Sunday, May 29, 2011

நீங்க தீவிரவாதியா..?

கண் துடைப்புக்காக நடத்தப்படும்
நேர்முகத்தேர்வுகளின் போது..

தன் கடமையைச் செய்ய
இலஞ்சம் கேட்கும்
அரசு அலுவலர்களைக் காணும்போதும்..

அரசுப் பணியை எதிர்பார்க்காத பட்டதாரி
சுயதொழில் தொடங்க
வங்கிக் கடன் கேட்டால்
இழிவாகப் பேசும் அதிகாரிகளைச் சந்திக்கும்போது..

அடுத்த வேளை சோற்றுக்குக் கூட
வழியில்லாதவர்கள் பலர் இருக்க..
ஏழேழு தலைமுறைக்கு
சொத்துசேர்க்கும் அரசியல்வாதிகளைக்
காணும்போது

கோயிலில் மணிக்கணக்கில் நாம் நிற்க
பணம் படைத்தவரை மட்டுமே உடனே
சந்திக்கும் கடவுள் சிலைகளைக் காணும் போது


கல்வி கடைசரக்காகும்போது
உணவுப் பொருள்களில் கலப்படத்தை உணரும் போது
ஒருவர் பொய் சொல்லி வழக்கில் வெற்றிபெறும் போது
சாலை விதிகளை மதிக்காதவர்களைக் காணும்போது
குடிசைகளையும் கோபுரங்களையும் ஒப்பிட்டுக் காணும்போது

இப்படி ஒவ்வொரு நாளும் ஓராயிரம் சூழல்களை
நாம் ஒவ்வொருவரும் சந்திக்கிறோம்.

இச்சூழல்களையெல்லாம்.....
நாம் எப்படி எதிர்கொள்கிறோம், நமக்கு எழும் கோபங்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் நாம் யார் என்ற மதிப்பீடே அடங்கியிருக்கிறது.

1. சராசரி மனிதரா? (தமக்குள்ளே பேசிக்கொண்டு அடுத்த வேளையைப் பார்ப்பவர்)


2. அரசியல் வாதியா? (இந்த சிக்கல்களையெல்லாம் சொல்லி இதை நான் மாற்றிக் காட்டுகிறேன் என்று ஓட்டு கேட்பவர்.)3. சினிமாக்காரரா? (இந்த பிரச்சனைகளை மாற்றுவதாக படம் எடுத்து பணம் பார்ப்பவர்)

4. ஊடகவியலாரா? ( இந்த சமூக அவலங்களை ஆங்காங்கே சொல்லி சினிமாவும், கிரிக்கெட்டும் தான் நாடு வல்லரசாகத் தேவையெனச் சொல்பவர்)5. ஆன்மீகவாதியா? (கடவுள் இருக்கிறார் அவர் தான் இந்த சோதனைகளைத் தருகிறார். அவரே மாற்றுவார் என தன்னைத் தேற்றிக்கொண்டு கோயில் உண்டியல்களை நிறைச் செய்பவர்)

6. தீவிரவாதியா ? (குழந்தையாகப் பிறந்து சமூக அவலங்களால் அவமதிக்கப்பட்டோ, தன்னறிவு இல்லாமலோ தீவிரவாதியாக மாறி தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் சிறைக் கம்பிகளுக்கு உள்ளேயோ!! வெளியேயோ! இருப்பவர்)
மேல்கண்ட வகைப்பாட்டில் நான் சராசரி மனிதன் என்னும் வகை சார்ந்தவன்.

நீங்க....?

23 comments:

 1. நியாயமான ஒரு ஆதங்கம் நண்பரே..

  ReplyDelete
 2. முதன்முதலில் வருகிறேன்.. அசத்தலான பதிவு நண்பரே.. இனி தொடர்ந்து வருவேன்..

  ReplyDelete
 3. நானு உங்க இந்த இடுக்கைக்கு பின்னூட்டம் போடுபவன்...


  ( வலுத்தவன் ஜெய்துகொள்ளலாம் என்ற விதியை நான் முழுவதுமாக நம்பி பல வருடங்களாச்சு )

  ReplyDelete
 4. தங்கள் ஆதங்கம் மிகச்சரியே.
  தீவிரவாதிகள் தானே உருவாவதில்லை. சமூக அவலங்களைக்கண்டு கொதித்தெழுவதால் அவர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 5. ஏனையோரை விட சராசரிகள் குழந்தையை போன்றவர்ள். கவலையை மறக்க கூடியவர்கள்.

  ReplyDelete
 6. புரியுது உங்கள் ஆதங்கம்

  ReplyDelete
 7. @மதுரன் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மதுரன்.

  ReplyDelete
 8. @ஷர்மிளா

  வலுத்தவன் ஜெய்துகொள்ளலாம் என்ற விதியை நான் முழுவதுமாக நம்பி பல வருடங்களாச்சு )

  சரியான புரிதல்.

  ReplyDelete
 9. அனைவருக்கும் உள்ள ஆதங்கங்கள் இவை .இந்த நிலை மாறவேண்டும் என்பதே நம் ஆவல் .

  ReplyDelete
 10. நண்பரே., ஷர்மிளா என்ற பெயரில் வந்த பின்னூட்டம் எனதுதான்., இன்றுதான் மனைவியும் பதிவுலகுக்கு வருகிறார்., அவரது மெயில் திறந்திருந்ததால் அவரது பெயரில் எனது பின்னூட்டம் வந்துவிட்டது.

  ReplyDelete
 11. அவசியம் தேவையான பதிவு

  ReplyDelete
 12. என்ன வாதியா இருந்தாலும் தப்பி வாழ்ந்துகொள்வான் சுயலநலவாதியாய்.
  இதில் எல்லாவற்றுக்குள்ளும் அகப்படுவன் சராசரி மனிதன்தான் !

  ReplyDelete
 13. வ‌ய‌லில் க‌ளை பெருகி விட்டால் விவ‌சாயி கையைக் க‌ட்டிக்கொண்டு விதியை நொந்து கொண்டு இருப்ப‌தில்லை. ந‌ம்முடைய‌திலிருக்கும் அக்க‌றை ச‌ற்று நாட்டின் மேலுமிருந்து அதை செய‌ல் ப‌டுத்த‌ விழைந்தால் த‌ங்க‌ள் ப‌திவில் ம‌ற்றொரு வ‌கை ம‌னித‌ன் உருவாக‌லாம்.

  ReplyDelete
 14. Superb...!

  நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !

  http://erodethangadurai.blogspot.com/2011/05/must-read_31.html

  ReplyDelete
 15. @koodal bala கருத்துரைக்கு நன்றி பாலா.

  ReplyDelete
 16. @ஷர்புதீன் தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 17. @ஈரோடு தங்கதுரை தங்கள் வருகைக்கு நன்றி தங்கதுரை.

  ReplyDelete