Wednesday, August 8, 2012

ஆங்கிலம் தமிழை விழுங்கிவிடுமா?


  ஓட்டப் பந்தையத்தில் நாம் முதலிடம் பெறவேண்டுமென்றால்
  நாம் ஓடவேண்டும், மற்றவர்களைவிட விரைவாக ஓடவேண்டும்!

  அதைவிட்டுவிட்டு மற்றவர்கள் மெதுவாக ஓடினால் நாம் முதலிடம் வந்துவிடலாம் என்று எண்ணுவது சரியான முடிவாகுமா?

  வளர்ந்து வரும் மொழிகளுக்கு இணையாக
  நம் மொழியையும் நாம்
  வளப்படுத்திக்கொள்ளவேண்டும்!
  சீரமைத்துக்கொள்ளவேண்டும்! என்பதே சரியான பார்வையாக இருக்கமுடியும் இதைத் தவிர்த்து பிற மொழிகளின் வளர்ச்சியைக் கண்டு கோபம் கொள்வதால் மட்டும் நம் மொழி வளர்ந்துவிடாது.


  நம் தமிழ் மொழி தொன்மையானதுதான்.
  இலக்கிய, இலக்கண வளமானதுதான் என்றாலும் இன்று, கொஞ்சம் கொஞ்சமாகப் புறம் தள்ளப்பட்டு வருவதும் உண்மைதான்.

  அடுத்த நூற்றாண்டு அழிந்துபோகும் மொழிகளில் நம் மொழியும் இடம்பெற்றிருப்பது சிந்திக்கவேண்டிய ஒன்றாகவுள்ளது.

  இந்த சூழலில்....

  நம் தமிழ் இருக்கவேண்டிய இடத்தில் ஆங்கிலம் இருக்கிறதே என்பது தான் தமிழ்ப் பற்றாளர்களின் ஆற்றாமையாகவும், கோபமாகவும் வெளிப்படுகிறது.

  தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மட்டுமே பயிற்றுமொழியாக இருந்துவந்த ஆங்கிலம் இன்று அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது.அரசின் இந்த முடிவு, தமிழகத்தில் ஆங்கிலக் கல்வியை வலிமைப்படுத்தி, தமிழ்மொழிக்கு இடமே இல்லாமல் செய்துவிடுமோ என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் பெரும் கவலையாக உள்ளது.

  இன்று உலகம் சென்றுகொண்டிருக்கும் வேகத்துக்கு நம் மக்களும் செல்லவேண்டும் என்ற ஆவலில்தான் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் கற்று, அதற்கு மேல் ஆங்கிலம் கற்பதால் இன்றைய மாணவர்களில் பலரும் மொழிச்சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர்.

  பிறமொழி கலவாது தமிழோ, ஆங்கிலமோ பேச இயலாதவர்களாக உள்ளனர்.

  தமிழை ஆங்கிலம் விழுங்கிக்கொண்டிருக்கிறது! என்பது நம் அச்சத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.

  இது மொழிப் போராட்டம்! என்றோ
  அரசின் தவறான முடிவு! என்றோ சிந்திப்பதைத் தவிர்த்து அரசே சிந்திக்கும்விதமாக தமிழ்மொழியை தகுதியுடைய மொழியாக்கிக் காட்டுவதே அறிவுபூர்வமான செயல்பாடாக இருக்கமுடியும்.


  தமிழுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று முழங்குபவர்களே நீங்கள் உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம்..

  இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை அறிவியல் தமிழ் (இணையத்தமிழ்) என்று நான்காம் தமிழாக வளரவிடுங்கள்...

  உங்கள் பங்குக்கு ஒரு செங்கலாவது எடுத்துக் கொடுங்கள்.

  தமிழ் தமிழ் என்று பேசுபவர்களே.....
  உலகமே கணினி, இணையம் என்று பேசிக்கொண்டிருக்கிறது...

  இன்னும் நீங்கள் யாப்பு, அணியென்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறீ்ர்கள் என்பதை உணருங்கள்.

  ஆங்கிலத்தை விட உங்கள் தமிழ் எவ்வாறு சிறந்தது என்பதை இணையத்தில் உலகத்துக்கே தெரியும் விதமாக எடுத்துச் சொல்லுங்கள்.
  உலகத்துக்கு உங்கள் கருத்து புரிந்துவிட்டால் உங்கள் அரசாங்கத்துக்குப் புரியாமலா போகும்?


  தொல்காப்பியர் சொல்லிய உயிர்ப்பாகுபாட்டை மனிதமரபியல் மருத்துவத்தோடு ஒப்பிட்டுச் சொல்லுங்கள்..

  தொல்காப்பியத்தின் மெய்பாட்டியலை பிராய்டின் உளவியல் கோட்பாட்டோடு தொடர்புபடுத்தி உரையுங்கள்..

