வெள்ளி, 8 ஜூன், 2012

உன்னை மட்டும் காட்டும் கண்கள் • காதல் என்பது ஒரு மாய உலகம்!

  இங்கு இருவர் மட்டுமே வாழ்கிறார்கள்!
  இவ்விருவருக்கும் இவ்விருவர் மட்டுமே தெரிகிறார்கள்.
  அதனால் தான் “காதலுக்குக் கண்களில்லை“ என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் போலும். • காதல் என்பது ஒரு சிறைச்சாலை!

  காதலர்களை யாரும் சிறைப்படுத்தத் தேவையில்லை. இவர்களே இவர்களைச் சிறைப்படுத்திக்கொள்வார்கள். இவர்களுக்கு தம்மைச் சுற்றி எத்தனைபேர் இருந்தாலும் கண்களுக்குத் தெரியாது. அதனால் பலநேரங்களில் இவர்கள் தனிமையில் வாழ்வதாகவே எண்ணிக்கொள்வார்கள்.


  இதோ சில காதல் கைதிகளைக் காண்போம்...
 •  திருமணத்துக்கு இடையிலான தலைவனின் பிரிவைத் தலைவியால்  

       தாங்கிக்கொள்ள இயலவில்லை.  தன் உடலில் உயிர் நீங்கிச் சென்றது  

       போல வருந்தினாள்மழை பொழிந்த மேகம் தெற்கே சென்றது போல  
        என் நெஞ்சம் தலைவனின் பின்னே சென்று விட்டது. பின் அங்கே  
       தங்கி என்னை மறந்துபோனதுஎன் உடலோ போருக்கும் பின்னர்  
       என்கிறாள் ஒரு தலைவி.


 •  காதலன் தன்னுடன் உள்ளபோது சீறூரில் வாழ்ந்தாலும், அதனையே விழா நடைபெறும் பேரூராக எண்ணிக்கொள்ளகிறாள் தலைவி
               அதே நேரம் அவன் தன்னைப் பிரிந்தபோது மக்கள் நீங்கிய அணில் விளையாடும் தனியான முற்றத்தைப் போலப் பொலிவிழந்து 

காணப்படுகிறேன் என உரைக்கிறாள்.

  இந்தத் தலைவியர் போல குறுந்தொகையில் ஒரு தலைவயின் தனிமைத் துயரைக் காண்போம் வாருங்கள்..


 •  குளிர்ச்சியை உடைய கடலில் தோன்றிய அலைகள், மீன்களை இடம்பெயர்த்துக் கொண்டுவந்து தருதலினால், வெண்மையான சிறகுகளையுடைய நாரைகள், அங்கு சென்று அயிரை மீன்களை விரும்பி உண்ணும். இத்தகைய தன்மையுடைய மரந்தை என்னும் கடற்துறைப் பட்டினத்தில்,

  தலைவன் என்னோடு உள்ளபோதெல்லாம் அவ்வூர் மிகவும் நன்மையுடையதாகவும்,
  தலைவன் என்னை நீங்கியபோதெல்லாம் ஒருவருமில்லாத தனிமையுடையதாகவும் தோன்றும் என்கிறாள் இந்தத் தலைவி..

  பாடல் இதோ..

  தண் கடல் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை
  நாரை நிரைபெயர்ந்து அயிரை ஆரும்
  ஊரோ நன்றுமன், மரந்தை
  ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.


  குறுந்தொகை
  கூடலூர்க் கிழார்.
  காப்பு மிகுதிக்கண், தோழி தலைமகட்கு உரைத்தது


  தமிழ்ச்சொல் அறிவோம்

  படுதிரை - ஒலிக்கும் அலை
  பறை - சிறகு
  நாரை - கொக்கு
  காப்பு - காவல்
  புலம்பு - தனிமை

  தொடர்புடைய இடுகைகள்
24 கருத்துகள்:

 1. இலக்கிய வரிகளை விளக்கிய விதம் அருமை .

  பதிலளிநீக்கு
 2. குறுந் தொகைக் காதலே நற்றமிழ் விருந்துதானே முனைவரே!
  விளக்கம் அருமை1

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. பிரிவின் வலி சொல்லும் இலக்கியப்பாடல் பகிர்வு அருமை!

  பதிலளிநீக்கு
 4. நாரை.., செந்நாரை இந்த பறவைகளெல்லாம் இப்போதும் இருக்கிறதா முனைவரே ..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கின்றன நண்பா.
   நாரையை நாம் இன்று கொக்கு என்று அழைக்கிறோம்.

   நீக்கு
 5. Dear Ghunaselan Sir,
  Vanakkam. This is Manikandan, Ex, NCC Officer, KSR. Do u remeber me. Well. When i was seeing some articles in Tamilmanam.net, i caught ur blog. I am a regualar reader of Tamilmanam. I have seen lot of blogs. Some blogs only attracted me. Of course ur blog. Ur article and other things are good. keep it up.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு நண்பரே தங்களை மறக்கமுடியுமா?

   கம்பீரமான தங்கள் தோற்றம்,
   கடமையுணர்வு,
   காலம் தவறாமை எனத் தங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள நிறைய இருந்தன.
   தாங்கள் என் வலையைப் பார்வையிட்டமையும், மறுமொழி தந்தமையும் என் நண்பர்களிடம் மிகவும் பெருமையாகக் கூறினேன்.

   மிக்க மகிழ்ச்சி நண்பரே.

   நன்றி.

   நீக்கு
 6. ''..காதலர்களை யாரும் சிறைப்படுத்தத் தேவையில்லை. இவர்களே இவர்களைச் சிறைப்படுத்திக்கொள்வார்கள். இவர்களுக்கு தம்மைச் சுற்றி எத்தனைபேர் இருந்தாலும் கண்களுக்குத் தெரியாது. அதனால் பலநேரங்களில் இவர்கள் தனிமையில் வாழ்வதாகவே எண்ணிக்கொள்வார்கள்...''
  அருமை...ரசித்தேன்...நன்றி...இன்று எந்த விதத் தொல்லையுமின்றி வந்து போகிறேன். இப்படிச் சொல்லவே பயம் மறுபடி தடை வருமோ என்று....(நன்றி என் கணனிக்கு)
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 7. நல்ல பதிவு நண்பரே! இலக்கியத்தின் மடியில் இளைப்பாறுவது என்னவொரு சுகம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலக்கியநயம் உணர்ந்த தங்களைப் போன்றவர்களிடம் இவ்விலக்கியக் காட்சிகளைக் கொண்டுவருது என்னவொரு சுகம்??

   நீக்கு
 8. தமிழ் பாடலும் பதிவும் அருமை...மிக நன்று..பாராட்டுகள் ஐயா..

  பதிலளிநீக்கு
 9. ஆதலின் காதல் செய்வீர்
  என்று
  சொல்லாமல் சொல்லிய பதிவு...
  இரு மனங்களின் கூடுதல்
  நறுமணமாய் வீசுகிறது முனைவரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் தொடர்வருகைக்கும் இலக்கிய நயம் பாராட்டலுக்கும் நன்றி நண்பரே.

   நீக்கு