வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 13 நவம்பர், 2009

கொல்லிப்பாவை.



 
பாவை என்ற சொல்லுக்கு பொம்மை என்று பொருள் உண்டு. கொல்லிப்பாவை பற்றிய பல செய்திகளையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. அவற்றை எடுத்தியம்புதாக இவ்விடுகை அமைகிறது.
 
கொல்லிமலை வல்வில் ஒரி என்னும் வள்ளலுக்கு உரியது. காரி என்பவன் ஓரியை வென்று அம்மலையைச் சேரனுக்கு ஈந்தான். இம்மலையின் மேற்குப்பகுதியில் சூரியஒளிபடுமாறு மேற்கு நோக்கியவாறு தெய்வத்தால் அமைக்கப்பட்ட பாவை ஒன்று இருந்ததாக நூல்கள் உரைக்கின்றன. இப்பாவை கொல்லிப்பாவை எனப்பட்டது. இது கண்டோரை மயக்கி வீழ்த்தி உயிர்விடச் செய்யும் ஆற்றல் கொண்டதாகக் கூறப்பட்டது. அழியாத அழகுடைய தலைவிக்குக் கொல்லிப்பாவையை உவமையாகப் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.
 

சான்று-1
 
களவுக்காலத்தில் தாம் வரும் பாதையின் துன்பம் எண்ணி அஞ்சிய தலைவியிடம் தலைவன்,
 
“பயன்மிக்க பலா மரங்களைக் கொண்ட கொல்லிமலையின் மேற்குப் பகுதி சார்ந்த மலையிடத்தே முன்பு தெய்வத்தாலே வடிவமைத்து வைக்கப்பட்ட புதிய வகையில் இயங்குகின்ற பாவையானது, விரிந்து பரவும் சூரியனது வெயிலிலே தோன்றி நின்றது போன்ற உன் அழகிய நலம் கருதி வருவேன்.
அவ்வாறு வரும்போது உன் உடம்பிலிருந்து பரவும் ஒளியே எங்கும் பரவி இருளைப் போக்கும் நீ அஞ்ச வேண்டாம் என்கிறான்.இதனை,
 
'பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.
 
(நற்றிணை-192-8-12.)
 

என்ற பாடலடிகள் விளக்கும்.
 
சான்று-2

கொல்லி மலையிலே கலை வல்லான் ஒருவனால் இயற்றப்பட்ட ஒப்பில்லாத பாவையோ?
படைத்தல் தொழில்வல்ல அயனால் நல்ல மகளிருடைய உறுப்புகள் எல்லாம் ஒரு சேரக்கொண்டு படைக்கப்பட்டவளோ?
அன்றி ஆடவரின் மேலுள்ள வெறுப்பாள் தன்னைக் கூற்றம் என்று பிறர் அறியாதபடி மறைத்து பெண் வடிவு கொண்டு வந்த கூற்றமோ..?
 
என்று தலைவியின் அழகு நலத்தை வியக்கிறான் தலைவன். இதனை,
 
“ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல்?“
 
(கலித்தொகை-56-6-9)
 
அடிகளின் வழி அறியலாம்.
சான்று-3

பாங்கர் கூட்டத்தில், தலைவி பெறுதற்கரிய காவலையுடையவள். அவளை எண்ணி நீ வருந்துவதில் எந்தப் பயனுமில்லை என்று தலைவனை நோக்கிப் பாங்கன் உரைத்தான். அதற்குத் தலைவன்,
 
“ எக்காலத்தும் அழியாத கொல்லிப்பாவை போல என்னுள்ளத்தே தங்கினாள் தலைவி, அவளை எவ்வாறு மறத்தல் கூடும்? என்று கேட்கிறான் தலைவன்.
இதனை,
 
5 செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வௌ் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
10 பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.


