Tuesday, August 30, 2011

கல்வி உளவியல்

Photobucket
நிலம் மாறினாலும் நிறம் மாறாத செல்வம் கல்வி.

கற்றவர்களே கண்ணுடையவர்களாக மதிக்கப்படும் காலம் இது.

மனிதனைச் சிந்திக்கச் செய்வது கல்வியின் அடிப்படை நோக்கமாகும்.

தொல்காப்பியரும், பிராய்டும் உளவியலின் முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களாக மதிக்கப்படுகின்றனர்.

இவ்விருவரின் வழியில் நான் மாணவர்களிடம் கற்ற உளவியல் கூறுகள், என்னைப் போன்ற கல்வியாளர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
1. ஆசிரியரின் கண்கள் மாணவர்களைத் தம் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.

2. சில ஆசிரியர்கள் ஆண்கள்பக்கமோ, பெண்கள் பக்கமோ, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பக்கமோ திரும்பி பிற மாணவர்களை நோக்காது பாடம் நடத்துவர். இச்சூழலில் மாணவர்கள் உள்ளத்தால் வகுப்பை விட்டு வெளியே சென்று விடுகின்றனர்.உடல் மட்டுமே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

3. ஆசிரியரின குரல் ஒலி அளவு எல்லா மாணவர்களுக்கும் கேட்குமாறு ஏற்ற இறக்கங்களுடன் இருத்தல் வேண்டும்.

4. ஆசிரியர் தாம் சொல்லவந்த கருத்துக்களை முழுவதும் வெளிப்படுத்த தேவைக்கேற்ப உடல் அசைவு மொழிகளைக் கையாளவேண்டும்.

5. பாடத்தோடு தொடர்புடைய செய்திகளையும் இடையிடையே சொல்ல வேண்டும்.

6. பாடத்தை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திச் உரைக்க வேண்டும்.

7. பெரிய கருத்துக்களையும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளச் செய்வன நகைச்சுவைகளும், சின்னக் கதைகளும் என்பதை ஆசிரியர் மனதில் கொள்ள வேண்டும்.

8. பாடத்திற்கு ஏற்ப கரும்பலகை, பவர்பாயின்ட், ஒலி, காணொளி, கணினியின் துணைகொண்டு விளக்கமுறைகளைக் கையாளவேண்டும்.

9. மாணவர்களிடையே வினாக்களை எழுப்ப வேண்டும். அவர்கள் தவறாகச் சொன்னாலும் அவர்களின் குறைகளை அவர்களுக்குப் புரியவைத்து மீண்டும் சொல்ல ஊக்குவிக்கவேண்டும்.

10. “பாராட்டு“ ஆசிரியர் கையிலிருக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ளவேண்டும்.

11. ஆசிரியர்கள் திட்டுவதாலோ, தண்டனை தருவதாலோ மாணவர்களைத் திருத்திவிடமுடியாது என்பதை உணர்ந்து, அன்பாகப் பேசி அவர்களுக்கு அவர்களின் தவறைப் புரியவைக்க வேண்டும்.

12. மாணவர்கள் மதிப்பெண் வாங்குவதைவிட அப்பாடப் பொருள் குறித்த ஆர்வமும், போதிய அறிவும், படைப்பாக்கத்திறனும் கொண்டவர்களாக உருவாக வேண்டும் என்பதை ஆசிரியர் புரிந்துகொள்ள வேண்டும்.

13. மாணவர்கள் தம் துறை சார்ந்து புதியன படைக்க ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும்.

14. அந்தக் காலத்தில மாணவர்கள் வகுப்பு வேளையில் அலைபேசியை வைத்து குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள், இன்று நவீன தொழில்நுட்பத்துடனான அலைபேசிகளில் முகநூலில் (பேஸ்புக் சாட்) அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையிலிருந்து நாம் அந்த அலைபேசியைப் பறிப்பது எளிது. ஆனால் அதைவிட நம்மை ஏமாற்றி அவர்கள் வகுப்பு வேளையில் அதனைப் பயன்படுத்துவது அதைவிட எளிது. அதனால் காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் அவர்களின் மனநிலையையும் அறிவுத் திறனையும் புரிந்து கொண்டு அவர்களே அதனைப் புறந்தள்ளும் விதமாக புதிய தொழில்நுட்பங்களுடன் பாடம் நடத்த வேண்டும். அச்சூழலில் அவர்களே அந்த அலைபேசிகளைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

15. இவை எல்லாவற்றுக்கும் மேலே மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்க வேண்டிய பெரும் பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

மாணவர்கள் வெள்ளைத் தாள்!
அதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது!!

