வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

வேக வேகமா..

பாய்ச்சல்
வேக வேகமா, உணவைக்கூட வேகாம வேகாம சாப்பிட்டு எங்கே ஓடுறோம்...
எங்கோ ஓடுறோம்..
எல்லோரும ஓடுறாங்க..
நாமும் ஓடுவோம்...

நாம் எந்த வேலை செய்தாலும் அவசரம், அவசரம், அவரசம்..
அதனால் இந்த மண்ணைவிட்டும் அவசரமாகவே சென்றுவிடுகிறோம்.

அந்தக் காலத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்பவர்கள் இருந்தார்கள். ஒரே நேரத்தில் எட்டு செயல்கள் செய்பவர்களை அட்டாவதாணி என்றும் ஒரே நேரத்தில் நூறு செயல்கள் செய்தவர்களை சதாவதாணி என்றும் 
அழைத்தார்கள்.


உங்கள் வேலையை வேகமாக முடிக்க ஒரே வழி
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்வது

என்றொரு பொன்மொழி உண்டு. பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழியும் இங்கு சிந்திக்கத்தகதாகவுள்ளது.
என்னுடைய அனுபவத்தில் ஒருவேலையை விரைவாக முடிக்க ஒருநேரத்தில் ஒரு வேலை மட்டுமே செய்கிறேன். 


உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் பாய்ச்சல் என்றொரு கதை நினைவுக்கு வருகிறது...

ரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும்
விறகுவெட்டிக்குப் பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்துபோனது.

'இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது - ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?' என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

'மரங்கொத்தியால் முடியாது' என்றது கயிறு.
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?'
கயிறு சொன்னது :-

'நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை'தொடர்புடைய இடுகை


16 கருத்துகள்:

 1. இன்றைய உலக வாழ்வினை மிக அழகாய் உணர்த்தி
  உள்ளீர்கள் .தத்துவமும் விளக்கமும் அருமை!..தொடர
  வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 2. //நாம் எந்த வேலை செய்தாலும் அவசரம், அவசரம், அவரசம்..அதனால் இந்த மண்ணைவிட்டும் அவசரமாகவே சென்றுவிடுகிறோம்//

  //நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை//

  இரண்டுமே அருமையான சிந்தனை நண்பரே! மனதில் பதியம் செய்துவைத்துக்கொள்ள வேண்டியது!

  பதிலளிநீக்கு
 3. அருமையான கருத்து
  சுருக்கமாக ஆயினும்
  மனதில் நஆழமாகப் பதியும் வண்ணம் உள்ள
  கதையை பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. கருத்தை சுருக்கமாக அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 5. நிதானம் பிரதானம் என்பதை அருமையாக விளக்கி உள்ளீர்கள் சார்... முடிவில் கதை : சூப்பர்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. அவசர அவசரமா பின்னூட்டம் போடாம நிதானமா போடுறேன்.

  பதிவு நல்ல்ல்ல்லா இருக்குங்க.

  பதிலளிநீக்கு