வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 12 செப்டம்பர், 2011

எதை விட்டுச் செல்வீர்கள்..??


சுயநலம் நிறைந்த இவ்வாழ்க்கையில்...

நான்,எனது என்றே வாழ்ந்து மடிகிறோம்!

நமக்குப் பின்..
நாம் வாழ்ந்த இந்த மண்ணுக்கும்,
நாம் சார்ந்து வாழ்ந்த மனித சமூகத்துக்கும் எதை விட்டுச் செல்கிறோம் என்று எனக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை மாணவர்களிடம் தேடினேன்.

அன்பு மாணவர்களே நீங்க உங்க வாழ்க்கைக்குப் பின்னர் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்வீர்கள்..?
என்று கேட்டேன்.

மாணவர்களின் பதில்..

1. வைரம்
2. தங்கம்
3. பிளாட்டினம்
4. வெள்ளி
5. நிலம்
6. பணம்
7. கண்
8. இதயம்
9. உடல் தானம்
10. நல்ல ஒழுக்கம்
11. நல்ல நட்பு
12. எதிரிகளே இல்லாத வாழ்க்கை
13. இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கான என்வாழ்க்கை
14. இப்படி மட்டும் வாழக்கூடாது என்ற என் வாழ்க்கை
15. மக்களுக்குப் பயன்தரும் நல்ல மரங்களை நட்டுச்செல்வேன்

என்று சொன்னார்கள்.

நீங்கள் சொன்ன பதில்களில் சில சுயநலமுடையனவாக, உங்கள் குடும்பம் சார்ந்த சிந்தனைகொண்ட பதில்களாக இருந்தன

சில பதில்கள் பொதுநலம் கொண்டனவாகப் பாராட்டத் தக்கனவாக இருந்தன.

மரம் வளர்ப்பேன், உடல்தானம் செய்வேன் என்பனபோன்றபதில்கள் உங்கள் எண்ணங்களின் மேன்மைக்குத் தக்க சான்றுகளாகவே விளங்குகின்றன என்று அவர்களைப் பாராட்டினேன்.

அப்போது ஒரு மாணவர்..
ஐயா எங்களையெல்லாம் கேட்டீங்க..
நீங்க அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்வீர்கள் என்று கேட்டார்.

1. என்னைச் சிந்திக்கச் செய்த நல்ல நூல்களைச் சேர்த்து வைப்பேன்.
2. என் வாழ்வில் நான் கண்ட அனுபவங்களைப் பதிவு செய்வேன்.
என்றேன்.


அன்பின் உறவுகளே இப்ப சொல்லுங்க...

நீங்க அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்வீர்கள்..??

20 கருத்துகள்:

 1. //என் வாழ்வில் நான் கண்ட அனுபவங்களைப் பதிவு செய்வேன்.//
  நீங்கள் செய்ய இருப்பதைத் தான் நானும் செய்ய விரும்புகிறேன் முனைவர் அவர்களே!

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு முனைவரே!

  நான், எப்படி வாழ்ந்தேன் என்பதையும்
  எப்படி வாழ வேண்டும் என்பதையும் சுய சரிதையாக எழுதி வைக்க முயல்வேன்
  தங்கள் வலை மிகவும் மெதுவாக அப்படியே நின்றுவிடுகிறது நீண்ட நேரம்
  மாணவர் கவிதைக்கு கருத்தனுப்ப
  முயன்று முடியாமல் போயிற்று
  என் இரண்டு பதிவுகள் தங்கள் கருத்துரைக்குக் காத்திருக்கின்றன
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. உயிர விட்டுட்டு போகணும் பாஸ் ....

  பதிலளிநீக்கு
 4. அன்பு மட்டுமே அழகு என்பதை விதைத்து விட்டு செல்வேன் முனைவரே.....

  பதிலளிநீக்கு
 5. நாட்டில் வாழ்ந்த தலைவர் மற்றும் பலர்
  தான் வாழ்ந்த காலத்திலும் சரி
  வாழாத காலத்திலும் சரி
  அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது-
  உயிர் மட்டுமே
  அந்த உயிரால்
  அனைத்து செயல்களையும் செய்ய முடியும்
  அப்படி பட்ட ஒன்றை
  நாம் வாழும் காலத்தில்
  பயன்படுத்துவதில்லை என்றாலும் கூட
  அடுத்த தலைமுறைக்கு
  விட்டு செல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணம் தான்
  எண்ணம் என்கின்ற நம் வாழ்வின்
  ஒளியான அனுபவம்
  ஆயிரமாயிரமண்டு பழமை அது
  இன்று புதுமை ஆகவே
  சிந்திக்க கூடிய ஆற்றலான நம்
  வாழ்வின் எழுத்து தான் இதுவே
  என் கருத்து தான் வாழ்த்துக்கள் cccc

