வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 19 செப்டம்பர், 2013

இவர்களின் கல்வியறிவு இவ்வளவுதான்!

தொல்காப்பியர் அகத்தியரிடம் கல்விபயின்ற பன்னிரு மாணவர்களுள் ஒருவராவார். திருவள்ளுவர் எங்கு படித்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இன்று தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் ஆய்வு செய்து முனைவர்பட்டம் வாங்கிய பலர் தம் பெயருக்கு முன்னால் முனைவர் என இட்டுக்கொள்கிறார்கள். அப்படியென்றால் தொல்காப்பியருக்கும், திருவள்ளுவருக்கும் எத்தனை முனைவர் பட்டம் கொடுக்கலாம் என்பது எனது நீண்ட நாள் ஐயப்பாடு. இன்றைய பல்கலைக்கழகங்களே ஆய்வுசெய்யும் இவர்களை எந்தக் கல்விச்சாலை உருவாக்கியது? எந்தக் கல்விமுறை உருவாக்கியது? என்பதை நாம் சிந்திக்கவேண்டும்!  இவர்கள் வாழ்ந்த காலம் குருகுலக் கல்வி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அன்றைய காலம் தொடங்கி இன்றுவரை கல்வியில் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன. இருந்தாலும் தொல்காப்பியர், திருவள்ளுவர் போல எத்தனைபேரை இந்தக் கல்விமுறை உருவாக்கியிருக்கிறது? என்றே எண்ணத் தோன்றுகிறது.

  இந்தச்சூழலில் பள்ளிக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காமல் பெரும்புகழ்பெற்றவர்களின் கல்விப் பின்புலத்தைப் பதிவு செய்யவிரும்புகிறேன்.
  காமராசர் ஆறாம் வகுப்பு வரையே படித்தார்  பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் திண்ணைப் பள்ளியில் ஒருவருடம்  மட்டுமே படித்தார்.

  கண்ணதாசன் எட்டாம் வகுப்புவரை படித்தார்.

  எம்ஜிஆர் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார்.

  தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படித்தது மூன்று மாதங்கள் மட்டுமே.
  மொகலாய மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் அக்பர்,
  அவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது என்றாலும், அவர் 24000 நூல்களைக் கொண்ட நூலகத்தை அமைத்து மற்றவர்கள் படிக்கவேண்டும் என்பதை அக்பர் ஊக்குவித்தார்.


  உலகம் போற்றும் கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீசுக்கு எழுதப்படிக்கத் தெரியாது.

                                                            அன்பின் உறவுகளே இவர்களைப்போல உலகத்தைப் படித்த மேதைகளைத் தொடர்ந்து பதிவு செய்யவிரும்புகிறேன். இதன் நோக்கம் இன்றைய கல்விமுறையக் குறைசொல்தல்ல. இன்றைய கல்விமுறையை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே. அதனால் இவர்களைப் போல புகழ்பெற்றவர்களின் கல்விப் பின்புலத்தை மறுமொழியில் தெரிவித்தால் பெரிதும் மகிழ்வேன்.

  24 கருத்துகள்:

  1. வணக்கம்
   குணசீலன்(சார்)

   நீங்கள் சொல்வது உண்மைதான். பல்கலைக்கழகம் போகாமல் மேதையாகிவர்கள் இவர்கள்தான் பதிவு அருமை வாழத்துக்கள்

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
  2. படிப்பு என்பது பள்ளிக்குச் செல்வதும் பட்டம் வாங்குவதும் அன்று. அறிவிற்காகப் படிப்பதும், சுய சிந்தனை உள்ளவர்களும்,அதைத் துணிவுடன் நன்றாகப் புரியும் படி எடுத்துச் சொல்வதும் முக்கியம். தந்தை பெரியார் சிறந்த எடுத்துக் காட்டு

   பதிலளிநீக்கு
  3. படிக்காத மேதைகள் தொடரட்டும்... நன்றி... வாழ்த்துக்கள்...

   பதிலளிநீக்கு
  4. தாங்கள் குறிப்பிட்ட அனைவருமே, அவர்களே பல்கலைக் கழகங்கள்தான்.

   பதிலளிநீக்கு
  5. படித்ததனால் அறிவு பெற்றோர்
   ஆயிரமுண்டு
   படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
   என்கிற கண்ணதாசன் அவர்களின் வரிக்கு
   நல்ல விளக்கமாக உள்ளது தங்கள் பதிவு
   பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நல்லதொரு திரைப்படப்பாடலை நினைவுபடுத்தினீர்கள் நன்றி ஐயா.

    நீக்கு
  6. எத்தனை அற்புதமான மனிதர்களை பற்றி தகவல் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்.

   பதிலளிநீக்கு
  7. மக்கள் மனத்தை படித்தவர்கள் அவர்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி

   பதிலளிநீக்கு
  8. தமிழ் வணக்கங்களுடன் தமிழாசான் குணாவிற்கு....
   இன்று பட்டப்பெயர்கள் பின்னிணைந்தால் பின்னிணைந்தவர்க்கு மரியாதை.. செஙகம்பல விரிப்பு... அன்றிருந்த ஔவையும் ஒட்டக்கூத்தனும் எத்தனையாம் வகுப்பு வரை கற்றார்கள் என்று இன்று மாணாக்கர் வினாதொடுக்கின்றனர்.. குருகுலவாசம் என்று நழுவுகிறேன்..... அவர்களின் பின்புலம் மானுடவியலை... மனிதாபிமானத்தை கொலுகொம்பாய்க் கொண்டிருந்தது.
   இன்று ஒருதுறையில் துறைபோன ஒருவரை சமூகம் கண்டாலும்... அவரில் திறமைகள் சாலவிருப்பது கண்டாலும்... பட்டப் பெயர்கள் காணதவிடத்து கண்டுகொள்ளாதிருக்கின்றது... கூடவே அவர் அரச உத்தியோகமும் பார்க்க வேண்டும்.... தனியார் பள்ளியில் கற்பித்தாலும் கூட அவர் பற்றிப் பாரார்... இதுதான் சத்தியம்... தங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

    நீக்கு
  9. படிக்காத மேதைகள் - அவர்கள்
   எமக்குப் புகட்டிய பாடங்கள் ஏராளம்
   மாணவர் கருத்திற்கொள்ள வேண்டி பதிவிது!

   பதிலளிநீக்கு
  10. ஐயா,
   இன்று கற்போரெல்லாம் மனப்பாடஞ்செய்கின்றனரேயொழிய, பெரும்பாலானோர் அறிந்துகற்பதில்லை. அதிலும் தமிழ்கற்றோரெல்லாம் பற்பல பட்டங்களை பெற்றிருப்பதற்குத்தகுந்தவாறு தமிழை பிழையின்றி எழுதுகின்றனராவென்றால், அதுதானில்லை!

   இன்றிருக்கும் +2 தமிழ்ப்பாடநூலில், ஆறாம்பாடத்தின் இரண்டாவதுபத்தியில், பதினெட்டுவரிகளுள்ளன. இந்த பதினெட்டுவரிகளுக்குள்ளிருக்கும் புணர்ச்சிப்பிழைகளோ 60!

   இதுதான் இன்றைய தமிழ்!

   நீங்கள் தொல்காப்பியரையும் திருவள்ளுவரையும் இவர்களுக்கு நினைவூட்டத்தான்முடியும், கற்பிக்கமுடியாது!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்றைய தமிழை இனம் காட்டிச் சென்றதற்கு நன்றிகள் பொன்முடி. நீங்கள் சொல்வது மறுக்கமுடியாத உண்மை.

    நீக்கு