வெள்ளி, 27 மே, 2011

அறிவும் அரைகுறையறிவும் (கலீல் ஜிப்ரான்)

ஒவ்வொருவரும் தாம் சொல்வததான் சரி என்றே நம்புகிறோம்.
நம்மைப் போலவே அடுத்தவருக்கும் சிந்தனை இருக்கிறது ,அவரின் சிந்தனைகள் கூட சரியானதாக இருக்கலாம் என்பதை ஏற்க மறுக்கிறது மனித மனம். நாம் ஒரு நொடியாவது சிந்திக்க நான் விரும்பிய தத்துவக்கதை இதோ....


நான்கு தவளைகள், நதியில் மிதக்கும் ஒரு மரக்கட்டையில் அமர்ந்திருந்தன.
திடீரென வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கட்டை மெதுவாக நீரோடையில் நழுவிச் சென்றது.
தவளைகள் தாம், இவ்வாறு ஒருமுறைகூட மிதந்து சென்றதில்லையே என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தன.

ஓடும் போது,
முதல் தவளை பேசியது...


“உண்மையில் இது ஓர் அதி அற்புதமான மரக்கட்டையாகும். ஏதோ உயிருள்ளது போல செல்கிறது. இதுபோன்ற கட்டையினை இதுவரை நான் அறிந்ததில்லை!”

பிறகு
இரண்டாம் தவளை பேசியது..
“இல்லை என் நண்பனே, மற்ற மரக்கட்டைகள் போல் தான் இதுவும் நகர்வதில்லை. கடலை நோக்கிச் செல்லும். நதிதான் நம்மையும் இந்தக் கட்டையையும் அதனுடன் இழுத்துச்செல்கிறது.“

மூன்றாம் தவளை சொன்னது...
உண்மையில் எது நகர்கிறது என தம்முள் வாதிட ஆரம்பித்தன. இந்தச் சண்டை வளர்ந்தது. உரத்துச்சூடுபிடித்தது. அவர்களுள் ஒரு உடன்பாடில்லை.

அவை, அதுவரை கவனமாய் அமைதிகாத்து வாக்குவாதங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நான்காவது தவளையை நோக்கித் திரும்பி அதன் கருத்தைக் கேட்டன.

நான்காம் தவளை சொன்னது..

“உங்கள் ஒவ்வொருவரின் கருத்தும் சரி.
யாருடையதும் தவறில்லை.
நகர்தல் இந்த மரக்கட்டையில், நீரில், நம் சிந்தனையிலும் உள்ளது“


மூன்று தவளைகளும் பெருங்கோபமுற்றன.
மூன்று தவளைகளும் ஒன்றுசேர்ந்து நான்காம் தவளையை மரக்கட்டையிலிருந்து நதியில் பிடித்துத் தள்ளிவிட்டன.

12 கருத்துகள்:

 1. தனிநபர் கருத்துக்கும் பேச்சுக்கும் மரியாதை இருந்தால் எல்லாசரியாகிவிடும்....

  பதிலளிநீக்கு
 2. நகர்தல் இந்த மரக்கட்டையில், நீரில், நம் சிந்தனையிலும் உள்ளது“

  நம்மைப் போலவே அடுத்தவருக்கும் சிந்தனை இருக்கிறது ,அவரின் சிந்தனைகள் கூட சரியானதாக இருக்கலாம் என்பதை ஏற்க மறுக்கிறது மனித மனம்//

  க‌தையும் க‌லீல் ஜிப்ரான் வ‌ரிக‌ளும் வெகுவாக‌க் க‌வ‌ர்ந்த‌து.

  பதிலளிநீக்கு
 3. எப்படித் தம்பீ
  எழுதுவீர் தினமே
  செப்படி வித்தையா
  கேட்குதே மனமே
  ஒப்பிட உமக்கே
  ஒருவரும் இல்லை
  இப்படி இங்கே
  எழுதியோன் அண்ணன்

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 4. நல்ல கருத்துள்ள நகைச்சுவையான கதை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல கருத்து சார்.. தனி மனித கருத்துக்கு எங்குமே வலிமை குறைவு தானே ...

  பதிலளிநீக்கு
 6. உண்மைதான் எங்களின் சொந்தக் கருத்தோடு அடுத்தவர் கருத்தையும் சேர்த்துப் பார்த்து ஒரு முடிவு எடுப்பது எவ்வளவோ சிறந்தது !

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சௌந்தர்
  மகிழ்ச்சி நிலாமகள்
  நன்றி சர்புதின்

  ஆர்வம் தான் புலவரே...

  நாளை பற்றி யாருக்குத் தெரியும்...
  இன்றே நம்மால் முடிந்ததைச் செய்வோமே என்ற எண்ணம் தான்..

  பதிலளிநீக்கு
 8. நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா
  உண்மைதன் கந்தசாமி
  நன்றி கிருஷ்ணா
  புரிதலுக்கு நன்றி ஹேமா

  பதிலளிநீக்கு
 9. எனக்கு கலீல் ஜிப்ரானின் கவிதைகள், கதைகள் மிகவும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி.
  பூமியில் நடக்கும் அனைவருடனும் நான்
  நடக்க விரும்புகிறேன்....
  ஊர்வலம் என்னைக் கடந்து செல்வதை
  எல்லாம் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது...!
  -கலீல் ஜிப்ரான்.

  பதிலளிநீக்கு