வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 3 செப்டம்பர், 2011

பெரிய பொய்!
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான் அவனுக்குக் கதைகள் கேட்பதில் ஆர்வம் மிகுதி.

ஒரு சமயம் அவன் அமைச்சர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“நம் நாட்டில் யார் பெரிய பொய் சொல்வார்கள்?“ என்று கேட்டான்.

“பெரும்பாலோர் பொய் பேசுபவர்கள் தாம். யாரால் பெரிய பொய் சொல்ல முடியும் என்று தெரியவில்லை“ என்றார்கள் அமைச்சர்கள்.

முரசு அடிப்பவனை அழைத்த அரசன் “ நாளை அரண்மனையில் அரசர் முன்னிலையில் போட்டி நிகழும். யார் பெரிய பொய் சொல்கின்றார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்படும் என்று தெரிவி“ என்றான்

அப்படியே நாடெங்கும் முரசு அடித்துத் தெரிவித்தான் அவன்.

பொய் சொல்லிப் பரிசு பெற நான்கு பேர் அரண்மனைக்கு வந்தனர்.

அரசன் அரியணையில் அமர்ந்திருந்தான்.

1.முதலாமவன் தன் பொய் மூட்டையை அவிழ்த்தான். “அரசே! விநோதமான சோள விதை என்னிடம் கிடைத்தது அதை வயலில் நட்டுவிட்டுத் திரும்பினேன். கணநேரத்தில் பெரிய சோளச் செடியாக வளர்ந்திருந்தது அது.
சோளக் கதிர்களை பறிக்க அதில் ஏறினேன்.
சோளச் செடி நொடிக்கு நொடி வளர்ந்து கொண்டே இருந்ததால் என்னால் இறங்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் கண்ணுக்கு எட்டாத உயரம் சென்றுவிட்டேன்.
பசி தாங்கமுடியாத நான் சோளச் செடியில் அமரவந்த பருந்து ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.
பயந்துபோன பருந்து என்னைத் தரையில் இறக்கிவிட்டது“

என்று பொய் சொன்னான்.

இதைக் கேட்ட எல்லோரும் “இது பெரிய பொய்தான்“ என்றார்கள்.

2. இரண்டாவதாக வந்தவன் “ அரசே! நான் தெரியாமல் இந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டேன். எனக்குப் பொய்யே பேசத்தெரியாது. என்னை விட்டுவிடுங்கள்“ என்றான்.
“சரி! உன்னை மன்னித்தேன். இனி இப்படி உனக்குத் தெரியாத துறையில் இறங்காதே“ என்றான் அரசன்.

3. மூன்றாமவன் “ அரசே! என்தாய்க்கும் என்தந்தைக்கும் திருமணம் நடந்தது. அந்தத் திருமண வேலைகளையெல்லாம் என் பொறுப்பி்ல் தான் விட்டிருந்தனர்“ என்று தொடங்கினான்.

அவையோர் “இவன் பொய்க்கு அளவே இல்லை“ என்று சிரிக்கத் தொடங்கினர். “இதுவும் நல்லபொய்தான்“ என்றான் அரசன்.

4. நான்காவதாக வந்தவன், “அரசே! என்தாயின் வயிற்றில் நான் இரண்டுமாதக் குழந்தையாக இருந்தேன். அப்போது என் தாய் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தாள். அவளை விழுங்க பெரிய திமிங்கிலம் ஒன்று வந்தது. என்தாய்க்கு நேர இருந்த ஆபத்தைக் கண்டு அவள் வயிற்றிலிருந்து வெளியே வந்தேன். அந்தத் திமிங்கிலத்தோடு கடுமையாகச் சண்டை செய்து அதைக் கொன்றேன். பிறகு திரும்ப என் தாயின் வயிற்றுக்குள் சேர்ந்துவிட்டேன்.“ என்று பொய் சொன்னான்.

அவர்களில் ஒருவனுக்கு அரசன் பரிசளித்தான்.
அரசன் யாருக்குப் பரிசளித்திருப்பான்.????


என்ன நண்பர்களே..
நம்ம அரசியல்வாதிகளையும், வழக்குரைஞர்களையும் விட்டால் இதைவிடப் பெரிய பொய்யே சொல்வார்கள் என்று தோன்றுகிறதா..

