வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 24 செப்டம்பர், 2011

A Chariot Wheel (புறநானூறு)

அறிவுக்கு மொழி எதுவும் கிடையாது!

தமிழ் மட்டுமே மொழி! பிற மொழிகளில் எதுவுமே இல்லை என்பது அறியாமையுடைய எண்ணமாகும்!

தமிழ் மொழியின செல்வங்களைப் பிற மொழியினர் உணரவும், பிறமொழியின் அறிவுச் செல்வங்களை நாம் உணரவும் நம்மால் முடிந்த வழிவகை செய்தல் வேண்டும்.

என் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்களைக் கண்டு பல முறை வியந்து நின்றிருக்கிறேன்!

இதோ வீரம் என்பதற்கான அடையாளமாக ஒரு புறப்பாடல்..

Enemies
take care
when you enter
the battle
and face
our warrior

who is like a chariot wheel
made thought fully over month
by a carpenter
who tosses off eight chariot
in day


களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.


புறநானூறு -87
திணை - தும்பை
துறை - தானை மறம்

அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது.


தானை - படை (படைகளின் வலிமையும் வீரமும் கூறுவது தானை மறமாகும்)

பகைவீர்!
போர்க்களம் புகுதலைத் தவிருங்கள்.
போரை எதிர்நோக்கியவனாக எம்மிடத்தும் ஒருவன் உள்ளான்.
அம்மறவன்,
ஒரு நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன்,
ஒரு மாதம் முயன்று செய்த ஓர் தேர்க்காலுக்கு ஒப்பானவன்!


அதனால் அவனை எதிர்ந்து நீங்கள் அழிந்து போகவேண்டாம் என்று “களம் புகல் ஓம்புமின் என்றார்.

இப்பாடலில் அதியமானின் வீரத்தை படைவீரனின் வீரமாகக் கூறியதால் “தானை மறமானது“

27 கருத்துகள்:

 1. நண்பரின் வீரம் பாட அவ்வைக்கு கசக்கமா என்ன?? நட்புக்கு இலக்கணமானவர்கள் அல்லவா இருவரும்!

  ஆங்கில மொழிபெயர்ப்பு அருமை. நம் தமிழ்மொழி திக்கெட்டும் பரவச்செய்வது நம் கடமைகளில் ஒன்றென தாங்கள் எடுத்துரைத்தது நன்று. நன்றி

  பதிலளிநீக்கு
 2. என்ன ஒரு படைப்பு!!!அதியமான்....ம்ம்!!

  பதிலளிநீக்கு
 3. அதிக நாட்களுக்கு அப்புறம் வந்திருக்கேன்...வந்து பார்க்கிறது!

  பதிலளிநீக்கு
 4. நமது மொழியின் சிறப்புகளை ஆங்கிலத்திலும் சொன்னால் நன்றாகத்தான் இருக்கிறது.... தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்...

  பதிலளிநீக்கு
 5. ரசித்தேன், சிறப்புடைத்து. அருமை. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 6. வீரத்தை பற்றிய பாடலை விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. பணி தொடர வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 8. அவன் வாழ நெல்லிக்கனி கொடுத்தவள் ஆயிற்றே.
  புகழ் பாடாமல் இருப்பாரா??
  சக்கர வியூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் முனைவரே.
  மகாபாரதத்தில் அபிமன்யூ அமைத்த சக்கர வியூகம்
  பற்றி பேராசிரியர் இளம்பிறை.மணிமாறன் அவர்கள் சொற்பொழிவில் கேட்டிருக்கிறேன்.
  இங்கே உங்கள் படைப்பில் அருமையான விளக்கத்துடன்
  அருமை அருமை.

  பதிலளிநீக்கு
 9. perfect. ஔவையின் பாடல்கள் நிறைய வீரம் மட்டுமல்ல சற்று உயர்வுபடுத்தி கூறினாலும், எதிரிலிருப்பவரை நம்பவைக்கும்படியாக - ஒரு பொருளை பிரமோட் செய்யும் வியாபார நுணுக்கத்தையும் கற்றுக்கொள்ள முடிகிறது.

  பதிலளிநீக்கு
 10. வீரத்தை சொல்லும் படைப்பு. அருமை முனைவரே

  பதிலளிநீக்கு
 11. பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடி நாங்களும் சுவைக்கத்தரும் உங்கள் சேவை மகத்தானது.

  பதிலளிநீக்கு
 12. ஒரு நாளில் எட்டு தேர்களை உருவாக்குபவன் ஒரு திங்கள் முயன்று செய்த தேர்க்காலைப் போன்றவன்! என்ன ஒரு வியப்பான உவமை! பழம்பாடல்களை அறியத் தரும் தங்கள் பதிவுகளுக்கு என் நன்றியும் பாராட்டும்.

  பதிலளிநீக்கு
 13. வீரத்தை பற்றிய அருமையான பாடல்,அழகான விளக்கம்.நன்றி ஐயா, பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 14. பைந்தமிழ்ப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் மோர்சி வரவேற்கத்தக்கது.பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 15. //ஒரு நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன்,
  ஒரு மாதம் முயன்று செய்த ஓர் தேர்க்காலுக்கு ஒப்பானவன்!//
  ஆகா!அருமை!

  பதிலளிநீக்கு
 16. பாடலும் அதற்கான விளக்கமும் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. நன்றி நண்டு
  மகிழ்ச்சி கடம்பவனக் குயில்
  நன்றி மைந்தன் சிவா
  நன்றி சசி
  நன்றி இலங்கா திலகம்
  நன்றி வெங்கட்
  நன்றி சூர்ய ஜீவா

  பதிலளிநீக்கு
 18. நன்றி பாரத் பாரதி
  நன்றி கருன்
  நன்றி இராஜா
  நன்றி புலவரே

  பதிலளிநீக்கு
 19. நன்றி மகேந்திரன்
  உண்மைதான் சாகப்பரி
  நன்றி காந்தி
  நன்றி அம்பலத்தார்
  மகிழ்ச்சி கீதா

  பதிலளிநீக்கு
 20. நன்றி இராம்வி
  நன்றி கோகுல்
  நன்றி சென்னைப் பித்தன் ஐயா
  மகிழ்ச்சி பிரகாஷ்
  நன்றி சதீஷ்
  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு