வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

எதிர்பாராத பதில்கள்!!


சிலபதில்கள் நம்மைச் சிரிக்கவைக்கும்!
சில பதில்கள் நம்மைச் சிந்திக்கவைக்கும்!

என் பார்வையில் சில பதில்கள்...
கையெழுத்து

மகன் – அப்பா உங்களால இருட்டுல கையெழுத்துப் போடமுடியுமா?
அப்பா – ஓ முடியுமே
மகன் – எங்க நான் மின்விளக்கை நிறுத்துகிறேன் நீங்க கையெழுத்து போடுங்க பார்ப்போம்
அப்பா – எதுலடா?
மகன் – என் தரச் சான்றிதழில் தான்!!!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-
அதிகம் பயன்படும் புத்தகம்

ஆசிரியர் – எந்த புத்தகம் உன் வாழ்க்கையில் உனக்குப்பெரிதும் பயன்படுகிறது..?
மாணவன் – எங்க அப்பாவோட காசோலைப் (செக்) புத்தகம் தான்.
ஆசிரியர் – !

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

அழுகை!


வினாத் தாளைப் பார்த்து அழும் மாணவனிடம் அவன் நண்பன் சொல்கிறான்....
டேய்!
வினாத்தாளைப் பார்த்து நீ ஏன்டா அழுதுட்டு இருக்க?
நம்ம வினாத்தாளைப் பார்த்து அழுதா அது கேவலம்!

நம்ம எழுதற விடைத்தாளைப் பார்த்து ஆசிரியர் அழனும் அதுதான்டா சாதனை!!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-மூளை.


மேதாவி - உங்க வீடு ரொம்ப அழகா இருக்கே. எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டினீங்க?

அதிமேதாவி - என் மூளையை வைச்சுதான்!

மேதாவி - களிமண்ணாலயா இவ்வளவு பெரிய வீடு கட்டினீங்க
ரொம்ப வியப்பா இருக்கே.

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-


பார்வை
கண் பார்வையற்ற ஒருவன் நீண்ட நேரமாகப் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். தனக்கு அருகாமையில் இருந்த பலகையில் “கண் தெரியாத எனக்கு உதவுங்கள்“ என்று எழுதப்பட்டிருந்தது.

பலரும் பார்த்துச் சென்றனர். சிலர் மட்டுமே பிச்சையிட்டனர்.

அந்தவழியே சென்ற ஒருவர். அந்தப் பிச்சைக்காரனின் பலகையில் இருந்ததை அழித்தார். பின் ஏதோ எழுதிச் சென்றான். அதிலிருந்து அந்த வழியே சென்ற ஒவ்வொவரும் நிறைய பணம் போட ஆரம்பித்தனர்.

அவன் அப்படி என்ன தான் பலகையில் எழுதியிருப்பான்...

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..
உங்களைப் பார்க்கும் வாய்ப்புதான் என் கண்களுக்கு இல்லை!“


-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

பரிசு


அக்கா – ஏன்டா தம்பி பாட்டியோட பிறந்தநாளுக்கு அவங்களுக்குக் கால்ப்பந்து வாங்கிக் கொடுத்த..?

தம்பி – என்னோட பிறந்த நாளைக்கு அவங்க எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க தெரியுமா..!!
அதான் எனக்குப் பயன்படாதத அவங்க கொடுத்ததால, அவங்களுக்குப் பயன்படாதத நான் அவங்களுக்குப் பரிசா கொடுத்தேன்.

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

தவறு

நாம் தவறு செய்யும் போதெல்லாம்
நல்ல வழக்குரைஞர்களாக இருக்கிறோம்!

அடுத்தவர் அதே தவறைச் செய்யும் போதெல்லாம்
நல்ல நீதிபதியாக இருக்கிறோம்!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

பொய்
ஆண்கள் எப்போது பொய் சொல்லமாட்டார்கள்?
பெண்கள் கேள்வி கேட்காமல் இருக்கும் வரை!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

மரம்

ஒரு மரத்திலிருந்து ஒரு மில்லியன்
தீக்குச்சிகளைத் உருவாக்கலாம்!
ஒரு தீக்குச்சியால்
ஒரு மில்லியன் மரங்களையும் எரிக்கலாம்!

