வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை
அடி மனதில் பதியவைத்த அம்மாவும் ஆசிரியர்தான்!

மதிப்பெண் எடுக்கக் கற்றுத்தருபவர் ஆசிரியராயினும்
மதிப்போடு வாழச் சொல்லித்தரும் தந்தையும் ஆசிரியர்தான்!

அன்பு ஆழமானது என்று எடுத்துரைப்பவர் ஆசிரியராயினும்
அன்பின் ஆழத்தை உணர்த்தும் காதலியும் ஆசிரியர்தான்!

இன்பதுன்பங்களை அடையாளப்படுத்துபவர் ஆசிரியராயினும்
இன்பதுன்பங்களில் துணைநிற்கும் மனைவியும் ஆசிரியர்தான்!

சிரித்துவாழ வேண்டும் என்று பாடம் புகட்டுபவர் ஆசிரியராயினும்

சிரித்துக் கொண்டே இருக்கும் குழந்தையும் ஆசிரியர்தான்!

நட்பின் இலக்கணத்தை எடுத்தியம்பியவர் ஆசிரியராயினும்
நட்பின் இலக்கணமாய் திகழும் நண்பர்களும் ஆசிரியர்கள்தான்!

போராட்டம் என்றால் என்ன என்றுரைப்பவர் ஆசிரியராயினும்
போராட்டத்தை ஏற்படுத்தும் எதிரியும் ஆசிரியர்தான்!

இதுதான் ஒழுக்கம் என்றுரைப்பவர் ஆசிரியராயினும்
இதுதான் வாழ்க்கை என உணர்த்தும் யாவரும் ஆசிரியர்தான்!

நிலம், நீர், தீ, காற்று, வான்..
பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என நாம்

திரும்பிப்பார்க்க,
போலச்செய்ய,
தன்னம்பிக்கைகொள்ள,
தவறுகளைத் திருத்திக்கொள்ளத் துணைநிற்கும்,
இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் கூட நமக்கு ஆசிரியர்தான்!


அதனால் இதுவரை.....
ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

இன்றுமுதல்...
காலைக் கதிரவனுக்கும்,
புல்லின் பனித்துளிக்கும்,
பூத்துச் சிரிக்கும் மலருக்கும்,
துயிலெழுப்பும் பறவைகளுக்கும் காலை வணக்கம் சொல்வோம்!

விலங்குகளின் விவாதத்தையும்,
மழையின் சொற்பொழிவையும்,
காற்றின் கவிதையையும்,
செவிமடுத்துக் கேட்டு அவற்றிடம் வினாத் தொடுப்போம்!

தாவரங்களின் அழிவையும்,
மனிதனின் இழிவையும்,
இயற்கையின் பெருந்தன்மையையும்,
ஆராய்ந்து தேர்வு எழுதுவோம்!

இவ்வாறு நம்மைச்சுற்றிய மனிதர்களிடமும், இயற்கையின் கூறுகளிடமும் பாடம் கற்ற நாம் நம்மையே மதிப்பீடு செய்து பார்ப்போம்...

பாடம் பயிற்றுவோர் நமக்கு முழு நேர ஆசிரியர்கள்!
உறவுகள் நமக்கு வாழ்நாள் ஆசிரியர்கள்!
சமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்!
நூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்!
பறவைகள் நம்மைப் பறக்கச் செய்த ஆசிரியர்கள்!
விலங்குகள் நம்மை மனிதனாக்கிய ஆசிரியர்கள்!
இயற்கையின் கூறுகள் நமக்கு என்றென்றும் ஆசிரியர்கள்! என்பது புரியும்.

இப்போது நமக்குத் தோன்றும்..
ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்! 
என்று!!


வாழ்க்கை என்னும் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஓராயிரம் பாடங்களை தினம் கற்று வருகிறேன்,

21ஆண்டுகாலம் நான் வகுப்பறைகளில் கற்றதைவிட நூலகங்களில் கற்றவை அதிகம் - அதனால்

நூல்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்!
இத்தனை ஆண்டுகாலம் எத்தனையோ தேர்வுகள் எழுதியிருக்கிறேன் இருந்தாலும், மாணவர்களைப் போன்ற கேள்வித்தாள்களை நான் எங்கும் பார்த்ததில்லை – அதனால்
மாணவர்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்!

என்வாழ்வில் எத்தனை எத்தனை ஆசிரியர்கள்..!!!
எல்லோரும் உயர்ந்தவர்களே!
என்னை உயர்த்தியவர்களே!!

இருந்தாலும் இவர்களுள் மிக உயர்ந்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்...
ஆம் அவர்தான் “அனுபவம்“

அனுபவத்தைவிடப் மிகப் பெரிய ஆசிரியரை இதுவரை நான் கண்டதில்லை!