பரணர்
 
(நற்றிணை-201-5-12)
 
என்னும் அடிகள் உரைக்கும்.
மேலும் 
 
“பாவை அன்ன வனப்பினள் இவள்“ (நற்றிணை-301-6)
“நல்லியற் பாவை அன்ன“ (குறுந்தொகை-89-6)
“வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே“ (குறுந்தொகை-100-5-6)
“ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்“ (புறநானூறு-251-1-2)
 
என்னும் அடிகள் வாயிலாகவும் தலைவியின் அழகு நலம் கொல்லிப்பாவையேடு ஒப்பிட்டமை உணரலாம்.
 
இன்றைய நிலையில்..


கொல்லிப்பாவை காவல் தெய்வம் என்றும், கொல்லிமலையில் வாழும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக சித்தர்களால் உருவாக்கப்பட்டது என்றும் நம்பிக்கை உள்ளது.

மனிதர்களைக் கொல்லும் பாவையின் திருவுருவங்கள் அங்கு பல இடங்களில் இருந்ததாலும்; மனிதர்களையும் பிற உயிரினங் களையும் இழுத்துக் கொள்ளும் மரங்கள் அந்தப் பகுதியில் இருந்ததாலும் அந்த மலைக்கு "கொல்லிமலை' என்று பெயர் வந்ததாக அந்த ஊருக்கான பெயர்க்காரணம் உரைக்கப்படுகிறது.


சங்கத் தமிழரிடமிருந்த நம்பிக்கை இன்று வரை தொடர்ந்து வருவது வியப்பிற்குரிதாகவே உள்ளது. இந்நிலையில் இதிலுள்ள உண்மையை நோக்கும் போது மக்களின் நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது. கொல்லிப்பாவையால் யாரும் கொல்லப்பட்டதற்கான குறிப்புகளை எங்கும் இல்லை..

ஏதோ ஒரு ஓவியமோ, சிற்பமோ மிகவும் நன்றாக இருந்தால் அதனை நாம் உயிரோட்டத்துடன் உள்ளது என்று கூறுவதுண்டு. உயிர் அந்தப் படைப்பில் இருப்பதில்லை.
நம் அழகுணர்வு மட்டுமே அங்கு உள்ளது.

அது போல சங்ககாலத்தில் கொல்லிமலையில் உருவாக்கபட்ட பாவை என்னும் பொம்மையோ, சிற்பமோ மிகவும் அழகாக இருந்திருத்தல் கூடும். அந்த அழகு மீண்டும் மீண்டும் எண்ணத்தக்கதாக இருந்திருக்கும்.அதனால் பல கற்பனைக் கதைகளும் வழிவழியாக வழக்கில் வந்து இன்றைய சூழலில் ஒரு தெய்வமாக வழக்கில் உள்ளது.

16 கருத்துகள்:

  1. //ஏதோ ஒரு ஓவியமோ, சிற்பமோ மிகவும் நன்றாக இருந்தால் அதனை நாம் உயிரோட்டத்துடன் உள்ளது என்று கூறுவதுண்டு.//

    இது போன்ற ஓவியங்களும் சிற்பங்களும் தான் இன்று கடவுள் என்று சித்தரிக்கப்பட்டு மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கின்றன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான படைப்பு முனைவரே..சிரமம் பார்க்காமல் பதிவிட்டதற்க்கு நன்றி!!தொடரட்டும் உங்களின் தமிழ் படைப்புகள்...

    பதிலளிநீக்கு
  3. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    பதிலளிநீக்கு
  4. முதல்ல மன்னிக்கனும் உங்க பதிவுக்கு வந்த பல நாட்கள் ஆகின்றன.தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலவில்லை..இன்று வந்து பார்த்தால் டெம்ளேட் வாவ்....அருமை இந்த தமிழ் எழுத்துக்களுக்கு ஏற்றவாறு பளிச் அதற்கேற்ற அற்புதமான படைப்பு...வாழ்த்துக்கள் இனி தொடருவேன் குணா...

    பதிலளிநீக்கு
  5. 5 Comments
    Close this window Jump to comment form

    Blogger புலவன் புலிகேசி said...

