செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

முடிச்சவிக்கி!முடிச்சவிக்கி என்ற சொல் திட்டுவதற்கு மட்டும் தான் பயன்படவேண்டுமா?

23ஆம் புலிக்கேசி என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி.....
புலவர்: மன்னா! மாமன்னா, நீ ஒரு மாமாமன்னா!
பூமாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாரி!

அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி!

தேடி வரும் வரியவர்க்கு மூடா...........!!
நெடுங்கதவு உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு!
எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு!

மண்ணோடு மண்ணாக்கு!
இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங்காக்கையே!
என்று புகழ்வது போல இகழ்வார். காரணம் கேட்டால்.
1. மாமன்னன் என்றால் பெரிய மன்னன் மாமாமன்னன் என்றால் மன்னர்களுக்கு எல்லாம் பெரிய மன்னர் என்று கூறினேன்.
2. மாரி என்றால் மழை, முல்லைகளிடத்து பெய்யும் மழை என்றேன்.
3. அரசியலில் போடும் சூழ்ச்சியான முடுச்சுகளை அவிழ்ப்பவன் அன்று கூறினேன்.
4. அடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும், பசி என்று ஏழைகளுக்கு அள்ளிக்கொடுகின்ற மூடா நெடுங்கதவு உன் கதவு என்றேன்.
5. எதிரிகளை புண்ணாக்கு என்று சொன்னேன்
6. அண்டம் என்றால் உலகம், காக்கை என்றால் காப்பாற்றுவது, உலகத்தை காப்பாற்றுபவன் என்று சொன்னேன்.
என்று விளக்கம் கூறுவார்.
இன்றைய சூழலில் முடிச்சவிக்கி என்றால் திருடன். முடிச்சில் கட்டிவைத்திருக்கும் பணத்தை அவிழ்ப்பவன் என்று பொருள் கொள்கிறோம்.

கடவுள் உண்டா?
இல்லையா?
என்ற கேள்விக்குப் பதில் தரும் சிந்திக்கவைக்கும் சென்கதை ஒன்று.


ஒரு நாள் புத்தர் காலை நேரத்தில் தம் சீடர்கள் முன்னால், கையில் சிறு துணியுடன் வந்தார்.
கைக்குட்டையைவிடப் சற்றுப் பெரிதாக இருந்தது அந்தத் துணி.
வந்து மேடையில் அமர்ந்து எதுவும் பேசாமல் அத்துணியில் முடிச்சுகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.
சீடர்கள் புத்தரின் வழக்கத்துக்கு மாறான செயலைக் கண்டு திகைத்து நின்றனர்.
ஐந்து முடிச்சுகள் போட்டபின்னர் தலை நிமிர்ந்து பேசினார் புத்தர்..
“நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன். இதை அவிழ்க்கப்போகிறேன். அதற்குமுன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்போகிறேன்.“

1. இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி, முன்பிருந்த துணிதானா? இல்லை வேறு துணியா?

ஆனந்தன் எழுந்தான்..
பெருமானே.. ஒருவகையில் எல்லாம் ஒன்றுதான்.முன்பு இருந்ததும் இப்போது இருப்பதும் ஒன்றுதான். முடிச்சுகள் மட்டுமே வேறுபாடு. ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.அவ்வளவுதான்.
முன்பு இருந்த துணி சுதந்திரமானது. முடிச்சுகள் விழுந்ததும் இதன் சுதந்திரம் போய்விட்டது. இப்போதுள்ள துணி அடிமைப்பட்டுக் கிடக்கிறது. என்றான்.
அதற்குப் புத்தர்...
“ஆம் ஆனந்தா. நீ சொன்னது சரிதான். ஒரு வகையில் ஒரே துணிதான். மற்றொரு வகையில் வேறுபட்டுள்ளது. எல்லோரும் இயல்பில் கடவுள்தான்! முடிச்சுப் போட்டுக்கொண்டு சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு விடுகின்றனர். அதனால் தனித்தனி உலகங்களாக மாறிப்போய்விடுகின்றர். சரி எனது அடுத்த கேள்வி...

2..இந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்யவேண்டும்?
சாரிபுத்தன் எழுந்து...


“குருவே அவற்றை அவிழ்க்க நான் அருகில் வர அனுமதிக்கவேண்டும். முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்கவும் வழியில்லை. முடிச்சுப் போடப்பட்டதற்கான முறையை அறிந்தால் அவிழ்க்க எளிதாக இருக்கும். நெருங்கிப் பார்த்தறியாமல் எதுவும் செய்ய இயலாது. நினைவோடு செய்தால் முடிச்சுகள் எளிமையாக விழும். நினைவின்றி விழும் முடிச்சுகள் மிகவும் சிக்கலானவை.சில நேரம் அவிழ்க்கவே முடியாமல் போய்விடும் என்றான்.
அதற்கு புத்தர்..

“சாரிபுத்தா, நீ மிகவும் சரியாகச் சொன்னாய். அதுதான் வாழ்க்கை. அதுதான் வாழ்க்கையின் சிக்கல்.“ என்றார் புத்தர்.

நம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம்தான். நம்மை அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தடுமாறுகிறோம்.

இப்போது சொல்லுங்கள் நாமெல்லாம் முடிச்சவிக்கிகளா? இல்லையா?

13 கருத்துகள்:

 1. நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. //நம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம்தான். நம்மை அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தடுமாறுகிறோம். ///
  மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க.நன்றி.

  பதிலளிநீக்கு
 3. எதையோ உணர்ந்த உணர்வு குணா..சில முடிச்சுகள் அவிழ்ந்த மாதிரியும் உணர்கிறேன்ன்..சிறந்த பதிவு..

  பதிலளிநீக்கு
 4. வித்தியாசமான பார்வையில் விளக்கங்கள்....

  பதிலளிநீக்கு
 5. இன்று சமுதாயத்தில் தவறுதலாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தைக்கு எளிய கதையின் மூலம் புதிய கோணத்தில் விளக்கம் தந்தமை சித்திக்க வைக்கிறது.

  சங்க இலக்கிய பாடல்கள் எனும் ”வேர்களைத் தேடித் தேடி” தமிழ்ப் பயிரை வளர்க்கும் உங்களுக்கு நன்றிகள் பல.

  தமிழார்வன்.

  பதிலளிநீக்கு
 6. இராஜா
  வே.நடனசபாபதி
  இரத்தினவேல்
  மதுரன்
  சமுத்ரா
  ராம்வி
  தமிழரசி
  சித்ரா
  தமிழார்வன்
  இராதாகிருஷ்ணன்

  கருத்துரை வழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. நல்ல கதை.முடிச்சவிக்கிக்கு இதான் அர்த்தமா!..

  பதிலளிநீக்கு