இத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும், நான்
ஆசிரியர் தினம் கொண்டாடுவதில்லை....
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுகிறேன்!

அப்ப நீங்க..??

59 கருத்துகள்:

  1. முனைவருக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அம்மா, தந்தை, குழந்தை, காதலி, மனைவி, எதிரி, நண்பர் என ஒவ்வொருவருவரும் ஆசிரியர்தான் என சொல்லியிருக்கும் விதம் அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  3. // இத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும், நான்
    ஆசிரியர் தினம் கொண்டாடுவதில்லை....
    ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுகிறேன்! //
    இந்த செயலுக்கு வாழ்த்த வார்த்தையில்லை. உங்களை நானும் இனி பின்பற்றுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அழகான விளக்கம் ஐயா.
    உலமே ஒரு பள்ளிக்கூடம்தான். அதில் வாழ்நாள் முழுவதும் நாம் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.

    ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கற்று தரும் எல்லா விஷயங்களுமே ஆசிரியர் தன்மை பெற்றவையே. ஆசிரியர் தின வாழ்த்துகள். இந்த நாளில் காலந்தோறும் கற்று கொடுத்தவர்களை நினைத்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அழகான பகிர்வு.. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல மனிதர்கள் நமக்கு பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதால் அனைவரும் ஆசிரியரே என்று அழகாய் சொல்லி இருப்பது நன்று.

    //இன்றுமுதல்...
    காலைக் கதிரவனுக்கும்,
    புல்லின் பனித்துளிக்கும்,
    பூத்துச் சிரிக்கும் மலருக்கும்,
    துயிலெழுப்பும் பறவைகளுக்கும் காலை வணக்கம் சொல்வோம்!//

    நல்ல வரிகள்...

    பதிலளிநீக்கு
  7. அன்புநிறை முனைவரே

    ஆசிரியர்தின வாழ்த்துக்கள்

    //சமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்!
    நூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்!//


    நீங்கள் கூறிய ஆசிரியர்களின் வகையில்
    என்னை மிகவும் பாதித்தவை இவைகளே......
    நூலகங்களும் சமூகமும்.. ஒரு மனிதனை எப்படி
    வேண்டுமானாலும் மாற்றமுடியும்.
    அதில் நல்லவைகளை எடுத்து தீயது புரியா
    வாழ்தலே இனியவையாம்.

    பதிலளிநீக்கு
  8. இதுதான் ஒழுக்கம் என்றுரைப்பவர் ஆசிரியராயினும்
    இதுதான் வாழ்க்கை என உணர்த்தும் யாவரும் ஆசிரியர்தான்! /

    அழகான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. காதலியையும் மனைவியையும் தனி தனியா சொல்லியிருக்கீங்க, என்ன பாஸ்? வீட்டுக்கு தெரியுமா?

    பதிலளிநீக்கு
  11. //பாடம் பயிற்றுவோர் நமக்கு முழு நேர ஆசிரியர்கள்!
    உறவுகள் நமக்கு வாழ்நாள் ஆசிரியர்கள்!
    சமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்!
    நூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்!
    பறவைகள் நம்மைப் பறக்கச் செய்த ஆசிரியர்கள்!
    விலங்குகள் நம்மை மனிதனாக்கிய ஆசிரியர்கள்! //

    இனிமேல் ஆசிரியர் தினத்தில் இவர்களையும் கொண்டாடுகிறேன் நண்பரே..

    சிந்திக்க வைத்துவிட்டீர்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  12. Without Investment Data Entry Jobs !
    FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. உலகத்தில் நாம் கண்ணுரும் அனைத்திலும் ஆசிரியர் உண்டு....


    அழகிய அர்த்தமுள்ள பதிவு...

    ஆசிரியதின வாழ்த்துக்களை நானும் பகிர்ந்துக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  14. "மாணவர்களைப் போன்ற கேள்வித்தாள்களை நான் எங்கும் பார்த்ததில்லை – அதனால்
    மாணவர்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்!"
    -மாணவர்களுடன் மாணவராக இருக்கும் ஆசிரியர் நீங்கள் ......
    ஆசிரியர்களைத் தினம் கொண்டாடும்
    ஆசிரியருக்கு ஆசிரியரை கொண்டதும் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. ஆஹா தொடக்கமே அருமை நண்பரே

    நல்ல விஷயம் கற்றுத்தருபவர்களை என்றுமே மறக்கக் கூடாதுதான் நண்பரே.

    அது யாராக இருந்தாலும் .

    பகிர்வு அருமை நண்பரே

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் நண்பா,
    நல் மாணாக்கர்களை உருவாக்குவதற்காக அயராது உழைக்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

    ஆசிரியர்களின் பெருமையினை, அவர்களின் கடின உழைப்பினைச் சிறப்பாகச் சொல்லும் நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  17. Sir,

    Fantastic. We Must Respect our teachers always.