    //ஏதோ ஒரு ஓவியமோ, சிற்பமோ மிகவும் நன்றாக இருந்தால் அதனை நாம் உயிரோட்டத்துடன் உள்ளது என்று கூறுவதுண்டு.//

    இது போன்ற ஓவியங்களும் சிற்பங்களும் தான் இன்று கடவுள் என்று சித்தரிக்கப்பட்டு மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கின்றன்/

    உண்மைதான் நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. வானம்பாடிகள் said...

    அருமை அய்யா/

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  7. நித்தியானந்தம் said...

    அருமையான படைப்பு முனைவரே..சிரமம் பார்க்காமல் பதிவிட்டதற்க்கு நன்றி!!தொடரட்டும் உங்களின் தமிழ் படைப்புகள்../

    மிக்க நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  8. TamilNenjam said...

    குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்/
    மகிழ்ச்சி நண்பரே..

    பதிலளிநீக்கு
  9. தமிழரசி said...

    முதல்ல மன்னிக்கனும் உங்க பதிவுக்கு வந்த பல நாட்கள் ஆகின்றன.தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலவில்லை..இன்று வந்து பார்த்தால் டெம்ளேட் வாவ்....அருமை இந்த தமிழ் எழுத்துக்களுக்கு ஏற்றவாறு பளிச் அதற்கேற்ற அற்புதமான படைப்பு...வாழ்த்துக்கள் இனி தொடருவேன் குணா../

    மகிழ்ச்சி தமிழ்...

    பதிலளிநீக்கு
  10. நான் ஆத்திகவாதியாக இருக்கும் பொழுது அந்த கோவிலுக்கு சென்றுள்ளேன், இப்பொழுது தான் அந்த இடத்திற்கான வரலாற்றை தெரிந்துகொண்டேன், மிக்க நன்றி ஐயா

    Blogger புலவன் புலிகேசி said...

    //ஏதோ ஒரு ஓவியமோ, சிற்பமோ மிகவும் நன்றாக இருந்தால் அதனை நாம் உயிரோட்டத்துடன் உள்ளது என்று கூறுவதுண்டு.//

    இது போன்ற ஓவியங்களும் சிற்பங்களும் தான் இன்று கடவுள் என்று சித்தரிக்கப்பட்டு மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கின்றன்/
    இது மிக சரியான கூற்று.

    பதிலளிநீக்கு
  11. நாம் எதைப் பற்றியும் சில டெம்ப்ளேட் எதிர்வினைகள் வைத்திருக்கிறோம்.ஆத்திகம்,நாத்திகம் மொழி போல எல்லாவற்றைப் பற்றியும்.கொல்லிப்பாவை பற்றியும் அவ்விதமே.சித்தர்கள் பாடலிலும் கொல்லிப்பாவை பற்றி வருகிறது.பாவை என்றால் இன்றைய ரோபாட் மாதிரி.எனக்குத் தெரிந்து ரோபாட் பற்றி சரித்திரத்தில் முதல் சிந்தனை.

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள நண்பர்களே, என் பெயர் மணிமாறன்.
    சேலம் சொந்த ஊரு.

    பெங்களுருவில் தற்போது வாசித்த வருகிறேன்.
    என்னக்கு ஊரு சுற்றிபக்க ரொம்ப ஆசை. அப்படித்தானே கொல்லி மலை வந்தேன். நான் கொல்லி மலையில் ஒரு வித்தியாசமான விடுதி கட்டி உள்ளேன், அனைவரும் கொல்லி மலை வருக என வரவேற்கிறேன்.

    இப்படிக்கு,

    மணிமாறன்
    +919739700059
    http://wildorchidcamp.com

    பதிலளிநீக்கு
  13. கொல்லிமலையில் ஜோதிவிருட்சம் ஒளிதரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    தலைவியின் மேனி ஒளி வெளிச்சம் தரும் என்று தலைவன் கூறுவது ஒப்புநோக்கி இன்புறத்தக்கது.

    பதிலளிநீக்கு