மேற்கண்ட புதிருக்கான பதிலைக் கருத்துரையில் தெரிவியுங்கள் பார்க்கலாம். சரியான பதிலளித்தால் தங்கள் மூளை நல்ல நிலையில் இயங்குகிறது என்று நீங்களே உங்களுக்கு ஒரு பாராட்டுத் தெரிவித்துக்கொள்ளலாம்.

மாலை 6 மணிக்கு இதற்கான சரியான பதிலை இப்பதிவிலேயே வெளியிடுகிறேன் அன்பர்களே.


புதிருக்கான சரியான பதில்..


அன்பின் நண்பர்களே காலையில் கேட்ட புதிருக்கு நிறைய பேர் சரியான பதிலளித்திருந்தீர்கள்.

மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் சொன்னது போல..

2. இரண்டாவதாக வந்தவன் “ அரசே! நான் தெரியாமல் இந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டேன். எனக்குப் பொய்யே பேசத்தெரியாது. என்னை விட்டுவிடுங்கள்“ என்றான்.
இதுதான் சரியான பதில்.

இப்படித்தான் வகுப்பில் ஒருமுறை பொய் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது...

நாம் எல்லோருமே பொய் சொல்பவர்கள்தான்.
நாம் சொல்லக்கூடிய பொய் ஒன்றுக்கு ஒருபல் விழுவதாக இருந்தால்
உலகத்தில் யாருக்குமே பல் இருக்காது என்றேன்...


அதற்கு ஒரு மாணவர் பல் மட்டுமல்ல யாருக்கும் வாயே இருக்காது ஐயா என்றார்.

அன்பின் உறவுகளே சரியான பதிலளித்த ஒவ்வொருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தவறான, வேறுபட்ட, எதிர்பாராத,நகைச்சுவையுணர்வுடன் பதிலளித்த அன்பர்களுக்கும் நன்றிகளையும் முயற்சித்தமைக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே இந்தப் புதிரைவிட நீங்கள் தந்த கருத்துரைகள் மிகவும் விரும்பத்தக்கதாக அமைந்தன.

நன்றி!

36 கருத்துகள்:

 1. இரண்டாவதாக சொன்னவனுக்கு தான் பரிசு
  கிடைத்திருக்கும்

  பதிலளிநீக்கு
 2. ஆஹா
  இன்னைக்கு புதிரா?!!!!
  கொஞ்சம் யோசித்து வந்து பதில் சொல்கிறேன் முனைவரே.....

  பதிலளிநீக்கு
 3. அரசர்தான் மற்றவருக்குப் பரிசு தருவதாக போய் சொல்லியுள்ளார் எனவே பரிசை அவரே வைத்துக் கொண்டார்.
  இந்தக் கதையை எழுதியதே நான் தான் ஐயா

  பதிலளிநீக்கு
 4. ஒரு சின்ன யோசனை வந்துச்சு


  நீங்கள் கூறிய மூவரும் தங்கள் கற்பனையே பொய்யாக சொல்லியிருக்கிறார்கள்.
  இரண்டாமவர் மட்டும் எனக்கு பொய்யே சொல்லத் தெரியாது என்று ஒதுங்கிகொண்டார்.
  என்னைப் பொறுத்தவரையில் அவர் தான் சிறந்த பொயவாதி என நினைக்கிறேன்.
  சரியா முனைவரே????

  பதிலளிநீக்கு
 5. இரண்டாவதாக சொன்னவன் தான் பெரிய பொய்க்கு சொந்தக்காரன் அன்பரே !

  பதிலளிநீக்கு
 6. மாப்ள பகிர்வுக்கு நன்றி!....என் மூளைக்கு எட்டியவரை இரண்டாவது நபரே.....அந்தப்பரிசுக்குதகுதியானவன்!

  பதிலளிநீக்கு
 7. நம்ம கருணாநிதியை விட பெரிய பொய் சொல்ற ஆள் இருக்கா என்ன ?

  பதிலளிநீக்கு
 8. சந்தேகம் என்ன? இரண்டாமவனுக்கு தான்!

  பதிலளிநீக்கு
 9. இப்படி மூளை இல்லைன்னு சொல்லீட்டீங்களே...முனைவரே...நான் 6 மணிக்கு பதில் சொல்றேன்...பரிசை எடுத்து வைங்க....