நம்மிடமிருக்கும் சிறிய எதிர்மறை எண்ணங்கள் கூட
நம்மிடமிருக்கும் பெரிய நேர்மறை எண்ணங்களை அழித்துவிடும்!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-


வழிகாட்டுதல்

நல்ல வழிகாட்டுதல் என்பது, கொடிய இருள் நிறைந்த காட்டில் கையில் கிடைத்த சிறு விளக்கு போன்றது
கையில் இருக்கும் விளக்கு காடு முழுவதும் ஒளி தராவிட்டாலும், அடுத்த அடி வைப்பதற்கான ஒளியையும், பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

56 கருத்துகள்:

 1. நகைக்க நகைச்சுவை...சுவைக்க பல தகவல்கள்... நன்றி குணசீலன்...

  பதிலளிநீக்கு
 2. அழுகை!


  வினாத் தாளைப் பார்த்து அழும் மாணவனிடம் அவன் நண்பன் சொல்கிறான்....
  டேய்!
  வினாத்தாளைப் பார்த்து நீ ஏன்டா அழுதுட்டு இருக்க?
  நம்ம வினாத்தாளைப் பார்த்து அழுதா அது கேவலம்!

  நம்ம எழுதற விடைத்தாளைப் பார்த்து ஆசிரியர் அழனும் அதுதான்டா சாதனை!!
  ...... மிகவும் ரசித்து சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. எல்லா பதிலகளுமே சுவையாக இருக்கு.

  //நம்மிடமிருக்கும் சிறிய எதிர்மறை எண்ணங்கள் கூட
  நம்மிடமிருக்கும் பெரிய நேர்மறை எண்ணங்களை அழித்துவிடும்! //..அருமையான வரிகள்.

  பதிலளிநீக்கு
 4. //அவன் அப்படி என்ன தான் பலகையில் எழுதியிருப்பான்...

  “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..
  உங்களைப் பார்க்கும் வாய்ப்புதான் என் கண்களுக்கு இல்லை!“ //

  எல்லோருக்குமே புகழ்ச்சி பிடிக்கும் என்பதை அழகாக சொல்கிறது. வாழ்த்துக்கள் முனைவரே

  பதிலளிநீக்கு
 5. //ஒரு மரத்திலிருந்து ஒரு மில்லியன்
  தீக்குச்சிகளைத் உருவாக்கலாம்!
  ஒரு தீக்குச்சியால்
  ஒரு மில்லியன் மரங்களையும் எரிக்கலாம்! //

  உருவாக்குவது கடினம், அதை அழிப்பது எளிது. அருமையான கருத்து முனைவரே.

  பதிலளிநீக்கு
 6. //கையில் இருக்கும் விளக்கு காடு முழுவதும் ஒளி தராவிட்டாலும், அடுத்த அடி வைப்பதற்கான ஒளியையும், பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது! //

  கண்டிப்பா நல்ல வழிகாட்டுதல் எல்லோருக்குமே அவசியம் முனைவரே.

  பதிலளிநீக்கு
 7. நகைசுவையும், நல்ல சிந்தனைகளும் - சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

  பதிலளிநீக்கு
 8. பார்வை பற்றி எழுதி இருந்தது
  மனத்தைக் கவர்ந்தது முனைவரே....

  தவறு பற்றி எழுதியிருந்தது
  யதார்த்தமான உண்மை....

  நன்றி முனைவரே.

  தமிழ்மணம் 2

  பதிலளிநீக்கு
 9. குலுங்கி சிரிக்கவைக்கும் நகைச்ச்சுவை
  சிந்தனையை கூர்தீட்டும் அமுதமொழி
  இரண்டு அருமை தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. வெரும் நகைச்சுவையாக இல்லாமல் நல்ல செய்திகளையும் கலந்து அருமையாகக் கொடுத்திருக்கிறிர்கள்,குணசீலன்.

