வியாழன், 18 ஆகஸ்ட், 2011

மறக்கமுடியுமா? (மாணாக்கர் கவிதை)


அன்பின் உறவுகளே வாங்க இளம் கவிஞரை வாழ்த்தி வரவேற்போம்.

“எங்கெங்கோ பிறந்து
நாட்கள் பல கடந்து
இங்கொன்றாய் சேர்ந்து
இனிதாய் நட்பு கொண்டோமடா!

வகுப்பில் அடிக்கும் அரட்டை
அயர்ந்துவிடும் குறட்டை
மாற்றிக் கொண்ட சட்டை
மனதில் பதிந்த சுவடடா!

சிலநேரம் அடிதடி
அடுத்தநொடி இணைந்தபடி
நட்பில் மட்டும் ஏன் இப்படி?

பாடம் எடுக்கையில் வேடிக்கை
தேர்வு அறையில் படுக்கை
தோல்வி அடைவது வாடிக்கை
இதுதான்டா வாழ்க்கை!

வீட்டில் ஒரு கையில்
சமைத்த உணவு
கல்லூரியில் பல கைகள்
வைப்பதால் வரும் நிறைவு!

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
தேர்விறுதித் திரையரங்குகள்
நண்பன் வீட்டு விழாக்களில்
இனிமையான சேட்டைகள்
நினைக்க நினைக்க
முகம் மலருமடா!

தேர்வில் துருப்புச் சீட்டெடுத்து
கோழிபோலத் தலையசைத்து
தலைகோதிக் கொண்டே
எழுதியதெல்லாம்
நினைக்க நினைக்க இனிமையடா!

வகுப்புத் தேர்வை வாராவாரம்
நாளை நாளை என்றுதினம்
ஓட்டவைத்த ஓட்டுனனே – உனக்கு
உரிமம் கொடுத்தது யாரடா?

இன்பம் என்பது தேவையடா
இளமைக்கு அது சொந்தமடா
எதிர்காலம் என்றொன்று இருக்குதடா
பின்வரும் துன்பத்தை எண்ணிச் செயல்படடா!

மறக்கமுடியாத நினைவுகள்
துறக்கவிரும்பாத சுகமான சுமைகளாக
என்றும் என் மனதில்!

(ச.கேசவன்
இயற்பியல் - இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு)

44 கருத்துகள்:

 1. அழகான கவிதை..
  கல்லூரி ஞாபகங்களை மீட்கும் அசத்தலான கவிதை,,,
  இளங்கவிஞனுக்கு அன்புடன் பாராட்டுக்கள்...
  பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 2. ///////
  சிலநேரம் அடிதடி
  அடுத்தநொடி இணைந்தபடி
  நட்பில் மட்டும் ஏன் இப்படி?
  /////////

  அப்படி இருந்தால் தான் நட்பு...

  பதிலளிநீக்கு
 3. ///////
  எதிர்காலம் என்றொன்று இருக்குதடா
  பின்வரும் துன்பத்தை எண்ணிச் செயல்படடா!
  /////////

  தற்போதைய இளைஞர்களிடம் எதிர்காலம் குறித்த கவலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வருகிறது...

  பதிலளிநீக்கு
 4. /////
  மறக்கமுடியாத நினைவுகள்
  துறக்கவிரும்பாத சுகமான சுமைகளாக
  என்றும் என் மனதில்!
  /////////


  அவை மடிந்தாலும் மறையாமல் நம் மனதோடு ஒட்டிக்கொண்டிருக்கும்...

  பதிலளிநீக்கு
 5. அழகிய கவிதை....

  வாழ்த்துக்கள்..

  தம்பி கேசவனுக்கும்
  தங்களுக்கும்....

  பதிலளிநீக்கு
 6. மீண்டும் ஒருமுரை என்னை கல்லூரிக்கு அழைத்து சென்றதற்கு நன்றி. வாழ்த்துக்கள் முனைவரே.

  பதிலளிநீக்கு
 7. அருமை அருமை
  எதிர்காலத்தை மனதில்கொண்டு
  நிகழ்காலத்தை மையப்புள்ளி
  ஆக்கிகொள்ளச் சொல்லும்
  மாணவரின் கவிதை அற்புதம்.

  பதிலளிநீக்கு
 8. கவிதை எழுதிய மாணவர் கேசவனுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. நல்லா இருக்கு சார் மன்னிக்கவும் நேற்றைய பதிவை படிக்கவில்லை இப்போ போய் படிச்சுடறேன்.

  பதிலளிநீக்கு
 10. இளம் கவிஞரை வாழ்த்தி வரவேற்போம். இளம் கவிஞரை வாழ்த்தி வரவேற்போம்.

  பதிலளிநீக்கு
 11. மறக்கமுடியாத நினைவுகள்
  துறக்கவிரும்பாத சுகமான சுமைகளாக
  என்றும் என் மனதில்!

  பதிலளிநீக்கு
 12. நல்ல கவிதை வரிகள் ... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. அருமையான கவிதை

  எழுதிய கேசவன் அவர்களுக்கும்

  பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 14. அழகிய கவிதை..தம்பி கேசவனுக்கு
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 15. இளம் கவிஞரை வரவேற்கிறோம்.அருமையான் கல்லூரி நாட்களை நினைவு படுத்தும் கவிதை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும்
  கவிபாடும் என்பார்கள்!

  மாணவருக்குப் பாராட்டு
  அதை
  வெளியிட்டு ஊக்கப் படுத்தும்
  தங்களுக்கும் பாராட்டு

  புலவரெ சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 17. கவிதை மிக அழகு பள்ளி காலங்களை மனதில் கொண்டு வந்தது,,

  பதிலளிநீக்கு
 18. இயற்பியல் இளவல் கேசவன் அவர்களுக்கு எமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு
 19. தேர்வில் துருப்புச் சீட்டெடுத்து
  கோழிபோலத் தலையசைத்து
  தலைகோதிக் கொண்டே
  எழுதியதெல்லாம்
  நினைக்க நினைக்க இனிமையடா!

  நிட்சயமாக இதை மறக்கவே முடியாது
  என்பதுதான் என் கருத்து.ஒவ்வொரு வரிகளிலும் அனுபவம் பேசுவதாக உணரமுடிகிறது.கவிதை அருமையாக உள்ளது .வாழ்த்துக்கள். மிக்க நன்றி பகிர்வுக்கு .என் தளத்தில் ஓர் புரட்சிக் கவிதை உள்ளது முடித்தால் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள் .மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன் நன்றி
  பகிர்வுக்கு........

  பதிலளிநீக்கு
 20. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி காந்தி.

  பதிலளிநீக்கு
 21. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மனோ சாமிநாதன்.

  பதிலளிநீக்கு
 22. கல்லூரி வாழ்க்கை கவிதை வடிவில் , அருமை

  பதிலளிநீக்கு