Saturday, October 29, 2011

மழையல்ல பேகன்!நல்லவர் ஒருவர் இருந்தால் அவ்விடத்தில் அவருக்காக எல்லாருக்கும் 
மழைபெய்யும்....
எவ்விடத்தும் ஏற்றத்தாழ்வு பாராது மழை பெய்யும் என்று இலக்கியங்கள் 

சொல்லிச் சென்றுள்ளன. 

ஆயினும் ஏன் இன்னும் நீரில்லாத பாலை நிலங்கள் உள்ளன??


என்ற ஐயம் எனக்கு என்றும் உண்டு..

மேடான நிலத்தில் மழை பொழிந்தால் தங்காதே..
தீயவர் இருக்கும் நிலத்தில் மழை எவ்வாறு பொழியும்..?என தத்துவவியல் அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் ஆயிரம் விளக்கங்கள் சொல்லலாம்.. இருந்தாலும்..

மழையும் இடம் பார்த்துத்தான் பொழியும் என்ற சிந்தனையையும் நாம் முற்றிலும் மறுத்துவிட முடியாது..

மழை போலக் கைமாறு கருதாது கொடுப்பதால் மழையையும் கொடையையும் ஒப்பிட்டு நிறைய புலவர்கள் பாடிச் சென்றுள்ளார்கள்...
அப்படியொரு பாடலை இன்று காண்போம்.

ரு சமயம்பேகனின் கொடைத்தன்மையைப் பற்றி புலவரிடையே ஒரு பேச்சு எழுந்தது. பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததால் அவன் கொடைமடம் மிகுந்தவன் என்றனர். அதனைக் கேட்ட பரணர், பேகன் கொடைமடம் உள்ளாவனாக இருந்தாலும் படைமடம் இல்லாதவன்” என்று பேகனைச் சிறப்பித்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மழையின் சிறப்பு.
வேண்டும் இடம், வேண்டாத இடம் என்று வரையறை செய்யாது எல்லா இடங்களிலும் மழை பொழியும். அம்மழை போல பேகன்  தன்னிடம் பரிசில் பெற வருபவரிடம் ஏற்றத்தாழ்வு பாராது வழங்குவான்.

கொடை மடம்!
கொடுக்கவேண்டும் என்ற சிந்தனை வந்தால் உடனே கொடுத்துவிடவேண்டும் தள்ளிப்போட்டால் நம் மனம் மாறிவிடும். அப்படிக் கொடுத்தவர்களையே வள்ளல்கள் என்றும் கொடைமடமுடையவர்கள் என்றும் நம் முன்னோர் போற்றியுள்ளனர்

வேண்டியவர், வேண்டாதவர், வலியோர், மெலியோர், புதியோர், பழையோர், எனக் கருதாது யாவருக்கும் கொடை வழங்குவதால் பேகனை கொடை மடமுடையவன் என்று போற்றுவர்.

படை மடம்!
நடப்பது போரானாலும் அதிலும் சில எழுதப்படாத விதிமுறைகள் கடைபிடிக்கவேண்டும். அவ்வாறு கடைபிடிக்காவிட்டால் படைமடமுடையவன் என்று இவ்வுலம் இழிவாகப் பேசும்.
அதே நேரம் பேகன் படைமடம் கொண்டவனல்ல!
ஏனென்றால்..
போர்க்களத்தில் புறமுதுகிட்டவர், புண்பட்டவர், மூத்தோர், இளையோர், என போர்புரிய தகுதியற்றவர்களிடம் இந்த பேகன் என்றுமே போர்புரிந்ததில்லை.
அதனால் பேகன் படைமடம் கொண்டவனல்ல என்று புகழ்ந்துரைக்கிறார் புலவர்.

 பாடல் இதோ..

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.

புறநானூறு -142
திணை: பாடாண்ஒருவருடைய புகழ்வலிமைகொடைஅருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழிஇயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


நீரற்ற குளத்தில் நீர் சொரிந்தும்,
அகண்ட வயல்வெளிகளில் பொழிந்தும்,
தேவையான இடத்தில் பெய்யாது களர் நிலத்தும் அளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப் போன்றது பேகனின் கொடைத் தன்மை. காரணமின்றி  ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று கருதப்படலாம். ஆனால்,  மதங்கொண்ட யானைகளையும் வீரக் கழலணிந்த கால்களையும் உடைய பேகன் பிறர் படை வந்து தாக்கிய பொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான்ஆகவேஅவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் படைமடம் கொண்டவன் அல்ல! என்றார் பரணர்.

தமிழ்ச் சொல் அறிவோம்.