  பதிலளிநீக்கு
 11. காமெடி அனைத்தும் கலக்கல்... சிரித்துக்கொண்டே இருந்தேன்... தொடர்ந்து கலக்குங்கள் தொடர்கிறோம்..

  பதிலளிநீக்கு
 12. நகைச்சுவை மட்டுமில்லாது நல்ல கருத்துகளும் அடங்கிய பகிர்வு.. மிக நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 13. எதிர்பாராத பதில்கள் சிந்திக்கவும் சிரிக்கவும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 14. சிரிக்கவும் , சிந்திக்கவும் தூண்டும் பதிவு ..

  பதிலளிநீக்கு
 15. நகைச்சுவையுடன் சிந்திக்கவும் வைத்தபதிவு. நன்னா
  இருக்கு.

  பதிலளிநீக்கு
 16. நகைச்ச்சுவை + சிந்தனை = அருமை

  பதிலளிநீக்கு
 17. அக்கா – ஏன்டா தம்பி பாட்டியோட பிறந்தநாளுக்கு அவங்களுக்குக் கால்ப்பந்து வாங்கிக் கொடுத்த..?

  தம்பி – என்னோட பிறந்த நாளைக்கு அவங்க எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க தெரியுமா..!!
  அதான் எனக்குப் பயன்படாதத அவங்க கொடுத்ததால, அவங்களுக்குப் பயன்படாதத நான் அவங்களுக்குப் பரிசா கொடுத்தேன்
  >>>>>
  இதுதான் டாப் கிளாஸ். முதல் வருகை மற்றும் பின்னூட்டம் சகோ

  பதிலளிநீக்கு
 18. அக்கா – ஏன்டா தம்பி பாட்டியோட பிறந்தநாளுக்கு அவங்களுக்குக் கால்ப்பந்து வாங்கிக் கொடுத்த..?

  தம்பி – என்னோட பிறந்த நாளைக்கு அவங்க எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க தெரியுமா..!!
  அதான் எனக்குப் பயன்படாதத அவங்க கொடுத்ததால, அவங்களுக்குப் பயன்படாதத நான் அவங்களுக்குப் பரிசா கொடுத்தேன்.
  >>>
  இதுதான் டாப் கிளாஸ். எனது முதல் வருகை மற்றும் முதல் பின்னூட்டம். டைரில குறிச்சு வச்சுக்கோங்க.

  பதிலளிநீக்கு
 19. கையில் இருக்கும் விளக்கு காடு முழுவதும் ஒளி தராவிட்டாலும், அடுத்த அடி வைப்பதற்கான ஒளியையும், பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது! அருமை . . .ரசனையான படைப்பு. . .

  பதிலளிநீக்கு
 20. //வினாத்தாளைப் பார்த்து நீ ஏன்டா அழுதுட்டு இருக்க?
  நம்ம வினாத்தாளைப் பார்த்து அழுதா அது கேவலம்!

  நம்ம எழுதற விடைத்தாளைப் பார்த்து ஆசிரியர் அழனும் அதுதான்டா சாதனை!! //

  இதுதான் அனுபவம் என்பது. நாம் அழுத அனுபவம்.
  ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க குணா. நலமா இருக்கீங்களா? சிறப்புச்செய்திகள் ஏதேனும் உண்டா?

  பதிலளிநீக்கு
 21. பார்வை ,தவறு ,மரம் மூன்று தலைப்பிலும் வந்த கருத்துக்கள் என்னை கவர்ந்தவை .மற்றவையும் அருமை நண்பரே,பகிர்வுக்கு நன்றி.

  தமிழ் மணம் 11

  பதிலளிநீக்கு
 22. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தென்றல்.

  பதிலளிநீக்கு
 23. தங்கள் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி காந்தி.

  பதிலளிநீக்கு
 24. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 25. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரமணி.

  பதிலளிநீக்கு
 26. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரேவரி.

  பதிலளிநீக்கு
 27. நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் ஆதிரா.
  நீண்ட நாட்களுக்குப் பின்னான தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ந்னறி.

  பதிலளிநீக்கு
 28. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி எம்ஆர்.

  பதிலளிநீக்கு