    Best Wishes Sir, = Venkat.

    Sir, Please visit www.hellovenki.blogspot.com and post your valuable comments,

    பதிலளிநீக்கு
  18. க‌ற்ற‌ல் இனிது... வாழ்நாள் இறுதி வ‌ரை!
    க‌ற்பித்த‌ல் அத‌னினும் இனிது!!

    ஆசிரிய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துகள்! உல‌க‌ம் உய்வ‌து உங்க‌ளைப் போன்றோரின் உய‌ரிய‌ செய‌லால் அன்றோ!வ‌ண‌ங்குவ‌தில் ம‌கிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. தினம் கொண்டாடப் பட வேண்டியவர்கள்தான் ஆசிரியர்கள்!

    பதிலளிநீக்கு
  20. ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
    ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!


    ஆமா, ஆசிரியர்களை தினமும் கொண்டாடத்தான்வேண்டும்

    பதிலளிநீக்கு
  21. வாழ்க்கையை கற்று தரும் அனைவரும் ஆசிரியர் தான் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே... ஆசிரியர் தின வாழ்த்துக்கள்... வாழ்க்கையில் ஆசிரியராக இருந்த அனைவருக்கும்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. நன்றியும் ஆசிரியர் தின வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  23. ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் பதிவு..
    வாழ்த்துக்கள்+நன்றி.

    பதிலளிநீக்கு
  24. இன்றுமுதல்...
    காலைக் கதிரவனுக்கும்,
    புல்லின் பனித்துளிக்கும்,
    பூத்துச் சிரிக்கும் மலருக்கும்,
    துயிலெழுப்பும் பறவைகளுக்கும் காலை வணக்கம் சொல்வோம்!//

    பதிலளிநீக்கு
  25. ஆசிரியர்கள் நாளை அழகாக பதிவு செய்து உளீர்கள் உளம்கனிந்த பாராட்டுகள் ஆச்சிரியர்கள் என்பதால் ஆசிரியர்களை மட்டும் பேசாமல் எல்லோரையும் ஆசானாக பாவிக்கவேண்டும் காதலன் காதலி தந்தை ,தாய் என எல்லோரையும் ஆசானாக வேண்டுவது உண்மையில் பரட்டுகளுக்குரியான பாராட்டுகள் நன்றி .

    பதிலளிநீக்கு
  26. ஆசிரியர தினவாழ்த்துக்கள் !
    ஆசிரிராக இருப்பதில் ​பெருமிதம் ​கொள்​வோம்.

    பதிலளிநீக்கு
  27. ஆசிரியர்களை தினமும் கொண்டாடுவோம். அற்புதமான சிந்தனை.உங்கள் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள். உங்கள் இந்தப் பதிவிலிருந்து நானும் நிறையக் கற்றுக்கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  28. //பாடம் பயிற்றுவோர் நமக்கு முழு நேர ஆசிரியர்கள்!
    உறவுகள் நமக்கு வாழ்நாள் ஆசிரியர்கள்!
    சமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்!
    நூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்!
    பறவைகள் நம்மைப் பறக்கச் செய்த ஆசிரியர்கள்!
    விலங்குகள் நம்மை மனிதனாக்கிய ஆசிரியர்கள்!
    இயற்கையின் கூறுகள் நமக்கு என்றென்றும் ஆசிரியர்கள்! என்பது புரியும். ///

    நிச்சயமாக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஓர் விதத்தில் ஆசிரியரே அவரிடம் கற்றுக்கொள்ள எதாவது ஒன்று இருக்கும்...

    ஆசிரியர் தினத்தன்று ஒரு மிகச்சிறந்த பதிவை விளக்கத்துடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி முனைவர் அவர்களே!

    பதிலளிநீக்கு
  29. //இத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும், நான்
    ஆசிரியர் தினம் கொண்டாடுவதில்லை....
    ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுகிறேன்!

    அப்ப நீங்க..?? ///

    கண்டிப்பாக இனி நாங்களும் ஆசிரியர்களை தினம் கொண்டாடுவோம்.....

    உங்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. பணியாற்றும் பேராசிரியருக்கு
    ஓய்வு பெற்ற ஓராசிரியரின்
    வாழ்த்துக்கள்!

    புதுமை மிகு வழியில் சிந்தித்து
    எழுதியுள்ள தங்கள் பதிவு கண்டு யான் வியந்து
    மகிழ்ந்து போனேன்
    தமிழ் வாழ நீங்கள் நீடுழி வாழ
    இறைவனை வேண்டுகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  31. இறுதி வரிகள் மிகச்சிறப்பாக இருந்தன. நல்லாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  32. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் குணா..

    பதிலளிநீக்கு
  33. ஆசிரியராக உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள். வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும், ஒவ்வொரு அனுபவமும் கற்றுத் தரும் ஆசிரியரே என்பதை உணர்த்தும் அழகான பதிவு.

