வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

முட்டாள் கழுதை



கோபம் சில நேரங்களில் வரம்!
பல நேரங்களில் சாபம்!

கோபம் தீப்பெட்டியிலிருக்கும் தீக்குச்சி போல!
விளக்கையும் ஏற்றலாம்! வீட்டையும் கொளுத்தலாம்!

கோபம் வார்த்தைகளை விதைக்கிறது!
வெறுப்பை அறுவடை செய்கிறது!

கோபத்தை அடக்குபவனே பலமானவன்!

கோபம் பலவீனத்தின் அடையாளம்!

கோபம் மூளைக்கு ஓய்வு கொடுத்து!
நாவுக்கு மட்டும் வேலை கொடுக்கிறது!



சினம், சீற்றம், கதம், வெகுளி என்றெல்லாம் அழைக்கப்படும் சினம் சிலர் வாழ்க்கையை சிக்கலுக்குரியதாக்கிவிடுகிறது.

கோபத்தில் பேசும் வார்த்தைகள் பொருளற்றவை என்று தெரிந்தாலும் கோபம் வந்துவிட்டால் அதன் கட்டுப்பாட்டிலேயே நாம் மாறிப்போய்விடுகிறோம்.

ஒருவர் நம்மைப் பார்த்து நாயே என்று திட்டினால் பதிலுக்கு அவரை ஏதாவது கழுதையே, குரங்கே என்று திட்டினால்தான் மனம் அடங்குகிறது.

நாம் நாயா? மனிதரா? என்று நாம் சிந்திக்கும் வாய்ப்பை நம் மனம் நமக்கு ஒரே ஒரு நொடிப் பொழுதுதான் தருகிறது. அந்த மணித்துளி சிந்தித்து நாம் நாயல்ல மனிதர் தான் என்பதை உணர்ந்தால் கோபம் நமக்கு அடிமையாகிறது. சிந்திக்கத் தவறும் போது கோபத்துக்கு நாம் அடிமையாகிவிடுகிறோம்.

முல்லாவின் கதை.

முல்லா சிறந்த அறிவாளி என்று ஊர் முழுக்க பேசி வந்தார்கள். அதைக் கேட்ட அறிவாளி ஒருவருக்கு முல்லா மீது பொறாமைத் தீ பற்றிக்கொண்டது. முல்லா ஒரு முட்டாள் என்று ஊர் மக்கள் பேசவேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் முல்லா என்ன சொன்னாலும் அதற்கு எதிர்வாதம் செய்வதே வழக்கமாகக் கொண்டுவந்தார்.

முல்லாவிடமே பேசி ஒருநாள் விவாதம் வைத்துக்கொள்ளலாம் நீ அறிவாளியா? நான் அறிவாளியா? என்பதை மக்கள் முன்பு விவாதித்து முடிவுக்கு வரலாமா என்று கேட்டார் அறிவாளி. அதற்கு முல்லாவும் இசைந்தார்.

குறிப்பிட்ட நாளன்று அறிவாளி வந்து மக்கள் முன்னிலையில் காத்திருந்தார். விவாதம் என்பதையே மறந்த முல்லாவும் வேறு ஏதோ வேலையாகப் போய்விட்டார்.

காத்திருந்து நொந்துபோன அறிவாளி முல்லாவின் வீட்டுக்கே போனார். அங்கு முல்லாவின் மனைவிதான் இருந்தார். தன் கோபம் குறையாத அறிவாளி முல்லாவின் வீட்டுச் சுவரில் “முட்டாள் கழுதை“ என்று பெரிய எழுத்தில் எழுதிவிட்டு முல்லாவைத் திட்டிய மன நிறைவுடன் திரும்பி வந்தார்.

வீடு திரும்பிய முல்லா மனைவியிடம் நடந்தவை கேட்டு உடனடியாக அறிவாளியின் வீட்டுக்குச் சென்றார். முல்லா வருவதைக் கண்ட அறிவாளியோ முல்லா சண்டைக்குத்தான் வருகிறார் என்று தானும் சண்டைக்குத் தயாரானார்.
முல்லா அந்த அறிவாளியிடம்....

ஐயா மன்னிக்கவேண்டும் நான் தங்களிடம் விவாதத்துக்கு வருவதாகச் சொன்னதை மறந்துவிட்டேன். நான் வீடு திரும்பியபோதுதான் தங்கள் பெயரை நீங்கள் என் வீட்டு்ச்சுவரில் எழுதியதைப் பார்த்துத்தான் நினைவு வந்தது.அதனால் தான் ஓடோடி வந்தேன் என்றாராம்.

அறிவாளிக்கு முல்லா சண்டைக்கு வந்திருக்கிறாரா? சமாதானத்துக்கு வந்திருக்கிறாரா? என்பதையே புரிந்துகொள்ள இயலவில்லை.

18 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஹா,ஹா,ஹா.... முல்லா கதை, நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டது.

    பதிலளிநீக்கு
  3. எதையும் நாம் ஏற்றுக்கொண்டால் தான் நமதாகின்றது. பழிச்சொல்லும் அப்படித்தான். . . நல்ல படைப்பு. . .

    பதிலளிநீக்கு
  4. மாப்ள அழகா புரிய வச்சதுக்கு நன்றிய்யா.....பல நேரங்களில் கோபம் தான் நல்ல விஷயங்களை எடுத்தெறிந்து விடுகிறது......பகிர்வுக்கு நன்றிய்யா மாப்ள

    பதிலளிநீக்கு
  5. முட்டாள் க்ழுதை கழுதை மேல் அமர்ந்திருப்பதா?
    மனிதனைச் சுமந்து கொண்டிருப்பதா?


    முல்லாகதை அருமை.

    பதிலளிநீக்கு
  6. ''..ஐயா மன்னிக்கவேண்டும் நான் தங்களிடம் விவாதத்துக்கு வருவதாகச் சொன்னதை மறந்துவிட்டேன். நான் வீடு திரும்பியபோதுதான் தங்கள் பெயரை நீங்கள் என் வீட்டு்ச்சுவரில் எழுதியதைப் பார்த்துத்தான் நினைவு ...'''
    விழுந்து விழுந்து சிரித்து விட்டேன்..இரவு 11.11க்கு வெளியே இருந்து வந்து வாசித்தேன். நன்றி.அந்திமாலை எனது ஆக்கங்களை எடுத்துப் பிரசுரிக்கிறது. வேதா இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  7. தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரணவன்.

    பதிலளிநீக்கு