  திருவள்ளுவரின் மருத்துவச் செய்திகளை மருத்துவ மாணவர்களுக்கும் புரிமாறு எடுத்துச் சொல்லுங்கள்..

  இதுதான் சரியான மொழிப்போராட்டமாக இருக்கமுடியும் என்பது எனது கருத்து.

  அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கொண்டுவரப்படுவதாலேயே தமிழ் அழிந்து போய்விடாது.

  தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களிடம் தமிழ் அடிப்படை இலக்கண இலக்கிய மரபுகளைச் சொல்லிக் கொடுத்து, அதை ஒப்பிட்டு ஆங்கிலத்தைச் சொல்லிக்கொடுத்தால் அவர்கள் இருமொழியையும் இயல்பாக, எளிதாகக் கற்றுக்கொள்வார்கள்.

  அதைத் தவிர்த்து தமிழை மறைத்து (மறந்து), ஆங்கிலத்தை சொல்லித் தருவது என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களிடம் கடினமான மொழிச்சிக்கலுக்கு வழிவகுப்பதாகவே அமையும்.

  சிந்திக்க மறந்த உண்மைகள்.


 1. தொல்காப்பியம், நன்னூல், தொன்னூல் விளக்கம் என காலந்தோறும் தோன்றிய இலக்கண நூல்களுக்கு இணையாக இன்றைய பேச்சுத்தமிழைக் கட்டமைக்கும் இலக்கணங்கள் உருவாக்கப்படவில்லை.


 2. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்மிடம் கலைச்சொற்களும் போதுமானதாக இல்லை. அதை உருவாக்க அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுக்கவும் இல்லை.


 3. தமிழ்ப் பற்றாளர்கள் பலரும் கூட்டம்போட்டு பேசுதல், நூல் வெளியிடுதல் ஊடகளில் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தல் என்பதோடு நின்றுவிடுகிறார்கள். இணையப் பரப்புக்கு வந்து தம் கருத்தைப் பதிவு செய்ய விரும்புவதில்லை. தமிழ் தமிழ் என்று பேசுபவர்களில் எத்தனைபேர் இணையப்பரப்பில் தமிழின் சிறப்பை எடுத்துரைத்துள்ளனர்...? 
 4. தமிழில் விக்கிப்பீடியா என்று ஒன்று உள்ளது எத்தனை தமிழாசிரியர்களுக்குத் தெரியும்? 
 5. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு எத்தனை தமிழ் விரிவுரையாளர்கள்  சென்றிருப்பார்கள்?

 6. அரசியல்வாதிகளும் தாம் ஆட்சிக்கு வர கையாளும் உத்திகளுள் ஒன்றாக தமிழ்! தமிழ்! என்று மேடைக்கு மேடை பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

 7. நாம் செய்யவேண்டுவன...


 8. கணினிக்கு ஏற்ப நம் தமிழ்மொழியை மறு (எழுத்து)சீரமைப்பு செய்தல்வேண்டும்.
 9. கணினியின் இயங்குதளம்(ஆப்ரேட்டிங் சிஸ்டம்) தொடங்கி, இணைய உலவி (ப்ரௌசர்) வரை தமிழ் மொழியை உள்ளீடு செய்தல்வேண்டும்.
 10. அறிவியலின் எல்லாத் துறைகளுக்கும் ஏற்ப நம் தமிழ் மொழியின் கலைச்சொற்களை நாளுக்கு நாள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 11. ஆங்கிலத்துக்கு செய்முறைப் பயன்பாட்டு அறை (லேங்குவேஜ் லேப்) இருப்பது போல தமிழ் மொழிக்கு, வரிவடிவத்துக்கும், ஒலிவடிவத்துக்கும் பயிற்சி அறைகளை உருவாக்கவேண்டும்.
 12. தமிழ் மொழிக்கு தலைவாரிப் பூச்சூடியது போதும். இனி பள்ளிக்கு அனுப்புவோம்.
 13. தமிழ் மொழிக்கு நடக்க சொல்லிக்கொடுத்தது போதும். இனி பறக்கச் சொல்லிக் கொடுப்போம்.
 14. வெறும் நூல்களையும், கரும்பலகையையும் கொண்டு தாலாட்டுப் பாடி எதுகை, மோனையோடு பாடம் நடத்தம் ஆசிரியர்களுக்கு ஓய்வு தருவோம்.
 15. கணினியின் துணைகொண்டு, இணையத்தில் உலவி தமிழ் சொல்லும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தருவோம்.


 16. இவ்வாறெல்லாம் செய்து தமிழின் தற்காலத் தேவையை உணர்ந்து சீர்செய்து இன்றைய சூழலுக்கு ஏற்ப நம் மொழியைத் தகவமைத்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது.


  பெற்றோர்களே..
  அரசாங்கமே..
  கல்வியாளர்களே..
  மாணவர்களே...