    பதிலளிநீக்கு
  34. அறிவை அள்ளித்தந்து வாழ வழிகாட்டும் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படவேண்டியர்களே..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. நல்ல பகிர்வு...
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் பாஸ்!

    பதிலளிநீக்கு
  36. ~*~அனுபவத்தைவிடப் மிகப் பெரிய ஆசிரியரை இதுவரை நான் கண்டதில்லை!~*~

    உண்மை தான் நண்பரே...
    சம்பவம் ஒன்றாக இருந்தாலும் அதில் சம்பந்தப்பட்டவர் ஒவ்வோர்வருக்கும் தனித்தனி அனுபவம்(பாடம்) கற்றுக்கொள்கிறார்கள்.

    அனுபவமே மிகச் சிறந்த பெரிய ஆசிரியர்.

    அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  37. ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு உயிரிடமிருந்தும் புதிதாய் கற்றுக்கொள்ள எதாவது ஒரு விடயம் இருக்கும். உணர்த்திய நல்லதொரு பதிவினைத் தந்தற்கு நன்றிகள் முனைவரே

    பதிலளிநீக்கு
  38. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் குணா.

    பதிலளிநீக்கு
  39. மிகவும் அருமையான கருத்துக்கள்.
    மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.
    எவ்வளவு விஷயங்களை கோர்வையாகக் கொடுத்துள்ளீர்கள்.
    ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.
    அழகான பதிவிட்ட தங்கள் திருக்கரங்களுக்கு என் அன்பு வணக்கங்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.
    vgk

    பதிலளிநீக்கு
  40. வாழ்க்கயின் ஒவ்வொரு நிமிடமும் அதன் செயல்பாடுகளும் நமக்கு ஆசிரியர்கள் தான். . .

    பதிலளிநீக்கு
  41. வித்தியாசமான் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  42. வெள்ளை மன எழுத்துக்களால்
    உள்ளத்து அன்பை உருக தொடுத்து -வந்து
    அனுபவமே ஆசான் என்ற தத்து்வத்தை
    செந்தமிழ்ச் சொல் எடுத்து
    செந்தாமரை மலர் தூவிய
    முனைவர்
    என் அண்ணா
    இனியவருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  43. நன்றி நண்டு.
    நன்றி காந்தி
    மகிழ்ச்சி நடனசபாபதி ஐயா.
    நன்றி இராஜா.
    நன்றி இராம்வி.
    வருகைக்கும் புரிதலும் நன்றி தமிழ்உதயம்

    பதிலளிநீக்கு
  44. நன்றி பாலா
    நன்றி வெங்கட்
    மகிழ்ச்சி மகேந்திரன்
    நன்றி இராஜேஷ்வரி
    நன்றி சசி

    பதிலளிநீக்கு
  45. சூர்யஜீவா இப்படியொரு கேள்வியைக் கேட்பீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லை.
    காதலிக்கும் காலம்
    திருமணத்துக்கு பின்னான காலத்தையும் வேறுபடுத்தி உணரவே அப்படிச் சொன்னேன் நண்பா.

    பதிலளிநீக்கு
  46. மகிழ்ச்சி சம்பத்குமார்
    பார்த்தேன் சௌந்தர் மகிழ்ச்சி
    வருகைக்கு நன்றி சின்னத்தூரல்
    நன்றி எம்ஆர்
    மகிழ்ச்சி நிருபன்
    நன்றி வெங்கட் வருகிறேன்
    மகிழ்ச்சி நிலாமகள்
    உண்மைதான் சென்னைப்பித்தன் ஐயா.
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இலட்சுமி அம்மா

    பதிலளிநீக்கு
  47. நன்றி மாயஉலகம்
    நன்றி பொன்மலர்
    நன்றி கருன்
    நன்றி மாலதி
    நன்றி அறிவொளி
    மிக்க மகிழ்ச்சி மாணவன்
    மகிழ்ச்சி புலவரே
    நன்றி சிவக்குமார்
    நன்றி தேனம்மை
    நன்றி ஸ்ரீராம்
    நன்றி ரியாஷ்
    நன்றி மைந்தன்
    நன்றி இராஜா எம்விஎஸ்
    மிக்க மகிழச்சி அம்பலத்தார்
    நன்றி முருகேஷ்வரி இராசவேல்
    மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன் ஐயா.
    நன்றி பிரணவன்
    நன்றி இராஜி
    நன்றி மணி

    பதிலளிநீக்கு
  48. அற்புதமான கருத்துக்கள்...

    ஆசிரியர்தின வாழ்த்துக்கள் (சற்று தாமதமாக???)

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  49. அனுபவமும் ஓர் சிறந்த ஆசிரியர்கள் தான்.என்மனதில் பதிவு செய்துவிட்டேன்.நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு