தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து
இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள
பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற
கல்லூாிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு
கேட்டுக்கொண்டுள்ளன. அதற்கிணங்க,
கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாியில்,
தாளாளா் அாிமா கே.எஸ்.ரங்கசாமிஎம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன்,
செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா
சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா்
மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை
இனிதே தொடங்கப்பட்டது.
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக, முனைவா் இரா.குணசீலன் அவா்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாா்.
கணித்தமிழ்ப் பேரவையின் நோக்கங்கள்....
1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்....