  பதிலளிநீக்கு
 10. தனக்கு பொய் சொல்ல தெரியாது என்று கூறியவருக்குதான் (2)அரசன் தந்திருப்பார். ஏனென்றால் பொய்யை நம்பும்படி சொன்னார்; அவர் கூறியது பொய்யா மெய்யா என்ற குழப்பமே மேலோங்கி இருந்தது.

  பதிலளிநீக்கு
 11. பொய் சொல்லத் தெரியாதென்பதுதான் பெரிய பொய்!
  அதை நம்புறமாதிரி அரசன் சொன்னான் பதில்...அது அதைவிடப் பெரிய பொய்!

  பதிலளிநீக்கு
 12. சார்...இதுல என்ன சந்தேகம்.....பொய்யே பேசத் தெரியாது என்ன விட்டு விடுங்கன்னு உலக மகாப் பொய்யைப் பேசினானே அவனுக்குத்தான் அந்த 1000 பொற்காசுகளும் கிடைத்திருக்கும்.....

  பதிலளிநீக்கு
 13. எல்லாரும் பதிலை சொல்லிவிட்டார்கள் நான் என்ன சொல்வது

  பதிலளிநீக்கு
 14. இரண்டாம் நபராய் இருக்கலாம்
  த.ம 10

  பதிலளிநீக்கு
 15. இரண்டாவதாக வந்தவனுக்கு பரிசு கிடைத்திருக்கும்!

  பதிலளிநீக்கு
 16. மாலை ஆறு மணிக்கு பதில் தருவதாகக் கூறிய நீங்களோ!...என்று ஒரு சிந்தனை....
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 17. எல்லோரும் சொல்ற அந்த இரண்டாவது ஆளாக தான் இருக்கனும் முனைவரே. பதிலை சொல்லுங்க முனைவரே.

  பதிலளிநீக்கு
 18. இரண்டாவதாக வந்தவனுக்குதான் பரிசு.பொய்யே சொல்லத்தெரியாது என்பதே பெரிய பொய்.

  பதிலளிநீக்கு
 19. ”அவர்களில் ஒருவனுக்கு அரசன் பரிசளித்தான்” என்பதே பொய்யான கூற்றோ?

  பதிலளிநீக்கு
 20. இந்த நிகழ்சி நடந்த போது அங்கே
  நானில்லை அதனால எனக்குத்
  தெரியாது மன்னிக்க!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 21. பொய்யே பேசத்தெரியாது என்று சொன்னவன்தான் பெரிய பொய்யன்.

  பதிலளிநீக்கு
 22. மன்னர் பரிசு கொடுத்தால் இரண்டாவதாக வந்தவன், இல்லையேல் மன்னர்..

  பதிலளிநீக்கு
 23. jim carey நடித்த என்ற liar படத்தை பாருங்கள்... ஒரு மணி நேரம் பொய்யே பேசாமல் கதாநாயகன் படும் அவஸ்தை,

  பொய்மையும் வாய்மையிடத்து என்ற திருக்குறளை கடைப்பிடிப்பவன் நான்..

  பதிலளிநீக்கு
 24. ரெண்டாமவனுக்கு பரிசை வாரி தாரும்... ஒரு வேளை அரசரா... குழம்பிட்டேன் இருங்க போயிட்டு வந்து மறுபடியும் படிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 25. தமிழ மணம் 14 - இது பொய் இல்ல ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 26. சரியாக பதிலளித்த அன்பு நெஞ்சங்கள்.

  எம்ஆர்
  மகேந்திரன்
  ராபின்
  சி.பிரேம்குமார்
  விக்கி
  பந்து
  அருண் கேகே
  ஜீ
  வைகறை தங்கராஜ்
  இரமணி
  இமலாதித்தன்
  காந்தி இராம்வி
  சென்னைப் பித்தன்
  இராஜா
  மாய உலகம்


  பாராட்டுக்கள் நண்பர்களே.

  பதிலளிநீக்கு
 27. எதிர்பாராத பதில்கள்.