1.அறுதல் இல்லாமற் போதல்அற்றுப் போதல்வற்றிப்போதல்
2.உகுத்தல் சொரிதல்.
3. வரை அளவு.
4.கடாம் மத நீர்5.
 கொடை மடம் காரணமின்றி (ஆராயாது)கொடுத்தல்.
6. படைமடம் = அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுதல்மயங்குதல் கலத்தல்தாக்கப்படுதல்.


பாடல் வழியே..

1. பேகனின் கொடைத்தன்மை மழையோடு ஒப்பிட்டு உரைக்கப்படுகிறது.

2. கொடை மடம் போற்றப்பட்ட சூழலிலும், படைமடம் தூற்றப்பட்டமை உணர்த்தப்படுகிறது.

3.கொடையில் பின்பற்றவேண்டிய கொள்கைகளையும், போரில் பின்பற்றவேண்டிய கொள்கைகளையும் சீர்தூக்கிப்பார்ப்பதாக இப்பாடல் அமைகிறது.

தொடர்புடைய இடுகைகள்

38 comments:

 1. நீரில்லாத பாலை நலங்கள் இருக்க நீரில் நீந்தும் தாய்வாந்து ஒரு புறம்....
  மழை - கொடை பற்றி கூறினீர்கள் சிறப்பு விருந்து.
  கருத்துகள் உகுத்தும்,
  காரணங்கள் பொழிந்தும்
  விளக்கங்களால் எம்மைத்
  தெளிய வைத்தலுக்கு
  (எனக்கும் பிடிப்பதற்கும்)
  மிக நன்றி வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 3. மழை பற்றி நல்ல தகவல்கள். அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. அருமை.இது போல் பாரியையும் மழையையும் ஒப்பிட்டு ஒரு பாடல் படித்த நினைவு”பாரி பாரி என்று பல ஏத்தி” எனத்தொடங்கிம் பாடல்.

  ReplyDelete
 5. பேகனின் கொடைத்தன்மை மழையோடு ஒப்பிட்டு உரைக்கப்பட்ட விதம் அருமை..

  ReplyDelete
 6. மிக்க நன்றிங்க முனைவரே .. அறியத்தந்தமைக்கு

  ReplyDelete
 7. சில இடங்களில் மழை பொழிய மாட்டேன் என்று மேகங்கள் சொல்வதில், ஆனால் சில இடங்களில் பொழியாதவாறு மலைகள் தடுத்து விடுகின்றன... மற்றபடி பேகன் குறித்து புது விஷயங்கள் தெரிவித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 8. அருமையான பாடல்
  அழகான பதிவாக்கி அறியச் செய்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 6

  ReplyDelete
 9. பேகனின் சிறப்பை விளக்கும் பாடலும்,
  அதன் விளக்கமும் அருமை... நண்பரே...

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 10. அழகிய ஒப்பீடு.அருமையாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி.

  ReplyDelete
 11. மழை பற்றிய பதிவா? பதிவிட சரியான நேரமிதுதான். தமிழகமே மழையில் நனைந்துக் கொண்டு இருக்கிறது சகோ

  ReplyDelete
 12. மூன்றாம் கோணம்
  பெருமையுடம்

  வழங்கும்
  இணைய தள
  எழுத்தாளர்கள்
  சந்திப்பு விழா
  தேதி : 06.11.11
  நேரம் : காலை 9:30

  இடம்:

  ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

  போஸ்டல் நகர்,

  க்ரோம்பேட்,

  சென்னை
  அனைவரும் வருக!
  நிகழ்ச்சி நிரல் :
  காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
  10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

  11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
  12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
  1 மணி : விருந்து

  எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
  ஆசிரியர் மூன்றாம் கோணம்

  ReplyDelete
 13. கொடைவள்ளல் பேகன் பற்றிய
  அருமையான செய்தி.
  கொடைமடம் போன்ற அரிய
  தமிழ் சொற்களை அறிமுகப்
  படுத்தியதற்கு நன்றிகள் பல முனைவரே.

  ReplyDelete
 14. சிறப்பு பகிர்வு குணா.

  ReplyDelete
 15. பேகனின் கொடைத்தன்மை மழையோடு ஒப்பிட்டு சொன்னவிதமும் விளக்கமும் அருமை முனைவரே...

  ReplyDelete
 16. மிகவும் நன்றாக உள்ளது

  ReplyDelete
 17. @சென்னை பித்தன் ஆம் ஐயா... நினைபடுத்தியமைக்கு நன்றி.

  ReplyDelete
 18. @ராஜி மழையிலும் மழையைத் தேடி வந்தமைக்கு நன்றி இராஜி..

  ReplyDelete
 19. இலக்கிய மழையில் நனைந்தேன் .நன்றி குணசீலன்

  ReplyDelete