  பதிலளிநீக்கு
 6. எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படி எல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன்.. ஆகையால் இப்படி தான் வாழ வேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்கு இருக்கிறது... என்ற கண்ணதாசனின் வரிகள் எனக்கும் உத்வேகம் தருவதால், நீங்கள் கூறிய இரண்டாவது முயற்ச்சியை, என் அனுபவ அறிவை, என் தவறுகளை, அதை சரி செய்யும் முறையை இந்த வலை தளத்தில் பதிவு செய்து என் பின் வரும் சந்ததியினருக்கு விட்டு செல்வேன்.. முடிந்தால் என் பின் வரும் சந்ததியினர் நான் பட்ட கஷ்டங்கள் இல்லாமல் வாழ வழி செய்து சந்தோஷமான வாழ்க்கை வாழ வகை செய்வேன்..

  பதிலளிநீக்கு
 7. அன்புநிறை முனைவரே....
  இதுவல்லவோ பதிவு...
  என் பார்வையில் கிராமியக் கலைகள்
  இன்றளவிலும் அழிந்தே காணப்படுகிறது.
  நம்மை அடுத்த தலைமுறைகள் வந்து
  பார்க்கையில் அதன் சுவடே இல்லாமல் போய்விடுமோ
  என்ற எண்ணம் தலைதூக்கி நிற்கிறது...
  அன்றைய ஜனதா கட்சி ஆறே மாதத்தில் தொடங்கப்பட்டது
  அதற்கும் அதன் பரவலுக்கும் அதன் தொலைத் தொடர்புக்கும்
  முக்கியமாகப் பயன்படுத்தப் பட்ட பாவைக்கூத்து
  முற்றிலுமாக அழிந்தே விட்டது...
  இது போன்ற செய்திகளை கவிதை மூலமாக
  பதிவாக்க வைத்து அடுத்த தலைமுறைக்கு
  எடுத்துச் செல்வதே என் எண்ணம்.....

  பதிலளிநீக்கு
 8. கண்தானம் செய்யவிரும்புகிறேன். அடுத்தத் தலைமுறையின் மனத்தில் நல்ல குணங்களையும் நற்பண்புகளையும், மனிதாபிமானத்தையும் விதைத்திருக்கிறேன், விருட்சமாய் வளருமென்ற நம்பிக்கையில்.

  பதிலளிநீக்கு
 9. நல்லொழுக்கம். இது வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல மிக அருமையான பதிவு நண்பரே..

  கண்தானம், உடல்தானம் என்பது பொதுநலமாக கருதினாலும் இவைகளில் பயன் பெருவது என்னவோ தனி ஒரு மனிதனே..(மன்னிக்கவும் இவைகள் வேண்டாமென்று நான் சொல்லவில்லை.. இவைகளிள் உள்ள உட்பயனை மட்டும்தான் சொல்கிறேன்.)

  அதனால்.. வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளையே வகுத்து கொடுப்பது தான் சிறந்தது என்பது என் கருத்து..

  ஏன்னென்றால் இப்பொழுது வாழும் இளைஞர்களே சரியான முறையில் வாழத் தெரியாமல் பலர் தடம் பரண்டு விட்டார்கள்... அடுத்த தலைமுறையினர் வாழ்க்கை எப்படி இருக்குமென்று கற்ப்பனையே செய்ய முடியவில்லை..

  பகிர்வுக்கு வாழ்த்துகள்.. நண்பரே...

  பதிலளிநீக்கு
 11. நல்ல கேள்வி... அதற்கு உங்கள் பதிலும் அருமை...

  நல்ல விஷயங்கள் பல நம்மில் பலரிடம் அழிந்து வருகின்றது... அதை நிச்சயம் எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என முயல்வது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. (தேடல்) நன்றி நண்டு.
  (அனுபவம்)நன்றி நடனசாபபதி ஐயா
  (அனுபவம்) நன்றி புலவரே.
  (கண்)நன்றி இராஜா
  (உயிர்)நன்றி ஸ்டாலின்
  (அன்பு) நன்றி மாயஉலகம்
  (எழுத்து)நன்றி மதன் மணி
  (அனுபவம்) நன்றி சூரியஜீவா

  பதிலளிநீக்கு
 13. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மகேந்திரன்.

  தாங்கள் செய்வது அரிய பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயன்படக்குகூடியது.

  தடைகள் பல வந்தாலும் தளராது தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நண்பா..

  பதிலளிநீக்கு
 14. (சிந்தனை) நன்றி நிரோஷ்
  (மனிதம்) நன்றி கீதா
  (அன்பு) நன்றி மனோ
  (கல்வி)நன்றி கருன்
  (நல்லொழுக்கம்) நன்றி காந்தி.
  (சிந்தனை) நன்றி இராஜா எம்விஎஸ்
  (கற்பித்தல்) நன்றி வெங்கட்

  பதிலளிநீக்கு