56 comments:

 1. //மாணவர்கள் வெள்ளைத் தாள்!
  அதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது!! //
  மிக சரியாக சொல்லியிருக்கிரீர்கள்.
  நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. “பாராட்டு“ ஆசிரியர் கையிலிருக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ளவேண்டும். //

  ஊக்கமே அனைத்து விசயத்திலும் ஊக்க சக்தி... அருமை நண்பரே..!

  ReplyDelete
 3. அனுபவத்தால் தாங்கள் கூறும் அருமையான அறிவுரைகள்!

  ReplyDelete
 4. //மாணவர்கள் வெள்ளைத் தாள்!
  அதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது!! //

  //பாராட்டு என்பது ஒரு மிகப் பெரிய ஆயுதம். //

  இரண்டு விஷயங்களும் நூற்றுக்கு நூறு உண்மை.

  ReplyDelete
 5. ஆசிரியருக்கான இலக்கணம் வகுத்திருக்கிரீர்கள்
  அருமை முனைவரே.

  ReplyDelete
 6. இப்படி நடந்தா இந்த மாணவர்களின் நிலை எப்படியிருக்கும் பாருங்க...

  பாவங்க ஆசிரியர்கள்...

  ReplyDelete
 7. நல்ல வளமையான கருத்தும் மற்றும் செய்தியுமாக...

  ReplyDelete
 8. அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் நண்பரே

  பகிர்வுக்கு நன்றி
  தமிழ் மணம் 11

  ReplyDelete
 9. இந்தப் பார்வை, மாணாக்க‌ர்க‌ளுக்கு ஒரு புதிய‌ விருப்ப‌மான ச‌ரியான பாதையை காட்டுகிற‌து.
  அவ‌ர்க‌ளைப் புரித‌ல் மூல‌மே, அவ‌ர்க‌ளுக்கு புதிய‌வ‌ற்றை புரிய‌ வைக்க‌ முடியும். அருமையான யோச‌னைக‌ள்.

  ReplyDelete
 10. அருமையான பகிர்வு நண்பரே..
  மாணவர்கள் மண்ணாங்கட்டி, ஆசிரியர்கள் எப்படி பிசைகிறார்களோ அப்படியே அவர்கள் வெளிப்படுகிறார்கள்.
  ஆசிரியர்கள் தன்டிபவர்களாக மட்டும் இல்லாமல், நல்ல படைப்பாளியாகவும் இருந்தால்தான், உறுதியான மாணவசமூதாயத்தை உருவாக்க முடியும்.
  பகிர்வுக்கு நன்றி நண்பரே..,

  ReplyDelete
 11. //“பாராட்டு“ ஆசிரியர் கையிலிருக்கும் மிகப் பெரிய ஆயுதம் //
  சரியான வார்த்தை. உளவியலாரும் இதையேதான் கூறுகின்றனர். மாணவர்களை எப்படி தன்வசப்படுத்தி பாடத்தை சொல்லிதரவேண்டும் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள். தங்களின் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

  ReplyDelete
 12. தமிழ்10ல் இணைத்துள்ளேன் நண்பரே..

  ReplyDelete
 13. அனுபவத்திலிருந்து அறிந்து தந்த இந்த
  ஆசிரியருக்கான பாடம் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 12

  ReplyDelete
 14. இதுக்கு பேரு தான் அனுபவம் பேசுதுன்னு சொல்லுவாங்க சார்....

  ReplyDelete
 15. இதை என் பேரனிடமும் பேத்தியிடமும் படித்துக் காட்ட வேண்டும்.

  ReplyDelete
 16. உங்கள் வலைப்பதிவின் அகலத்தை அதிகரித்தால் படிப்பதற்கு வசதியாக இருக்கும் ......

  Blogger தரும் புது வசதி - அதிக அகலம்

  ReplyDelete
 17. அற்புதம்! நீங்கள் சொல்வதை என்னுள்(ஆசிரியராக) பொருத்திப் பார்த்தேன்...99.9 சதவீதம் ஆசிரியரின் பணியில் பொருந்தி விட்டேன்..அந்த .1 சதவீதம் என் மாணவ கண்மணிகளிடம் தான் கேட்க வேண்டும்!!!! நிச்சயம் ஏமாற்ற மாட்டார்கள்!

  ReplyDelete
 18. ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டளைகள்.நன்று.

  ReplyDelete
 19. எனக்கு கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார்.அவர் பாடம் நடத்தி யாரும் தோற்றதில்லை.ஒரு கணக்கு ,அடுத்து ஒரு கதை,இல்லாவிட்டால் நகைச்சுவை.எந்த மாணவரும் அவரை மாட்டார்கள்.

  ReplyDelete
 20. --மாணவர்கள் வெள்ளைத் தாள்!
  அதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது--

  மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

  நான் ஒரு வாழைப்பழ சோம்பேறி...(பலாப்பழ சோம்பேறி உண்டான்னு கேக்காதீங்க...)...வீட்டிலே வந்து படிச்சதா சரித்திரமே இல்லை...ஆனாலும் வகுப்பிலே ஆசிரியர் நடத்திறத மட்டும் தான் கவனிப்பேன்...

  அது மட்டுமே என்னை ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு வந்தது...

  ஐன்ஸ்டீனா இருந்தாலும் வாத்தியார்ட்ட தான் அடிப்படை கத்துக்கணும்...

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் முனைவரே...உங்களது இந்த பதிவு விகடனில் Good Blogs வரிசையில்....

  http://www.vikatan.com/article.php?mid=10&sid=277#

  ReplyDelete
 22. 9. மாணவர்களிடையே வினாக்களை எழுப்ப வேண்டும். அவர்கள் தவறாகச் சொன்னாலும் அவர்களின் குறைகளை அவர்களுக்குப் புரியவைத்து மீண்டும் சொல்ல ஊக்குவிக்கவேண்டும்.

  அருமையான தலைப்பில் இன்று வந்த ஆக்கம் மிகவும்
  பயனுள்ள விடயங்களை உணர்த்தி நிற்கின்றது .
  மிக்க நன்றி பகிர்வுக்கு .தமிழ்மணம் 15

  ReplyDelete
 23. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாய உலகம்.

  ReplyDelete
 24. நன்றி சென்னைப் பித்தன்.

  ReplyDelete
 25. கருத்துரைக்கு நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 26. இளம் தலைமுறையினரிடமே கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்த நான்தான் கொடுத்துவைத்தவன் நடனசபாபதி ஐயா.

  ReplyDelete
 27. மிக்க மகி்ழ்சசியாக இருக்கிறது பாலசுப்பிரமணியன் ஐயா.இதுதான் என் எழுத்துக்களுக்கும், சிந்தனைக்கும் கிடைத்த மிகப்பெரிய பரிசாகக் கருதுகிறேன்

  நன்றி.

  ReplyDelete
 28. வருகைக்கு நன்ற ஸ்டாலின்.

  ReplyDelete
 29. தங்கள் மதிப்பீடு மகிழ்ச்சியளிக்கிறது தென்றல்

  ReplyDelete
 30. தங்கள் அறிவுறுத்தலுக்கும்
  மதிப்பீட்டுக்கும் நன்றி சண்முகவேல்.

  ReplyDelete
 31. தங்கள் கருத்துரைக்கும்..

  இளமைவிகடனில் வந்தமையை அறிவுறுத்தியமைக்கும் நன்றி ரெவரி.

  தாங்கள் சொல்லித்தான் இம்மகிழ்வான செய்தியை அறிந்தேன்.

  நன்றி.

  ReplyDelete
 32. கல்வி உளவியல் பற்றி அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். அதனாலேயே அடுத்தது காட்டும் பளிங்குபோல் மாணவர்கள் உண்மை ஆசிரியர்களைப் பிரதிபலித்துக் காட்டுகின்றார்கள். நாம் கற்பிக்கின்ற விடயங்களை பல வருடங்கள் கழித்தும் மறவாமல் அதே போன்று அழகாக ஒரு மாணவனால் விபரிக்க முடிகின்றது என்றால், அதுவே ஆசிரியர் பெற்ற வெற்றியும் மகிழ்ச்சியும். அந்த விதத்தில் அப்பாடம் மனதில் பதிகின்ற வகையில் கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்த அனுபவத்தை நானும் பெற்றேன். வாழ்த்துகள் தொடருங்கள்.

  http://kowsy2010.blogspot.com/2011/06/blog-post_16.html

  ReplyDelete
 33. மிக்க மகிழ்ச்சி சந்திரகௌரி.

  ReplyDelete
 34. மாணவர்கள் என்பவர்கள் சமூகத்தின் முக்கியமானதொரு பிரிவினர் அவ்வாறவர்களுக்கு நல்ல கல்வியினாலேயே நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும்,,

  //மாணவர்கள் வெள்ளைத் தாள்!
  அதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது!!//

  உண்மேயே..

  ReplyDelete
 35. உங்கள் ஒவ்வொரு வழிகாட்டலும் பொன்மொழிகளே..

  விகடனில் குட்பிளாக்காக வந்ததற்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 36. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரியாஷ்

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 37. என் கற்பித்தலில் ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய குணப்பண்புகள் 100 வீதம் இருப்பதனால் எனக்குள் ஆத்ம திருப்தி. இத்தளம் எனக்குப் பல புதுவிடயங்களையும் கற்றுத்தந்தது. இன்னும் உங்கள் சேவை தொடர வேண்டும் முனைவரே! வாழ்க வளமுடன்,வாழ்க நற்றமிழ்!

  ReplyDelete
 38. மறுமொழிக்கு நன்றி நண்ரே

  ReplyDelete
 39. மின்வெட்டால் உங்கள் பதிவுகளை நிறைய படிக்கும் சந்தர்ப்பத்தை இழந்து விடுகிறேன்.
  அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 40. அருமை நண்பரே...வாழ்த்துக்கள்...

  ‪#‎ஆசிரியர்‬-மாணவர் உறவு மேம்பட!
  ஒரு சில ஆசிரியர்கள் வகுப்பறையில் தங்கள் மாணவர்கள் தங்களை பார்த்தாலே
  பயம் என்று கூறுவார்கள்.இதில் எனக்கு உடன்பாடில்லை,
  இன்னும் சிலர் என்னை பார்த்தால் என் மாணவர்களுக்கு
  பயம் கலந்த மாரியாதை என்பார்கள்,இதிலும் எனக்கு உடன்பாடில்லை,
  ஏனென்றால் பயம் கலந்தாலே அது மாரியாதை இல்லை. என்பதால்,
  பயம் என்பது அறியாமையிலிருந்து தோன்றுவது அறியாமையை போக்குவரிடமே அது உருவாகிறது என்றால் யார் அறியாமையில்
  இருக்கிறார்கள்?
  பயம் என்பது கொடிய விலங்குகளிடமும், தனக்கு தீங்கு விளைவிக்கும்
  என்று எதையெல்லாம் மனிதன் நினைகிறானோ அதிலிருந்து வருவதே தவிர
  நம்முடைய அறியாமை என்ற இருளை போக்கும் ஆசிரியர்களிடமே
  அதை மாணவர்கள் உணர்வது என்பது இன்றையை கல்வி முறையின்
  சாபகேடு!
  வகுப்பறை என்பது மாணவர்கள் ஆசிரியர்களை இன்முகத்தோடு வரவேற்கும்
  இடமாக அமையவேண்டுமே தவிர அவர்களின் மனதை புண்படுத்துவராக நினைத்து
  ஒதுங்கிசெல்லும் இடமாகவோ, ஒதுக்கும் இடமாகவோ இருக்ககூடாது!
  மாணவர்களை மதிப்பதில்தான்
  கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது.
  -எமர்சன்
  எங்கும் இருள் என்பது கிடையாது. அறியாமைதான் இருள். அந்த அறியாமை இருளை விரட்ட நாம் உலகமெங்கும் அறிவொளியைப் பாய்ச்சுவோம்!
  - இங்கர்சால்
  கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.
  - பிளேட்டோ
  என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.
  - டொரோதி தெலூஸி
  இந்த பொன்மொழிகளுகேற்ப தங்களை அற்பணிக்கும்
  ஆசிரியர் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்!
  அப்படி இல்லாத பட்சத்தில்
  மாற்றத்திற்கு வித்திடுவோம்!
  ஏற்றத்தை பெறுவோம்!
  இவன்
  உங்கள் வாத்தியார் நண்பன்
  அருள் பி .ஜி

  ReplyDelete