Thursday, September 15, 2011

?? விடைதெரியாத கேள்விகள் ??கொடுத்தால் குறையாதது?
அ. அன்பு ஆ. கல்வி

பெற்றால் நிறையாதது?
அ. ஆசை ஆ. புகழ்

பணத்தைவிட மதிப்புமிக்கது?
அ. போதுமென்ற மனம்
ஆ. ஈகை குணம்


உலகில் விலைமதிக்க முடியாதது?
அ. தாயின் அன்பு
ஆ. குழந்தையின் சிரிப்பு

மதிப்பற்றது?
அ.ஈயாதவன் செல்வம்
ஆ.உழைக்காதவன் வணங்கும் கடவுள்

தவிர்க்கவேண்டியது?
அ. அன்பின்றிப் பெறும் உணவு
ஆ.வரவுக்கு மேல் செய்யும் செலவு


அழகு எங்கு உள்ளது?
அ.காண்பிக்கும் கண்ணில்
ஆ.விரும்பும் மனதில்


சுவையான உணவு?
அ.பசித்த பின் உண்பது
ஆ.பகிர்ந்து உண்பது


அறிவு எனப்படுவது?
அ.அறிதல்
ஆ.அறியாமையை உணர்தல்


மறக்க முடியாதது?
அ.வெற்றி
ஆ.தோல்வி


மறக்கக் கூடாதது?
அ.நமக்கு செய்த உதவி
ஆ.நமக்காக அழுத கண்ணீர்


முட்டாள் என்பவன்?
அ.ஒரே தவறைத் தொடர்ந்து செய்பவன்
ஆ.தான் ஒரு முட்டாள் என்பதை அறியாதவன்


எல்லோராலும் முடியாதது?
அ.சிந்திப்பது
ஆ.சிந்தனையை அடுத்தவருக்குப் புரியுமாறு வெளிப்படுத்துவது


சிரிப்பை வரவழைப்பது?
அ.அரசியல்வாதிகளின் பேச்சு
ஆ.ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவு


நண்பர்களே..
கீழே கொடுக்கப்பட்ட பதில்கள் இரண்டுமே
சிலருக்குச் சரியாகத் தோன்றலாம்!
சிலருக்குத் தவறாகத் தோன்றலாம்!

இந்த உலகில் எல்லாம் இப்படித்தான்!
இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோமா? மூன்றாவதாக ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோமா? என்பதில் தான் நம் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது

29 comments:

 1. உலகில் விலைமதிக்க முடியாதது?
  அ. தாயின் அன்பு
  ஆ. குழந்தையின் சிரிப்பு

  சூப்பர் .........

  நன்றி .......

  ReplyDelete
 2. உண்மைதான். நீங்கள் குறிப்பிட்டு இருப்பது சரி. எனக்கும் ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லை. அது..
  முனைவர் இரா.குணசீலன் அவர்களின் பதிவில் பிடித்தது?
  அ) அவரது அழகு தமிழ்
  ஆ) அவரது எளிய நடை

  ReplyDelete
 3. உங்கள் பதிவு அருமை...

  ஆனால் உண்மை எதுவெனில் நீங்கள் கொடுத்த பதிலை விட மூன்றாவது ஒரு பதிலை தேடும் இளைஞர்கள்தான் அதிகம். விலைமதிக்க முடியாதது எது? தாயின் அன்பா? அல்லது குழந்தையின் சிரிப்பா? என்று நீங்கள் கேக்கும் போது என் காதலியின் சிரிப்பு என்று அவனது சிந்தனை போகும்...இதுதான் இன்றைய சூழ்நிலை.

  அது என்ன இவன் சொல்வது என்று நினைப்பார்கள், அல்லது இதெல்லாம் இப்போ நாட்டுக்கு தேவையா என்று வியாக்ஞானம் பேசுவார்கள்?
  இருப்பதில் சுகம் தேட மாட்டோம், இல்லாததை தேடி அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்....

  ReplyDelete
 4. உண்மையில் விடை தெரியாத கேள்விகள் தான்

  ReplyDelete
 5. இரண்டு விடைகளும் பொருத்தமே..

  ReplyDelete
 6. //உலகில் விலைமதிக்க முடியாதது?
  அ. தாயின் அன்பு
  ஆ. குழந்தையின் சிரிப்பு//

  இந்த கேள்விக்கு அவரவர் பதில்களை சேர்க்க முடியும், இரண்டோடு நிற்கும் கேள்வி அல்ல இது.. என்னிடம் கேட்டால் என் அப்பாவின் கோபம், தூரம் நின்று ஏங்கும் பாசம்.. என்று அடுக்கி கொண்டே போவேன்..
  ஆனால் சிந்திக்க வேண்டிய பதிவு முனைவரே..

  ReplyDelete
 7. //இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோமா? மூன்றாவதாக ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோமா? என்பதில் தான் நம் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது//

  சரியாகச் சொன்னீர்கள் முனைவரே...

  ReplyDelete
 8. ..முனைவரே உங்கள் சிந்தனைக்கு அளவேயில்லை..
  ..அருமை..