  புரிந்துகொள்ளுங்கள்...

  தமிழ் - ஆங்கிலம் இரண்டும் மொழிகளே..
  இரண்டு மொழிகளும் அறிவைத் தரும் வாயில்களே..
  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு தமிழை நல்ல அடித்தளமாக்கிவிட்டால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அதனைவிடுத்து ஆங்கிலம் மட்டும் போதும் என்று கருதினால் அவர்கள் அவ்வளவு எளிதில் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளமுடியாது.

  மொழிகள் இனத்தின் அடையாளம். அதிலும் பல்லாயிரம் ஆண்டு தொன்மையான செம்மொழியான தமிழ், தன் அடையாளத்தை இழப்பதற்கு நாம் துணையாகலாமா?

  ஆங்கிலம் தமிழை விழுங்குமா? விழுங்காதா?

  என்று சிந்திப்பதை விடுத்து..

  தமிழ் மொழியை, ஆங்கில மொழிக்கு இணையான அறிவுச் செல்வங்களைக் கொண்ட மொழியாக்க பாடுபடுவோம்.

  தொடர்புடைய இடுகைகள்

30 comments:

 1. முற்றிலும் உண்மை...தமிழ் மொழி ஆங்கிலத்துக்குச் சற்றும் இளைத்ததன்று என் உணரவும் உணர்த்தவும் வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி நண்பா.

   Delete
 2. தொல்காப்பிய ஆராய்ச்சியை அதற்காக நிறுத்தி விட முடியாது...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக தொல்காப்பியம் தமிழின் ஆணிவேரல்லவா..

   Delete
 3. ஏவும் திசையில் அம்பென இருந்த
  இனத்தைக் கொஞ்சம் மாற்றுங்கள்!
  ஏவுகணையிலும் தமிழை எழுதி
  எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்
  என்ற வைரமுத்துவின் வைர வரிகள் நினைவுக்கு வருகின்றன.. சரி .. விதைத்து விட்டீர்கள்... நாம் என்ன செய்யலாம்... ?

  ReplyDelete
  Replies
  1. நம்மால் முடிந்தவரை தமிழ் கற்பிக்கும் முறையை தொழில்நுட்பவசதிக்கு உட்படுத்த முயற்சிப்போம்..

   கணினியையும் இணையத்தையும் தமிழ் மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்போம்..

   காலத்தின் தேவையையும் தமிழின் தற்கால நிலையையும் அறிவுறுத்துவோம்.

   Delete
 4. வலைப்பதிவர்கள் என்ற முறையிம் நாம் ஏதாவது செய்தாகவேண்டும்... வாருங்கள் இணைந்து செயல்படுவோம்.. பிறமொழிகளைக் குறை கூறுவதென்பதில் எனக்கும் எப்போதுமே உடன்பாடில்லை... தமிழை நாம் தரம் உயர்த்த வேண்டியதில்லை.. அத்னை இன்றைய பயன்பாட்டுக்கு மறுவடிவமைப்போம்

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் நண்பா நம்மமால் முடிந்தவரை தமிழ் ஆசிரியர்களையும், தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களையும் இணையஉலகிற்கு அடியெடுத்துவைக்கச் செய்வோ்ம்..

   Delete
 5. கலைச்சொல் உருவாக்கத்துக்கும். பயன்பாட்டு அறைக்கும் எப்பொழுது தொடக்க விழா நடத்தலாம்...? தங்களைப் போன்ற கல்லூரிப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் நாங்களும் ஏதாவது செய்ய முடியும்

  ReplyDelete
  Replies
  1. எங்கள் கல்லூரியில் வலைப்பதிவுகுறித்த பயிலரங்கம், விக்கிப்பீடியா குறித்த பயிலரங்கம் நடத்தினோம் நண்பரே..

   மு.இளங்கோவன் ஐயா
   மணிவானதி முனைவர் மணிகண்டன் ஐயா இவர்களெல்லாம் தம் வாழ்வின் பெரும்பகுதி நேரத்தை கல்விநிலையங்களில் இணையத்தமிழ் பயிலரங்குக்காகவே செலவுசெய்து வருகிறார்கள்.

   Delete
 6. அருமை முனைவரே!

  ReplyDelete
 7. அன்புநிறை முனைவரே..
  அருமையான விளக்கத்துடன் கூடிய ஆக்கம்..
  இன்றைய சிலரின் விவாதங்களுள் ஒன்றுதான்
  தமிழை ஆங்கிலம் விழுன்கிவிடுமோ என்பது//
  இன்றைய கால சூழலுக்கு ஏற்ப நாம் நம் மொழியை
  பட்டைதீட்டிக் கொள்ளவேண்டும் என்பது உண்மை...
  எந்த ஒரு மொழிய நாம் கற்க எத்தனித்தாலும்
  அதன் சொல் வடிவை தாய்மொழியில் உருமாற்றியே
  நம் மூளை பதிவு செய்யும்...
  தாய் மொழியில் கற்றால் மற்ற மொழியை கற்பது சுலபம்
  என்பது நிதர்சனம்...
  விவாதங்களை விடுத்து அடுத்த தலைமுறையினருக்கும்
  இந்த கருத்தை எடுத்துச் செல்லவேண்டும்...

