வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 14 செப்டம்பர், 2013

மெக்காலே எழுதிய கடிதம்


"நான் பாரதத்தின் எல்லா பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளேன். இந்த நாட்டில் ஒருவர் கூட பிச்சைக்காரர் இல்லை. ஒருவர் கூட திருடர் இல்லை. அந்த அளவு செல்வ வளமும் உயர்ந்த பண்புகளும் உள்ள மனிதர்களையும் நான் இதுவரை கண்டதில்லை.
இந்த தேசத்தின் முதுகெலும்பை முறிக்காமல் இந்த தேசத்தை வெற்றி கொள்ள முடியாது. இந்த தேசத்தின் முதுகெலும்பாக இருப்பது இதன் ஆன்மிகமும், பண்பாட்டுப் பாரம்பரியமும். எனவே இவர்களது பாரம்பரிய கல்வி முறையை நாம் மாற்ற வேண்டும். அதன் காரணமாக அன்னிய நாட்டைச் சேர்ந்ததும் ஆங்கிலேயருடையதும் எதுவாக இருந்தாலும் அதுவே நன்றென்றும் அதுவே நமக்குச் சொந்தமானதைவிடச் சிறந்தது என்றும் அவன் நினைப்பான். அவன் தனது சுயதன்மையை, இயல்பை, சுயபண்பாட்டை இழப்பான். நாம் விரும்பியபடி அவர்கள் மாறுபவர்கள். தேசம் உண்மையில் நம் ஆதிக்கத்துக்கு வரும்''

இந்தக் கடிதம் குறித்த மாற்றுக்கருத்துக்கள் பல இருப்பதை நண்பர்கள் தந்த மறுமொழிகளின் வழியாக அறிந்துகொண்டேன். நன்றி நண்பர்களே.

மெக்காலே அப்படிச் சொல்லவில்லை. இது சித்தரிக்கப்பட்ட கடிதம் என்று சிலர் கருத்துசொல்கிறார்கள். சரி! அப்படியென்றால் இன்று நம் தாய்மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மட்டுமே பின்தொடரும் அவலநிலை நமக்கு எப்படி வந்தது?
 இந்தக் கல்விமுறையை நாமே தேர்ந்தெடுத்துக்கொண்டோமா?

நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக்கொட்டிக்கொண்டோமா?

புரியாத புதிராகவே இந்த கருத்துவேறுபாடு இருந்தாலும், 
இனியாவது தாய்மொழியின் தேவையையும், 
அதன் பெருமையையும் தமிழர்கள் உணர்ந்தால் நலம்.

6 கருத்துகள்:

  1. சுய நலத்திற்க்காக அந்த தீர்க்கதரிசி சொன்ன பாட முறையை நாம் இன்னும் கட்டி அழுதுக்கொண்டு இருக்கிறோம் ..வெட்கக் கேடு !

    பதிலளிநீக்கு
  2. அவருடைய நோக்கம் வெற்றி பெற்றுவிட்டது வருத்தத்திற்கு உரியதுதான்.
    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  3. இது அமெரிக்காவில் பிழைப்பு தேடி சென்ற சில ஆர் எஸ் எஸ் சார்பு கொண்ட உயர்ஜாதி இந்தியர்களால் சித்தரிக்கப்பட்ட கதை என்பது இணையத்தில் நிரூபணமான செய்தி. கீழே உள்ள தொடர்பை தட்டிப் படிக்கவும்.

    http://historydetox.com/the-macaulay-fraud/

    பதிலளிநீக்கு
  4. சிந்திக்க வேண்டிய சமூகம் வேறொரு பாதையில் இருக்கிறது முனைவர் அவர்களே ...

    பதிலளிநீக்கு
  5. இன்று கலாச்சாரப் பண்பாடுகளில்,பொருளாதார முன்னேற்றத்தில்,வளர்ச்சியில் உயர்ந்து நிற்கும் சீனா,ஜப்பான்,ஜேர்மனி போன்ற நாடுகளில் தாய் மொழிக் கல்வி தான் உள்ளது.ஆங்கிலம் ஒரு மொழியாக கற்பிக்கப்படுகிறது.அதனால்தான் இன்று ஜேர்மனியும்,சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு தொழில் நுட்பத்தில் ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ளது. ஆங்கிலம் என்று சொல்லி அமெரிக்காவைப் பின்பற்றிய நாமும் வீழ்ந்து கொண்டிருக்கிறோம்.அமெரிக்காவும் வீழ்ந்து கொண்டிருக்கிறது.
    நம் கல்வி முறை மாறாத வரை,மாற்றப்படாத வரை,தாய்மொழிக் கல்வி வராதவரை, நம் முன்னேற்றம் கேள்விக் குறிதான். 2020 இல் மட்டுமல்ல 3000 இலும் வல்லரசுக் கனவு ,கனவுதான். ஆயுதங்களால் உருவாகும்வல்லரசை விட, உண்மையான உழைப்பால்,நல்லரசால் தான் தலை நிமிர்ந்து நிற்க முடியும். இல்லையேல் பறிபோய்க் கொண்டிருக்கும் பொருளாதாரச் சரிவு, நிரந்தரமாகி விடும். இளைஞர்களின் பலத்தை வீணடிக்கும் அரசுகள்,அமெரிக்காவின் வீழ்ச்சியைக் கண்டு கூட பாடம் கற்காதது வருத்தத்திற்கு உரியது தான்.
    மெக்காலே சொன்னாரா இல்லையா என்பதை விட, நாமே நம் தலையில் மண்ணைக் கொண்டிருக்கிறோம் என்பதை இன்னமும் கண்டு கொள்ளாது இருக்கிறோமே என்றால்,நாம் நமக்கு குழி பறித்துக் கொண்டிருக்கிறோமா? மெக்காலேயை விட நாம் கொடுமையானவர்களா?

    பதிலளிநீக்கு