வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

காலம் x மனிதன் = வரலாறு.

காலம் எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறது.இடையில் வந்த நாம் அதற்கு ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறோம்.

ஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம்.

காலத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.

காலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது!
காலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது!
காலத்தைப் புரிந்துகொள்ளாதபோது..

காலத்தின் கையில் குழந்தையாய் நாம்
நமது கையில் பொம்மையாய் காலம்!

அழகிய குளத்தில் தாமரையாய் காலம்
தாமரைக் குளத்தில் தவளையாய் நாம்!

குப்பைக்கு நடுவே புதையலாய் காலம்
புதையலை மூடிய குப்பையாய் நாம்!

விதையுள் மறைந்த மரமாய் காலம்
மரத்தை வெட்டும் கருவியாய் நாம்!

இசையின் நடுவே மௌனமாய் காலம்
ஓசையை கேட்கும் பேதையாய் நாம்!
காலத்தைப் புரிந்துகொண்டபோது...

ஆழமான கடலாய் காலம்
கடலை கடக்கும் கப்பலாய் நாம்!

உயரமான வானமாய் காலம்
பறந்து திரியும் பறவையாய் நாம்!

புல்லாங்குழலின் துளைகளாய் காலம்
அதில் காற்றை நுழைக்கும் மேதையாய் நாம்!

பாலையில் தோன்றும் கானல்நீராய் காலம்
மண்ணைக் குளிரச் செய்யும் மழைத்துளியாய் நாம்!

கல்லுள் மறைந்த சிற்பமாய் காலம்
கல்லைச் செதுக்கும் சிற்பியாய் நாம்!

“காலம் எல்லோருக்கும் பொதுவாகத்தான் உள்ளது.
அதைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் தான் வேறுபட்டவர்களாக உள்ளார்கள்.

காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!!

40 கருத்துகள்:

 1. காலம் குறித்த தங்கள் பதிவு அருமையிலும் அருமை
  ஒவ்வொரு சொற்றோடரும் ஒருகட்டுரைக்குரிிய கருவோடு
  தளும்பி நிற்கிறது
  காலம் நம்மோடு கைபிடித்து இருக்கும் வரை வாழ்பவர்களாக இருக்கிறோம்
  காலம் நம்மை கைவிட்டு நடந்தால் நாம் எதற்கும் பயனற்ற
  காலமானவர்கள் ஆகிப்போகிறோம்
  சிந்தனையை தூண்டிச்செல்லும் தரமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள் த.ம 1

  பதிலளிநீக்கு
 2. காலம் பற்றி அதிகம் சிந்தித்தவர்கள் நம்மவர்கள் தான் .

  பதிலளிநீக்கு
 3. காலத்தைப் புரிந்து கொள்ளாதபோது, காலத்தைப் புரிந்து கொண்டபோது மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

  காலம் துக்கங்களையும் துயரங்களையும் மறக்கச் செய்யும் பொன்னான ஒரு மருந்தும்கூட.

  இனிமையான எளிமையான கவிதை . மிகத்தரமான சமரசம் செய்துகொள்ளாத பதிவுகள் தங்களுடைய அனைத்து பதிவுகளும். தங்கள் சிந்தனை பாதையை நோக்கி அதிக தடவை பிரமித்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. காலத்தை புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள். சத்தியமான வார்த்தை. புரிந்து கொள்ளாதவர்கள் பார்த்து கொண்டே இருக்கிறார்கள். அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 5. //காலத்தின் கையில் குழந்தையாய் நாம்
  நமது கையில் பொம்மையாய் காலம்! //
  வரிகள் அருமை.
  சிந்தனையை தூண்டும் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. ஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம். /

  படம் மனதில் நிறைய காலம் நிலைத்திருக்கும்.

  காலம் பற்றிய பொன்னான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. அருமை பாஸ்!
  கடைசி இருவரிகள் செம்ம!

  காலத்தைப் புரியாதவர்கள் காலமாகி விடுகிறார்கள்!
  காலத்தைப் புரிந்துகொண்டோர் காலங்கடந்து வாழ்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 8. பொன் போன்ற காலத்தை
  திறம் பட உரைத்து
  மனதி ஏற்றிவிட்டீர்கள் முனைவரே.

  பதிலளிநீக்கு
 9. காலம் சொல்லும் பாடமும் அருமை.. படங்களும் அருமை...

  காலம் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கை அழகிய கோலமாய்... புரிந்துகொள்ளாதவர்கள் வாழ்க்கை அலங்கோலமாய்...

  பதிலளிநீக்கு
 10. //காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!!//
  அருமை!

  பதிலளிநீக்கு
 11. காலத்தைப் பற்றி அருமையான கருத்து

  அதிலும் கடைசியாய் நச்சுன்னு பஞ்ச் கருத்து
  பகிர்வுக்கு நன்றி

  தமிழ் மணம் ஒன்பது

  பதிலளிநீக்கு
 12. காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு காலம் பொன்போன்றது..
  காலத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு பொன்னான காலம்..

  பகிர்வுக்கு நன்றி.. நண்பரே..
  வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 13. காலத்தை வென்றவன் காலம்கடந்தும் வாழ்கிறான்

  பதிலளிநீக்கு
 14. காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!!


  சபாஷ் முனைவரே!மிக அழுத்தமான பதிவு!வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. காலத்தின் அருமையை உணர்த்திய கவிதை கலக்கல்

  பதிலளிநீக்கு
 16. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜா எம்விஎஸ்

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்பலத்தார்.

  பதிலளிநீக்கு
 18. மிக சிறப்பான கருத்துகள்..... நன்றி பல

  பதிலளிநீக்கு
 19. காலத்தின் கையில் நாம்....
  நாம் கையில் காலம்...
  வார்த்தைகளில் சிறு மாறுபாடுதான்...
  இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு

  “காலம் எல்லோருக்கும் பொதுவாகத்தான் உள்ளது.
  அதைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் தான் வேறுபட்டவர்களாக உள்ளார்கள்." - பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
 20. காலம் பணத்தை விட மதிப்பு மிக்கது..ஒரு அரை ரூபாயை உண்டியலில் போடலாம்..ஆனால், ஒரு அரை மணி நேரத்தை உண்டியலில் போட முடியாது!

  பதிலளிநீக்கு