Wednesday, August 24, 2011

நான் சிரிச்சதால நீ பிழைச்ச!!சினம் நோய்!
சிரிப்பே மருந்து!

அடுத்தவர் செய்யும் தவறுக்கு நாம் ஏன்
நமக்கே தண்டனை கொடுத்துக்கொள்ளவேண்டும்?

துன்பம் வரும் போது சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லுகிறார்!

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது நடைமுறை வாழ்வில் கடைபிடிப்பதில் தான் சிக்கலே இருக்கிறது.

சிரிப்பு மருத்துவம் கூட இப்பல்லாம் பரவலா வந்திருச்சு!
ஆனால் நோயாளிகள் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது!

சங்ககாலக் காட்சி ஒன்று...

சங்ககாலத் தலைவி ஒருத்தி தனக்கு வந்த சினத்தை (கோபம்) எப்படி சிரிப்பாக மாற்றுகிறாள் என்று பாருங்கள்...

தோழி – தலைவி உன் தலைவன் கடமை மறந்தவனாக இருக்கிறான். உன் நினைவே அவனுக்குக் கிடையாது. உன்னை மணம் செய்யும் எண்ணமே அவனுக்குக் கிடையாது..!

தலைவி – தோழி.. நீ விளையாட்டாகப் பேசினாய், சிரிப்புக்காகப் பேசினாய் என்று உன் பேச்சை நான் எடுத்துக்கொண்டதால் நீ பிழைத்தாய்....!
ஒரு வேளை நீ உணர்ந்து உண்மையாகத் தான் சொன்னாய் என்று நான் எடுத்திருந்தால் என்ன நடந்திருக்குமோ எனக்கே தெரியாது..!!!
என்கிறாள்.

பாடல் இதுதான்..


“அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யான் எவன் செய்கோ? என்றி யான் அது
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவை கொல்? நன்னுதல் நீயே“

தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது.

அள்ளூர் நன்முல்லை.
குறுந்தொகை -96.


தலைவியைத் தலைவன் வரைந்து (மணம்) கொள்ளவேண்டித் தோழி தலைவனை இகழ்ந்து கூறினாள்.

தலைவன் மேல் கொண்ட நம்பிக்கை மிகுதியாலும், அன்பின் மிகுதியாலும் தோழியின் கூற்று தலைவிக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

தோழியின் மொழிகள் நகைபொருட்டாயின் தன்னால் ஏற்கத்தக்கனவாயிற்று?
உணர்ந்து கூறியனவாயின் ஒறுத்தலுக்கு (துன்பத்துக்கு) ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டாள்.

அருவி தன்னைச் சார்ந்து வளர்ந்துள்ள வேங்கை மரத்தைக் குறைவின்றிக் காத்து, வளம் பெறச் செய்வது போல தலைவனும் தன்னைப் போற்றுவான். எனத் தலைவி இயற்பட மொழிந்தாள்.

வேங்கைமரம், அருவி தன்னிடம் வந்தவழிப் பயன் கொள்ளுமேயன்றித் தானே அதனிடம் சென்று பயன்கொள்ளாது.
அவ்வருவியைத் தன்னிடம் வரச்செய்தலும் இயலாது.
அதுபோல நம் காதலரும் நம்மை நாடிப் பகலினும் இரவினும் வந்தவழி இன்பம் நுகர்வதல்லது நாமே சென்று பயன்கொள்வதோ அவரை நம்பால்வருவித்தலோ இயலாது எனக் கூறி தோழி இயற்பழித்தனள்.

ஒருகால் பெருகியும் ஒருகால் வற்றியும் வரும் மலையருவி போலத் தலைவனும் வந்தும் வாராமலும் ஒழுகுவான் யாமும் வேங்கைபோல வந்தவழிஇன்பம் துய்த்தும் வாராத வழி ஆற்றியும் இருப்பதல்லது தனித்து ஒன்றும் செய்ய இயலாதவராவோம் எனத் தோழி குறித்தனள்.

எவன் செய்கோ? என்ற வினா தலைவன் தலைவியை மணம் முடிக்க வாராமையால் தோழியின் செயலறவினைப் புலப்படுத்துவதாகும்.

பாடல் வழியே...1. இன்பமும், துன்பமும் நமக்குள் தான் இருக்கிறது!
2. வெறுப்பும், சிரிப்பும் நமக்குள் தான் இருக்கிறது!
3. நட்பும், பகையும் நமக்குள் தான் இருக்கிறது.
4. நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் நமக்குள் தான் இருக்கிறது.
இவற்றில் எதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவும் நம் கையில் தான் இருக்கிறது என்ற வாழ்வியல் உண்மையை அழகுபட மொழிவதாக இப்பாடல் அமைகிறது.

55 comments:

 1. வாழ்வியல் உண்மையை அழகுபட மொழிவதாக பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. //
  நட்பும், பகையும் நமக்குள் தான் இருக்கிறது.
  //
  உண்மையான வரிகள்

  ReplyDelete
 3. அருமையான பதிவு

  ReplyDelete
 4. தமிழ்மணம் முதல் குத்து

  ReplyDelete
 5. எப்பவும் போல சூப்பர்

  ReplyDelete
 6. இலக்கியந்தான் எவ்வளவு இனிமை! எடுத்துரைக்கும் பாங்கு அதைவிடவும் இனிமை!! வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 7. தமிழ்மணம் 4

  சினமும் பொறாமையும் தவிர்த்து
  வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என
  அழகான கட்டுரையின் மூலம் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் முனைவரே.

