வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 17 ஜூன், 2012

பே(பெய)ராசைபிடித்த பெண்கள்!



ஆண் - பெண் இருவரில் பேராசை பிடித்தவர்கள் யார்? என்றால் கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் பெண்கள்தான் என்று..

ஏனென்று கேட்கிறீர்களா?
கீழே பாருங்கள் இவர்களுக்கு எத்தனை பெயர்கள் என்று..


பொருளாசை பிடித்தவர்கள் என்பதால் அல்ல
ஆண்களுக்குப் பிடித்தவர்கள் என்பதால்

ஆம் தமிழ் இலக்கியப்பரப்பில் ஆண்களால் அழைக்கப்பட்ட பெண்களின் பெயர்களைத்தான் இன்று காணப்போகிறோம்.





பேதை, பெதும்பை,மங்கை, மடந்தை,
அரிவை,தெரிவை, பேரிளம்பெண்,
அங்கனை, ஆடவள், ஆயிழை,ஆட்டி,
மாயோள், சுரிகுழல்
மகடூஉகாந்தை
சுந்தரி, வனிதை, மாது
மானினி, நல்லாள், சிறுமி,சேயிழை,
தையல், நங்கை,நாரி, பிரியை, காரிகை
அணங்கு, பிணா
பெண்டு,குறத்தி, இடைச்சி,உழத்தி,
 நுழைச்சி, எயிற்றி, மறத்தி,
தலைவி, தோழி, நற்றாய், 
செவிலி,விறலி

பெண்களுக்கு இணையாக ஆண்களுக்கும்..


  1. பாலன் 1-7 வயது
  2. மீளி 8-10 வயது
  3. மறவோன் 11-14 வயது
  4. திறவோன் 15 வயது
  5. காளை 16 வயது
  6. விடலை 17 -30 வயது
  7. முதுமகன், 30 வயதுக்கு மேல்

பல்வேறு பெயர்கள் உள்ளன என்றாலும். அதிகமாக அழைக்கப்படுவது என்னவோ பெண்களின் பெயர்கள்தானே...

19 கருத்துகள்:

  1. ஆகா! உண்மை தான் பெயராசை பிடித்தவர்கள் பெண்கள் தான்.
    அதுவும் ஆண்கள் தந்த பெயர்கள் தானே! நன்றி முனைவரே.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. ஆண்களுக்கும் பெயரா இப்போது தான் அறிகிறேன்

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான தகவல் முனைவர் சார்.!

    சில பெயர்கள் படிக்கும்போது அறிந்ததில்லை, இப்போதுதான் அறிகிறேன்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி நண்பா.

      நீக்கு
  4. 32-40 பேரிளம்பெண் என்றால்,40க்கு மேல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களைப் பேருக்கு இளம்பெண்கள் என அழைக்கலாம் அன்பரே.

      நீக்கு
  5. ஆண்களுக்கான பெயர்களை வயதுடன் இன்றுதான் அறிந்தேன்.
    நன்றிங்க முனைவரே.


    (கேள்வி- 32-40 பேரிளம்பெண் என்றால்,40க்கு மேல்?
    பதில் - அவர்களைப் பேருக்கு இளம்பெண்கள் என அழைக்கலாம் அன்பரே.
    அருமையான நகைச்சுவை முனைவரே.)

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே அருமையாக ஒரு விசயத்தை
    விளக்கி உள்ளீர்கள் .தலைப்பைப் பார்த்ததும் சற்று
    குழம்பினேன் முடிவில் நீங்கள் சொன்னதைக் கேட்டு
    நானும் உங்கள் முடிவிற்கே வந்துவிட்டேன் இனி
    யாராவது பெண்கள்தான் பேராசை பிடித்தவர்கள்
    என்றால் கவலையே இல்லை ....:)..மிக்க நன்றி சகோ
    பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  7. அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து.

    பதிலளிநீக்கு
  8. இப்ப எல்லாம் ஆசை பிசாசே பிரியமான பேயே அப்படின்னுகூட கூப்பிட ஆரம்பிச்சுட்டங்க..

    பதிலளிநீக்கு