வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 26 செப்டம்பர், 2013

சிந்திக்கவைக்கும் குடியரசுத் தலைவரின் உரை

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றியபோது,
கடந்த 6ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்த தட்சிசீலம்,  நாளந்தாவிக்கிரமசீலாவல்லபிசோமபுரா பல்கலைக்கழகங்களில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர். அப்புகழை நாம் மீண்டும் பெற வேண்டும். ஆசிரியர் பணி அனைத்துப் பணிகளிலும் சிறந்ததாகும். மாணவர்கள் சந்தேகங்கள் எழுப்பினால் அதற்குப் பதிலளிப்பது மிகுந்த மகிழ்வைத் தரும். மாணவர்களுக்கு ஆசானாகவும்வழிகாட்டியாகவும்ஆசிரியர்கள் திகழ வேண்டும். தாங்கள் பெற்ற அறிவை மாணவர்களுக்குப் போதிப்பதில் கடமைபொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தரமானக் கல்வியை பெறுவதும் உரிமையாகும்.

இந்தியாவில் தற்போது 659 பல்கலைக்கழங்கள், 33,000 கல்லூரிகளில் 1.8 கோடி பேர் பயின்று வருகின்றனர். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இது 2.9 கோடியாக உயர வாய்ப்புள்ளது. இந்தியாவை முன்னேற்றுவதில் மாணவமாணவியருக்கு பெரும் பங்கு உள்ளது. ஒழுக்கம்கடமை உணர்வுகடின உழைப்புஅர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எந்த கடினமான சூழலையையும் சமாளிக்கலாம் என்றார் முகர்ஜி.

குடியரசுத் தலைவரின் உரை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

8 கருத்துகள்:

 1. இந்திய கல்வி முறை இன்னும் சிறப்பாகதொர் இடத்தை தொடவேண்டும்...


  அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்தான்

  பதிலளிநீக்கு
 2. நல்ல பகிர்வு முனைவரே... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. தங்கள் வருகைக்கும் மறுமாழிக்கும் நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு