்டாள் என்றே எண்ணி
வந்திருக்கிறேன்.
ஒருமுறை சொன்ன கருத்தையே அடுத்தமுறை சொல்லும்போது இதுஇங்கு தேவையா? என்று சிந்தித்திருக்கிறேன். தேவையென்றால் அதே செய்தியை வேறுமுறையில் சொல்லிவந்திருக்கிறேன்.
ஒருமுறை சொன்ன கருத்தையே அடுத்தமுறை சொல்லும்போது இதுஇங்கு தேவையா? என்று சிந்தித்திருக்கிறேன். தேவையென்றால் அதே செய்தியை வேறுமுறையில் சொல்லிவந்திருக்கிறேன்.
- அவ்வப்போது மாணவர்களிடம் என் நிறைகுறைகள் பற்றி கருத்துரைகளை வாங்கி என்னைத் தன்மதிப்பீடு செய்துகொள்வேன்..
அதில் ஒரு மாணவர் எழுதியிருந்தார்...
ஐயா.. உங்கள் வகுப்புகளில் நீங்கள் எங்களை வெளியே பார்க்கவிட்டதே இல்லை.. ஒருமணிநேரமும் எங்களை பாடத்தையே உற்றுநோக்கவைத்திருக்கிறீர்கள். எங்கள் சிந்தனை திசைமாறும்போதெல்லாம் எங்களைத் திசைமாற்றி ஏதாவது நகைச்சுவையோ, கதையோ சொல்லி கைதிபோலவே சிறைப்படுத்திவைத்திருக்கிறீர்கள்..
-இப்படிக்கு உங்கள் கைதிகளில் ஒருவன்
என்று எழுதியிருந்தார்.
என்று எழுதியிருந்தார்.
நான் வகுப்பெடுக்கும் முறைபிடித்திருக்கிறது என்று பல மாணவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
மாணவர்களுக்குப் பிடிப்பது போலப் பாடம் எடுப்பது மிகவும் எளிது. ஆனால் அவர்களைத் தேர்ச்சியும் அடையவைக்கவேண்டும் ஒழுக்கத்தையும் கற்றுத்தரவேண்டும் என்ற சூழலில் தான் ஆசிரியர்களுக்கு சுமை அதிகரிக்கிறது.
ஆசிரியருக்கு அடிப்படையானது பேச்சுக்கலை. அதன் நுட்பங்களை நான் அதிகமாகக் கற்றுக்கொண்டது நம்ம வள்ளுவரிடமிருந்துதான்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
திருக்குறள் -100
கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
திருக்குறள் -643
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
திருக்குறள் -645
என்னும் குறள்கள் என்னைப் பெரிதும் மாற்றியிருக்கின்றன.
Labels:
அனுபவம்,
திருக்குறள்,
பழமொழி,
பேச்சுக்கலை,
மாணாக்கர் நகைச்சுவை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 8 மார்ச், 2012
பெண்கள் இல்லாத உலகத்திலே..
பெண்கள் இல்லாத உலகத்திலே..
அம்மா என்ற கடவுளின்
முகவரி தெரியாமல் போயிருக்கும்!
பெண்கள் இல்லாத உலகத்திலே..
காதல் என்ற வேதத்தின்
உட்பொருள் தெரியாமல் போயிருக்கும்!
பெண்கள் இல்லாத உலகத்திலே..
சிரிப்புக்கும் - அழுகைக்கும்
தேவையில்லாமல் போயிருக்கும்!
தொடர்புடைய இடுகைகள்
Labels:
காணொளி,
சிறப்பு இடுகை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திருமண அழைப்பிதழ் மாதிரி
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 6 மார்ச், 2012
வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு!
மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம்
அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம்
அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம்.
அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை.
இது சரியா? தவறா? என்று ஆய்வு செய்யும் முன்னர்...
ஆண் மீது பெண்ணுக்கும் - பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கு இன்றைய அறிவியல் கூறும் வேதியியல் (ஆர்மோன்) விளக்கத்தோடு ஒப்புநோக்கத்தக்கதாக இச்சிந்தனை விளங்குகிறது. இச்சிந்தனை அக்கால மக்களின் அறிவுக்கு எட்டிய வேதியியல் சிந்தனையாகவே எனக்குத் தோன்றுகிறது.