  ReplyDelete
 8. //வேங்கைமரம், அருவி தன்னிடம் வந்தவழிப் பயன் கொள்ளுமேயன்றித் தானே அதனிடம் சென்று பயன்கொள்ளாது. //

  தலைவியின் தன்னம்பிக்கையை தெரிந்துக்கொள்ள முடிகிறது. அருமையான பதிவு. நன்றி.

  ReplyDelete
 9. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

  ReplyDelete
 10. இனிமையான பாடல், இலக்கிய தரமிக்க விளக்கம்..

  ReplyDelete
 11. (சிரிப்பு மருத்துவம் கூட இப்பல்லாம் .........;)உண்மையான வரிகள்

  ReplyDelete
 12. அருமையான, வாழ்வின் உண்மைகளை விளக்கும் பதிவு,,

  பாராட்டுகள்,,

  ReplyDelete
 13. சங்க காலம்,இக்காலம் என்றில்லாமல் எக்காலமும் நிலைத்திருக்கும் நிஜங்கள்.பகிர்வுக்கு ந்ன்றி

  ReplyDelete
 14. வாழ்கையில் சந்திக்கும் அனைத்தும் நம் கையில் இருக்கிறதாக அருமையான பதிவு..
  தகுந்த விளக்கங்களுடன்...
  அற்புதமான பகிர்வு

  ReplyDelete
 15. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
  என்றார் வள்ளுவர்.
  அதற்கு மருந்து சிரிப்பென்று சொன்னீர்
  நன்று!முனைவரே நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. குறுந்தொகையும், காமத்துபாலும் தவிர ஏதேனும் காதலை அழகாய் சொன்ன தமிழிலக்கியம் உண்டா?
  பதிலை எதிர்பார்த்து..

  ReplyDelete
 17. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 18. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஷாருஜன்.

  ReplyDelete
 19. தங்கள் வருகைக்கும் ஐயம் வினவியமைக்கும் மகிழ்ச்சி கோவி...

  ஏன் காதலை இன்னும் அழகாகச் சொல்லும் இலக்கியங்கள் தமிழில் நிறைய உண்டு..


  அகநானூறு
  நற்றிணை
  கலித்தொகை

  சிற்றிலக்கியங்கள் (உலா,தூது,கலம்பகம்,குறவஞ்சி...)

  காப்பிய இலக்கியங்கள்

  இக்கால இலக்கியங்கள் வரை காதலைச் சொல்லும் இலக்கியங்கள் நிறைய உண்டு நண்பா.

  ReplyDelete
 20. நன்றி நண்பரே.. இலக்கியம் பழக ஆரம்பித்திருக்கும் வணிகவியல் துறை விரிவுரையாளர் நான்..

  ReplyDelete
 21. சினமும் பொறாமையும் தவிர்..அற்புதமான பகிர்வு...

  ReplyDelete
 22. தமிழ் இனிமை அதையும் நயம்பட உரைத்தல் இனிமையோ இனிமை...அற்புதம்...”தீதும் நன்றும் பிறர் தர வாரா”...உண்மை

  ReplyDelete
 23. சிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வுங்க.

  ReplyDelete
 24. பாடல் வழியே எத்தனை செய்திகளைச் சொல்லி விட்டீர்கள்!

  ReplyDelete
 25. யாதார்த்தமாகவும் அதே நேரத்தில் உண்மையையும் சொல்லியுள்ளீர்கள் .பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 26. தமிழ் வாழ்கிறது இங்கே!!

  ReplyDelete
 27. இலக்கியக்காட்சியும் அதற்கேற்ற விளக்கமும் அருமை.

  ReplyDelete
 28. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சென்னைப் பித்தன் ஐயா.

  ReplyDelete
 29. தங்கள் வருகைக்கு நன்றி மைந்தன் சிவா.
  தமிழ் இங்கு வாழ்வதாகத் தாங்கள் சொல்லியிருக்கிறீர்கள்..

  உண்மை என்னெவென்றால் ...

  தமிழ்தான் நண்பா என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது..

  ReplyDelete
 30. வாழ்வியல் உண்மையை அழகுபடக் கூறினீர்கள். சங்க காலத்தை இணைத்து. ரசித்தேன், உள்ளெடுத்தேன். மகிழ்ச்சியும் நன்றியும்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 31. //எதை எப்போது பயன்படுத்தவேண்டுமென்பதும் நம் கையில்தான் இருக்கிறது. //

  மிகமிக உண்மையான வரிகள் .

  ReplyDelete
 32. எல்லாம் நமக்குள் தான் இருக்கிறது... அதை கையாள்வது நம் கையில் என்பதை அருமையான விதத்தில் அழகாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கடம்பவனக் குயில்.

  ReplyDelete
 34. உன்மைதான் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதே தெரியாது இருகின்றனர். அருமை. . .தன் நிலை மாறாது இருந்தால் அதுவே நன்று. . .

  ReplyDelete