  1.நீச்சல்காரன் said...
  அரசர்தான் மற்றவருக்குப் பரிசு தருவதாக போய் சொல்லியுள்ளார் எனவே பரிசை அவரே வைத்துக் கொண்டார்.
  இந்தக் கதையை எழுதியதே நான் தான் ஐயா

  2.மகேந்திரன் said...
  ஒரு சின்ன யோசனை வந்துச்சு


  நீங்கள் கூறிய மூவரும் தங்கள் கற்பனையே பொய்யாக சொல்லியிருக்கிறார்கள்.
  இரண்டாமவர் மட்டும் எனக்கு பொய்யே சொல்லத் தெரியாது என்று ஒதுங்கிகொண்டார்.
  என்னைப் பொறுத்தவரையில் அவர் தான் சிறந்த பொயவாதி என நினைக்கிறேன்.
  சரியா முனைவரே????

  3."என் ராஜபாட்டை"- ராஜா said...
  நம்ம கருணாநிதியை விட பெரிய பொய் சொல்ற ஆள் இருக்கா என்ன ?

  4.ரெவெரி said...
  இப்படி மூளை இல்லைன்னு சொல்லீட்டீங்களே...முனைவரே...நான் 6 மணிக்கு பதில் சொல்றேன்...பரிசை எடுத்து வைங்க....

  5.தினேஷ்குமார் said...
  எல்லாரும் பதிலை சொல்லிவிட்டார்கள் நான் என்ன சொல்வது

  6.நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  நல்லா பொய் சொல்ரீங்க நீங்க .

  7.kovaikkavi said...
  மாலை ஆறு மணிக்கு பதில் தருவதாகக் கூறிய நீங்களோ!...என்று ஒரு சிந்தனை....
  வேதா. இலங்காதிலகம்.

  8.thendralsaravanan said...
  ”அவர்களில் ஒருவனுக்கு அரசன் பரிசளித்தான்” என்பதே பொய்யான கூற்றோ?

  9.புலவர் சா இராமாநுசம் said...
  இந்த நிகழ்சி நடந்த போது அங்கே
  நானில்லை அதனால எனக்குத்
  தெரியாது மன்னிக்க!

  புலவர் சா இராமாநுசம்

  10.suryajeeva said...
  jim carey நடித்த என்ற liar படத்தை பாருங்கள்... ஒரு மணி நேரம் பொய்யே பேசாமல் கதாநாயகன் படும் அவஸ்தை,

  பொய்மையும் வாய்மையிடத்து என்ற திருக்குறளை கடைப்பிடிப்பவன் நான்..

  11.மாய உலகம் said...
  ரெண்டாமவனுக்கு பரிசை வாரி தாரும்... ஒரு வேளை அரசரா... குழம்பிட்டேன் இருங்க போயிட்டு வந்து மறுபடியும் படிக்கிறேன்

  நான் சற்றும் எதிர்பாராத பதிலளித்த அன்பர்களே
  உங்கள் பதிலை மிகவும் இரசித்தேன்.

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 28. இயல்பான பதிலளித்தவர்கள்.

  1.நிசாமுதின்
  2.கருன்
  3.சசி

  நன்றி நண்பர்களே.

  பதிலளிநீக்கு
 29. தமிழின் தமிழரின் பண்பாட்டைத் தேடும் இவ்விலக்கியப் பதிவை நாடி இலக்கியத்தேன் அருந்தவரும் பதிவவுலக உறவுகளே..

  இலக்கியத்துக்கு இடையே நகைச்சுவைக்காக வழங்கும் இதுபோன்ற புதிர்களுக்கு சுவையளிப்பனவாக அமைந்தவை உங்கள் மறுமொழிகளே.

  சிந்தித்து, பொன்னான நேரத்தைச் செலவழித்து நீங்கள் தந்த மறுமொழிகளுக்கு வெறும் நன்றி என்ற மூன்றெழுத்து வார்த்தைகள் சரியா பதிலாக இருக்காது என்ற கருதி..


  சரியாகப் பதிலளித்தவர்களுக்கு..
  சிந்தனைச் சிற்பி
  என்று விருதும்

  நகைச்சுவையாகப் பதிலளித்தவர்களுக்கு..
  நகைச்சுவைத் தென்றல்
  என்ற விருதும்.

  இயல்பாகப் பதிலளித்தவர்களுக்கு
  இலக்கியத் தேனீ
  என்ற விருதும் அளித்துப் பாராட்டுகிறேன்.

  வேர்களைத்தேடி அளிக்கும் பரிசுகளுக்கான முகவரி.

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

  பதிலளிநீக்கு