கால காமாகவே பெண்கள் ஆண்களைத்தாக்கப் பயன்படுத்தி வரும்
ஆயுதம் - கண்கள்!
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு (குறள் 120)
என்பார் வள்ளுவர்...
தீயினால் சுட்டபுண்
நாவினால் சுட்டவடு
இவ்விரண்டோடும் ஒப்பு நோக்கத்தக்கதே இந்த வலியும்..
இதோ அடிபட்ட ஒரு ஆணின் புலம்பல்..
கண்களுக்கு மைபோடும் பெண்ணைப் பார்த்து சொல்லப்பட்ட கவிதை..
என்னைக் கொல்வதற்கு
உன் விழிகளே போதுமே
எதற்கு அதில் விசம் தடவுகிறாய்
கவிஞர் மீரா அவர்கள் எழுதிய மறக்கமுடியாத கவிதை
நீ முதல் முறை என்னை
தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்
எங்கே
இன்னொருமுறை பார்..
சீனக் கவிதை ஒன்று..
“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்
முத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு
வீரன் கத்தியால் கொல்லுவான்
ஆனால் இப்பெண்கள் கண்களால்”
என்ன நண்பர்களே இந்தக் கவிதைகளுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை தெரிகிறதா?
இது போன்ற கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது நம்ம வள்ளுவரின் குறள் தான்.
இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.
(குறள்110)
வள்ளுவரின் இந்தக் குறளைப் படிக்கும் போதெல்லம் நினைவுக்கு வருவது..
இந்தக் குறுந்தொகைப் பாடல் தான்.
பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லோரும் அறிய நோய் செய்தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரிஇ வித்திய ஏனல்
குரிஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே!
குறுந்தொகை -72
மள்ளனார்
தலைவியின் நினைவாலேயே வாடும் தலைவனின் உடலில் நிறைய மாற்றங்கள் அதனைக் கண்டு என்ன ஏது? என்று வினவுகிறான் பாங்கன். அதற்குத் தலைவன் சொல்கிறான்..
இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோள்களையும் உடைய பெண்ணொருத்திதான் எனது இந்த நிலைக்குக் காரணம.
அவள் பெரிய மலைப் பகுதியில் குருவிகளை ஓட்டுபவள்..
குளிர்ச்சியைத் தருகின்ற பெரிய கண்களைக் கொண்டவள்..
அவளை நான் காண்கின்றபோது அவள் கண்கள் அழகான தாமரை மலர் போலக் காட்சியளிக்கும்!
அதே நேரம் அவள் என்னைக் காண்கின்ற போது அவள்கண்கள் கொடிய அம்பைப் போலவே என்னைத் தாக்கி வருத்தும்.
அதனால் மலர் போன்ற கண்களால் அம்பு தைத்தது போன்ற நோயினை அவள் எனக்குத்தந்தாள் அதுதான் என் உடலில் இவ்வளவு மாற்றம் என்கிறான் தலைவன்.
இதோ இந்தச் சாயல் கொண்ட திரையிசைப்பாடல்..
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
(நேற்று வரை)
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூமுகம் சிவந்தா போகும்
(நேற்று வரை)
பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு
(நேற்று வரை)
படம் : வாழ்க்கைப்படகு
இசை : எம். எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர் : பிபி சீனிவாஸ்
தொடர்புடைய இடுகைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 2 மார்ச், 2012
சரி சரி சண்டைபோடதீங்கப்பா..
காலையில் கண்விழித்ததிலிருந்து இரவு கண்ணுறங்குவது வரை எத்தனை எத்தனை சண்டைகள்!
சில நேரம் நாம் சண்டையிடுகிறோம்
பிறர் பார்க்கின்றனர்!
பிறர் பார்க்கின்றனர்!
பலநேரம் பிறர் சண்டையிடுகிறார்கள்
நாம் பார்க்கிறோம்!
இப்படி நடக்கும் எல்லா சண்டைகளுக்கும் நானறிந்த காரணம் - சுயநலம்!நாம் பார்க்கிறோம்!
சுயநலமின்றி வாழ நாம் என்ன மரங்களா? என்று சிலர் கேட்கலாம்.
மரங்கள் கூட தாம் வாழத் தேவையான தண்ணீரை சுயநலத்தோடு உறிஞ்சத்தானே செய்கிறது என்று சிலர் சொல்லாம்..
எந்த மரங்களும் தம் தேவைக்கு அதிகமாக ஒருதுளி நீரைக்கூட உறிஞ்சுவதில்லையே என்பதுதான் என் பார்வையாக உள்ளது.
இப்போதெல்லாம் நடைபெறும் ஊழல்களைப் பாருங்கள் ஆயிரம் கோடி.. இரண்டாயிரம் கோடி என்று..
சுயநலம் பேராசையாக மாறிப்போனதால்..
தான் வாழ யாரை வேண்டுமானலும் மிதித்துவிட்டுச் செல்லலாம் என்பது தான் ஒவ்வொருவரும் பின்பற்றும் கொள்கைகளாக இருக்கின்றன.
இன்று ஒவ்வொருவர் வீட்டுக்கு முன்னாலும் விலையுயர்ந்த வண்டிகள் நிற்கின்றன சாலைகள் தான் பல்லைக் காட்டி சிரித்துக்கொண்டிருக்கின்றன.
கதை ஒன்று..
ஒரு நாள் உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்த வயிற்றைப் பற்றிக் குறைபேசிக்கொண்டிருந்தன.
என்னடா இது நாமெல்லாம் உழைக்க இந்த வயிறு மட்டும் எந்த வேலையும் செய்யாமல் உண்டு உண்டு வயிறுவளர்க்கிறதே என்று..
இந்த சத்தம் வயிற்றுக்கும் கேட்டது.
வயிறு உடல் உறுப்புகளைப் பார்த்துக் கேட்டது..
'ஏம்பா என்னை எல்லோரும் சேர்ந்து திட்டுறீங்க? நான் என்ன எந்த வேலையுமே செய்யாமலா இருக்கிறேன்..
நானும்தான் வேலை செய்கிறேன்என்றது..
அதற்கு எல்லா உறுப்புகளும் ஒன்று சேர்ந்து சத்தமிட்டன..
ஆமாமா... நீயும் உழைப்பது உன் தொப்பையைப் பார்த்தாலே தெரியுதே என்று..
நாங்களெல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம் என்றது தொண்டை
என்ன என்று அச்சத்தோடு கேட்டது வயிறு..
உதடுகள் பேசின..
இனிமேல் நாங்களும் உனக்காக உழைக்கப்போவதில்லை! நீ எப்படி வயிறு வளர்க்கிறாய் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம் என்று..
வயிறு எதுவும் பேசவில்லை... அமைதியாக இருந்தது.
நாட்கள் சில சென்றன..
உணவு உட்கொள்ளாததால் ...
கண்கள் ஒளி மங்கின!
நாக்கும் உதடுகள் உலர்ந்து போயின!
கைகளும் கால்களும் அசைய மறுத்தன!
சீரண உறுப்புகள் உல்லாம் மரண ஓலமிட்டன!
வயிறு மட்டும் உறுப்புகளைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்தது!
நாக்கும் உதடுகள் உலர்ந்து போயின!
கைகளும் கால்களும் அசைய மறுத்தன!
சீரண உறுப்புகள் உல்லாம் மரண ஓலமிட்டன!
வயிறு மட்டும் உறுப்புகளைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்தது!
அப்போது மூளை வந்து கட்டளையிட்டது..
'சரி சரி சண்டை போடாதீங்கப்பா'என்று
இந்தக் கதை சுட்டும் வயிறு தான் நம் நாடு
உடல் உறுப்புகள் தான் நாம் என்று புரிந்துகொண்டால் சண்டைகளுக்கான காரணம் என்ன என்பது விளங்கும்...
தொடர்புடைய இடுகை
Labels:
அனுபவம்,
உளவியல்,
வாழ்வியல் நுட்பங்கள்,
வேடிக்கை மனிதர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




