Wednesday, February 1, 2012

(+ தாளில்லாக் கல்வி -)                                  இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கணினி எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அதனால் காகிதங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் “தாளில்லாக் கல்வி“ குறித்து பரவலான சிந்தனை எழுந்துள்ளது.
இன்றைய கல்வித்துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு கணினி, இணையம் என்பன இருகண்களாகவே பயன்பட்டுவருகின்றன.

எங்கள் காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகளைச் செய்தித்தாளில்தான் பார்க்கமுடியும். அதற்கு அவ்வளவு போராட்டமாக இருக்கும். இன்று தேர்வுமுடிவுகள் வந்த மறுநிமிடமே கிராமத்திலிருந்தாலும் வீட்டிலிருந்தபடியே அலைபேசிகளில் கூட மாணவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.

தாளில்லாக் கல்வி குறித்த சில நிறை குறைகள்!

தாளில்லாத கல்வி தேவை!

 • அறிவியல் வளர்ச்சியின் அடையாளம் இது.
 • மரங்கள் வெட்டப்படுவது குறையும்.
 • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
 • புத்தகமூட்டை தூக்கும் மாணவர்களுக்கு விடுதலை கிடைக்கும்.
 • கணினியானது இணையத்துடன் உலகையும் இணைப்பதால் மாணவர்களின் அறிவுப்பரப்பு விரிவடையும்.புதுப்புதுத் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளமுடியும்.
 • சிடி,டிவிடி, பென்டிரைவ் என மாணவர்கள் காலத்துக்கேற்ப மாறுவதால் எழுது பொருள்களின் பயன்பாடும் குறையும்.
 • மேகக் கணினி நுட்பத்தால் கணினியும், இணையமும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி யாவருக்கும் கிடைக்கும்.
 • கடைகளிலும், நூலகங்களிலும் நூல்களைத் தேடி, விலைகொடுத்து வாங்கிய நிலைமாறி இணையத்திலேயே இலவசமாக, உடனடியாக பதிவிறக்கிக்கொள்ளும் முறை மாணவர்களை வெகுவாகக் கவரும்.
 • இன்றைய நாளிதழ், வார, மாத இதழ்கள் யாவும் தமக்கென இணையப் பக்கங்களை உருவாக்கிக்கொண்டுள்ளன. இவற்றின் சராசரி அச்சாக்கம் குறைந்தாலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அவற்றின் இணையபக்கங்களில் நிறைவது சிந்திக்கத்தக்கதாவுள்ளது.
 • தாளில்லாத கல்வி தன்னிகரற்ற தலைமுறையின் அடையாளம்.


தாளில்லாத கல்வி தேவையில்லை!

 • கணினியும் இணையமும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களிடம் சென்று சேராது.
 • காகிதத் தொழிலையே நம்பி வாழ்வோரின் நிலை கேள்விக்குறியாகும்.
 • கணினிகளின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டால் “புவிவெப்பமயமாதல்“ அதிகரிக்கும்.
 • தேவையில்லாத கணினிக்குப்பைகளால் மண்வளம் பாதிக்கப்படும்.
 • மாணவர்களின் புத்தகச்சுமை குறைந்தாலும் பெற்றோரின் பணச்சுமை அதிகரிக்கும்.
 • இளைய தலைமுறை இளம் வயதிலேயே பார்வைத்திறன் குறைவுபடவும், தவறான பாதைக்குச் செல்லவும் இதில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
 • இணைய இணைப்பு, மின் இணைப்பு என்னும் இரு அடிப்படைநிலைகளிலும் நாம் தன்னிறைவடையாத நிலையில் இந்த முறை ஒரு கானல் நீர் போலத்தான்.
 • மன அழுத்தம் அதிகரிக்கும். அதனால் புதிய உளவியல்சார்ந்த நோய்கள் வரலாம்.
 • நச்சுநிரல் (வைரஸ்) தாக்குநர்கள் (ஹேக்கர்ஸ்) என்னும் இரு பெரும் சிக்கல்களால் நம் மொத்த தகவல்களும் காணமல்போகும் என்பதையும் மறுக்கமுடியாது.18 comments:

 1. நல்லதொரு அலசல் .
  தெளிவாக தொலைநோக்குப் பார்வையுடன்
  நிறைகுறைகளை அலசி உள்ளீர்கள் .
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. விளக்கமான பதிவு ! அனைத்து பள்ளிக் குழந்தைகள் முதற் கொண்டு லேப்டாப் கொண்டு செல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன் ! பகிர்வுக்கு நன்றி சார் !

  ReplyDelete
 3. nalla visayam!
  enakku thontruvathu!
  thevaiyillai ena thaan!
  nalla vithamaaka vilakkitteenga!

  ReplyDelete
 4. தாளில்லாக் கல்வியில் நிறைகள் பல இருந்தாலும் என்னால் இன்னும் அதனை முழுமையாக ஏற்கமுடியவில்லை. காரணம் கையெழுத்தின் மகத்துவத்தை நாம் இழப்பதே. கடிதங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதில் நாம் இழந்த அழகான தருணங்கள் எத்தனையோ. நமக்குப் பிடித்தமான ஒருவரின் கையெழுத்தைப் பார்த்தாலே அவரைப் பார்ப்பது போன்ற உணர்வைப் பெறும் மகிழ்வை இந்தக் காலப் பிள்ளைகளிடம் சொல்லிப் புரியவைக்க முடியாது. தனித்தக் கையெழுத்து ஒருவரைத் தனித்து அடையாளங்காட்டுவதை எவரும் மறுக்கவும் முடியாது. இவற்றையெல்லாம் இழந்துகொண்டிருக்கிறொம் என்பதை நினைத்தாலே வேதனை மிகுகிறது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கீதா..

   இதன் இன்னொரு பக்கம் வருத்தம் கொள்ளத்தக்கதாகத்தான் உள்ளது..

   Delete
 5. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 6. நல்ல அலசல்.நிறை-குறைகளை நிறைவாக தந்திருக்கீங்க.

  ReplyDelete
 7. அருமையான அலசல். தேவையா தேவையில்லையா என்ற இரு தலைப்பில் நல்ல விளக்கங்கள். தேவை என்பதே எனது கருத்து. காலத்தின் கட்டாயமும் அதுவே.

  ReplyDelete
 8. அருமையானச் செய்தி. இன்றளவில் தேவைப்படும் செய்தி.கணினி என்பது மிகக்குறைவான காலத்தில் வளர்ந்தது. இதன் பயன்பாடும் மிக வேகமாக உலகைச் சென்றடைந்தது என்பதில் உண்மை.ஆனால் இது நீடிக்குமா இல்லை இதைவிட ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வருமா? பொறுமையாக்க் காத்திருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் முனைவரே..
   காத்திருப்போம்.

   Delete
 9. என்ன பண்ணினாலும் கரண்ட் கட் ஆயிட்டா ....திரும்ப தாள் தேடத்தான் வேண்டும்.. தமிழக கரண்ட் கட் தெரியுமுல்ல..

  ReplyDelete
 10. உண்மை உண்மை..

  சூரிய ஆற்றலை மின்சாரமாக்கும் தொழில்நுட்பம் வரும் வரை இந்தநிலை நீடிக்கத்தான் செய்யும்..

  இப்போது சில அதிகவிலை மடிகணினிகள் ஒருநாள் முழுக்க பேட்டரி தாங்கும் திறனுடன் வருகின்றன..

  காலம் மாறும்.. காத்திருப்போம்.

  ReplyDelete