  ReplyDelete
 9. எல்லா கேள்விகளின் இரு விடைகளுமே பொருந்தும் பொருந்தாமலும் இருக்கும் அந்த அந்த நேரத்தை பொறுத்து ஆனால் தங்களின் சிந்தனை அருமை மிகவும் ரசித்தேன்

  இரு கரை கொடுத்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பதென்பதே வாழ்வாக்கி அதில் தவறாய் ஒன்றையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து அதை சமாளிப்பதே போராட்டமாய் கடவும்ள் மிக சூட்சமமாக தான் செய்திருக்கிறார்

  நன்றி முனைவரே

  ஜேகே

  ReplyDelete
 10. தமிழ் மணம் ஆறு

  ReplyDelete
 11. உண்மைதான் நண்பரே இவை இரண்டும் இல்லாமல்

  மற்றொரு விடையை தேடி சில சமயங்களில்

  மனம் செல்லும் .

  சிந்திக்க தூண்டிய தங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 12. பகிர்விற்கு நன்றி சார்.

  ReplyDelete
 13. அன்பின் முனைவரே
  இன்றொரு முத்துப் பதிவு.....
  என்னைப்பொருத்தவரையில்
  ஒவ்வொரு கேள்விக்கான இரண்டு விடைகளுமே
  சரியாகத்தான் தோன்றுகிறது....
  ஆயினும் சில கேள்விகளுக்கு அதையும் தாண்டி
  வேறு ஒன்றும் உள்ளது என்பதை
  மனம் தேடிக்கொண்டு இருக்கிறது...


  சிரிப்பை வரவழைப்பது.....
  பணத்தைவிட மதிப்புமிக்கது?
  முட்டாள் என்பவன்?
  உலகில் விலைமதிக்க முடியாதது?

  இதுபோன்ற கேள்விகள் தான் அவைகள்...

  சிந்திக்க வைத்தமைக்கு நன்றி முனைவரே..

  ReplyDelete
 14. ஆனாலும் நீங்கள் சொல்லும் இரண்டுமே எனக்கு சரியாகவே தோன்றுகிறது. மூன்றாவது பதிலும் தோன்றுகிறது. .

  ReplyDelete
 15. பகிர்வுக்கு நன்றி

  கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

  4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

  ReplyDelete
 16. எல்லோராலும் முடியாதது?
  அ.சிந்திப்பது
  ஆ.சிந்தனையை அடுத்தவருக்குப் புரியுமாறு வெளிப்படுத்துவது//

  அடடடடடடா அசத்தல் அசத்தல்!!!!

  ReplyDelete
 17. நல்ல அலசல். நீங்கள் கூறியதுபோல் இரண்டு விடையுமே சரியென்று சிலவற்றிலும், மூன்றாவதாயொரு விடை சிலவற்றிலும் தோன்றுகிறது. மீண்டுமொரு சுய அலசலுக்கான பதிவு. மிகவும் நன்றி.

  ReplyDelete
 18. ///உலகில் விலைமதிக்க முடியாதது?
  அ. தாயின் அன்பு
  ஆ. குழந்தையின் சிரிப்பு///

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 19. நன்றி ஸ்டாலின்
  நன்றி நடனசபாபதி
  வருகைக்கு நன்றி நண்டு
  அழகாகச் சொன்னீர்கள் சிவா

  ReplyDelete
 20. நன்றி இராஜா
  நன்றி கருன்
  மதிப்பீட்டிற்கு நன்றி சூர்யஜீவா

  ReplyDelete
 21. கருத்துரைக்கு நன்றி சபரி
  தொடர் வருகைக்கு நன்றி வெங்கட்
  உண்மைதான் இன்றைய கவிதை

  ReplyDelete
 22. மகிழ்ச்சி எம்ஆர்
  வருகைக்கு நன்றி சசி
  புரிதலுக்கும் மதிப்பீட்டிற்கும் நன்றி மகேந்திரன்
  மதிப்பிட்டுக்கொண்டமைக்கு ந்னறி திருமதி ஸ்ரீதர்

  ReplyDelete
 23. வருகைக்கு நன்றி சதீஷ்
  கருத்துரைக்கு நன்றி மனோ
  நன்றி கீதா
  நன்றி ஆயிஷா

  ReplyDelete
 24. ''...அறிவு எனப்படுவது?
  அ.அறிதல்
  ஆ.அறியாமையை உணர்தல்...''

  ''..எல்லோராலும் முடியாதது?
  அ.சிந்திப்பது
  ஆ.சிந்தனையை அடுத்தவருக்குப் புரியுமாறு வெளிப்படுத்துவது..''
  இவை பொன்னான கேள்வி-பதில்கள். எப்படி இப்படி சிந்தித்து எழுதுகிறீர்கள்!!!.. வியந்து வியந்து ஆக்கங்களைப் படிக்கிறேன். மிக சிறப்பான தேடல்கள். சரியான பதில்கள். 3வது விடையும் பலருக்கு வரலாம். இப்போதைக்கு எனக்கு வாவில்லை. மிக அருமையாக உள்ளது. லிங்க் போட்டதற்கு மிக்க மிக்க நன்றி...நன்றி. இறை அருள் கிட்டட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. தங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும்
  கருத்துரைக்கும் நன்றி வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete
 26. கற்று தருவது நீர் கற்க வேண்டியது நான் வாழ்வில் பல நேரங்களில் மனதிற்கு புரியாத வினாக்கள் தோன்றும் அவற்றில் ஒன்று இந்த அருமையான வாழ்வியல் துடிப்பு புதிர்
  வாழ்த்துக்கள் அண்ணா தங்கள் வளர்ச்சியை நேசித்து சுவாசித்து கொண்டிருக்கும் அன்பு தமிழ் மாணவன்

  ReplyDelete