  அருமையான ஆக்கத்திற்கு நன்றிகள் பல முனைவரே...

  ReplyDelete
  Replies
  1. எந்த ஒரு மொழிய நாம் கற்க எத்தனித்தாலும்
   அதன் சொல் வடிவை தாய்மொழியில் உருமாற்றியே
   நம் மூளை பதிவு செய்யும்...
   தாய் மொழியில் கற்றால் மற்ற மொழியை கற்பது சுலபம்
   என்பது நிதர்சனம்...

   தங்கள் சரியான புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் தொடர்வருகைக்கும் நன்றி நண்பரே..

   Delete
 8. Dear Sir,

  See this video (I strongly recommend to watch the full video but if you don't have time skip first 12 minutes)
  http://www.ted.com/talks/sugata_mitra_the_child_driven_education.html.
  Why don't you and Rajni Pratap singh try Granny Cloud to teach Tamil Grammar to kids in Tamilnadu then slowly expand that to USA and Europe to teach read/write/speak Tamil for kids of Tamil origin. If you need help let me know through your comment here or in my blog.
  Mohan

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் குறிப்பிட்ட தளம் கண்டு மகிழ்ந்தேன்.

   Delete
 9. அருமையான இடுகை .
  எனது கருத்தும் இது தான் .

  ReplyDelete
 10. நல்ல விளக்கத்துடன் உள்ள அருமை பகிர்வு...

  பல உண்மைகளை உரக்கச் சொல்லி உள்ளீர்கள்...

  அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்... முதலில் அவரவர் குழந்தைகளிடம் ஆரம்பிக்க வேண்டும்...

  வாழ்த்துக்கள்... நன்றி…(TM 10)

  ReplyDelete
  Replies
  1. முதலில் அவரவர் குழந்தைகளிடம் ஆரம்பிக்க வேண்டும்...

   தங்கள் அறிவுறுத்தல் சரியானது அன்பரே.

   Delete
 11. நல்ல இடுகை. ஒரு செங்கலாவது எடுத்து வைப்போம்.

  அரசோ, கல்வி அமைப்புகளோ, தற்காலத் தமிழ்க் கட்டமைப்பை ஊக்கப்படுத்தி வளப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தற்போதைய தமிழ் விக்கிப்பீடியா போல ஆளாளுக்கு தன்னாட்சி தமிழ்க் கட்டமைப்பை உருவாக்கி மொழிச் சிதைவு வருமோ என்ற அச்சமுள்ளது.

  ReplyDelete
 12. அருமை.

  ஆங்கிலம் ஒரு கண்ணாக இருந்தால் தமிழ் அடுத்த கண். ஒன்றை இழந்து மற்றதுடன் வாழ்வது சரிவராது.

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலம் ஒரு கண்ணாக இருந்தால் தமிழ் அடுத்த கண். ஒன்றை இழந்து மற்றதுடன் வாழ்வது சரிவராது.

   அழகாகச் சொன்னீர்கள் மாதேவி.

   Delete
 13. வணக்கம் சொந்தமே!தங்கள் சந்திப்பு மகிழ்ச்சி.இன்று தான் தளம் வர முடிந்தது.எண்மை தான் அறவது ஒன்றும் தவறில்லை.ஆனால் நாகரீகம் என்ற மாயையில் ஆங்கிலத்தையும் பிற மொழியையும் உயர்த்தி தாயான தமிழை தலைகுளிய வைப்பது தான் முட்டாள் தனம்.தங்கள் கருத்தோட்டத்தில் இணைந்து கொள்கிறேன்.இதை புரியாது மாற்றான் மொழி பற்றி மட்டும் மார் தட்டிக்கொண்டிருந்தால் ஆய்வரங்குகளில் மட்டும் தான் ◌தமிழ் வாழும்.தமிழால் எழுவோம்.வாழ்த்துக்களும் மிக்க நன்றியும் இப்பதிவிற்காய்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அதிசயா.

   Delete
 14. நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு கருத்தும் உண்மை. பிறமொழிகளையும் பிற மக்களின் மரபுகளையும் தெரிந்து கொண்டு எல்லா இடமும் தமிழைச் சேர்க்க வேண்டும்! என்னால் இயன்றதைச் செய்ய விழைகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் புரிதலுக்கு மிக்க மகிழ்ச்சி கிரேஸ்

   Delete