Monday, September 26, 2011

எதிர்பாராத பதில்கள்.மாணவர்களிடம் பண்பாடு குறித்து உரையாடும்போது கேட்டேன்..
பண்பாடு என்றால் என்ன?? என்று...

சில மாணவர்கள் சரியாகப் பதிலளித்தாலும், ஒரு சில மாணவர்கள் சொன்ன பதில் நான் சற்றும் எதிர்பாராததாக அமைந்தது..

1. ஏதாவது கூட்டமாக இருந்தால் அங்கு என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்ப்பது நம் பண்பாடு.
2. யாரையாவது திட்டுவது என்றால் மண்ணை வாறித் தூற்றுவது நம் பண்பாடு.
3. தூரத்தில் வரும்போது யாரையாவது திட்டினாலும் அருகே வரும்போது உங்களைப் பற்றிதான் இவ்வளவு நேரம் பெருமையாகப் பேசினேன் என்று கூறுவதுதான் தமிழர் பண்பாடு.
4. கடையில் சாமி கும்பிட்ட பின்னர் சாலையில் தேங்காய் உடைப்பதும் நம் பண்பாடுதான்.
5. யாரும் இறந்துவிட்டால் செத்துப்போயிட்டார் என்று சொல்லாமல் இயற்கை எய்திவிட்டார் என்று நாகரீகமாகச் சொல்வது நம் பண்பாடு என்று எதிர்பாராத பல்வேறு பதில்களை அளித்தார்கள்.

சரி தமிழர் பண்பாடுகள் குறித்து ஒரு பதிவு எழுதலாம் என எண்ணி இன்றைய பதிவைத் தமிழர் பண்பாடுகளை நினைவுபடுத்துவதாக வெளியிடுகிறேன்.

தமிழ் மொழி
தமிழர் அகவாழ்வியல் பண்பாட்டு நெறிகள்
தமிழர் புற வாழ்வியல் பண்பாட்டு நெறிகள்
தமிழர் கட்டிடக் கலை
தமிழர் சிற்பக் கலை
தமிழர் ஓவியக் கலை
தமிழர் நாடகக் கலை
தமிழர் இசைக் கலை
தமிழர் ஆடற்கலை
தமிழர் தற்காப்புக் கலை
தமிழர் யோகக் கலை
தமிழர் தத்துவவியல்
தமிழர் சமயங்கள்
தமிழர் வழிபாட்டு முறை
தமிழர் உணவுக்கலை
தமிழர் ஆடை மரபு


ஏறு தழுவுதல்
தமிழர் திருமண முறை
தமிழர் விளையாட்டுகள்
தமிழர் நம்பிக்கைகள்


மாட்டு வண்டிப் பந்தையம்
தமிழர் கப்பற் கலை
தமிழர் அரசியல்
தமிழர் உழவுமுறை
தமிழர் வணிகமுறை
தமிழர் கல்வி முறை
தமிழர் விருந்தோம்பல்
தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்
தமிழர் மருத்துவ முறைகள்
தமிழர் சித்தர் மரபு
தமிழர் நீதி வழங்கும் முறைகள்
என ஒவ்வொன்றிலும் தமிழருக்கென தனித்துவமான பண்பாட்டு மரபுகள் உண்டு.

தமிழர் பண்பாடு குறித்த விக்கிப்பீடியாவின் தொகுப்பைக் காண.

 கிரிக்கெட்டும், டென்னசும் தானா விளையாட்டுக்கள்? தமிழர் பண்பாட்டை அடையாளப்படுத்தும் “36 வகையான பழந்தமிழர் விளையாட்டுக்கள்“

 நம் பண்பாடுகளை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? “தெரிய வேண்டிய தமிழர் பண்பாடு“

 நேரம் காலம் பார்க்காம எதுவும் செய்யலாமா? “சகுனம் பார்த்த பன்றி“

 “காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல“

பழந்தமிழர் இசையிலும் தனித்துவமான பண்பாடு வளர்த்துவந்தனர். “ பழந்தமிழர் இசைக்கருவிகள்“

 பெண்கள் மலரணிவதில் கூட தமிழர்கள் பண்பாடு வளர்த்தனர். “பெண்களும் மலரணிதலும்“
29 comments:

 1. உங்களுக்கு வாய்த்த மாணவர்கள் படு புத்திசாலிகள்தான். எத்தனை பண்பாடுகளை கூர்ந்து கவனித்திருக்கிறார்கள்!!! அவர்கள் பதில் எனக்கே ஆச்சர்யமாய் இருக்கிறது. நிறைய விஷயங்களை நாம் கவனிப்பதில்லையோ என்று.

  ReplyDelete
 2. அட நல்ல மாணவர்கள்..

  தகவல்களுக்கு நன்றி சார்..

  ReplyDelete
 3. ""தூரத்தில் வரும்போது யாரையாவது திட்டினாலும் அருகே வரும்போது உங்களைப் பற்றிதான் இவ்வளவு நேரம் பெருமையாகப் பேசினேன் என்று கூறுவதுதான் தமிழர் பண்பாடு""

  நகைசுவையான பண்பாடுதான்...
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. தமிழ் இலக்கியத்திற்காக, தரமாக அதே நேரத்தில் சுவையாக உள்ள தங்களின் வலைப்பூ தமிழை நேசிப்போரின் நெஞ்சில் நீங்கா இடம் பெறும் என்பதில் வியப்பேதுமில்லை. தமிழர் பண்பாட்டினை மட்டுமல்ல, அதற்கான பல்வேறு இணைப்புக்களை கொடுத்து அசத்திவிட்டீர்கள்!

  ReplyDelete
 5. அடேயப்பா!

  இவ்வளவு இருக்கா நம்ம தாத்தா வீட்டு சொத்து!

  ReplyDelete
 6. பண்பட்ட வாழ்க்கையின் நடைமுறைகளே பண்பாடு என்று எண்ணுகிறேன். மாணவர்கள் குறிப்பிட்டவை பண்பட்ட செயல்களா என்று தெரியவில்லை. இவற்றையெல்லாம் நாம் பின்பற்றுகிறோம் என்பதாலேயே பண்பாட்டுப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டனவோ? வரும் தலைமுறை, நம் பண்பட்டை மிகச் சரியாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் சில செய்திகள் வெளியிட்டு அனைவரும் அறியச் செய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

  ReplyDelete
 7. அந்த மாணவர்கள் சொன்னதுதான் இன்று பலராலும் பின்பற்றப்படும் பண்பாடு

  ReplyDelete
 8. இன்றைய தலைமுறையினரின் கருத்து வெளிப்பாடுகள் தான் முனைவரே..
  தங்களின் மாணவர்கள் கொடுத்த பதிகள்.
  ஆனால் அத்தனை பதில்களும் முத்துக்கள்.
  நம்முடைய எண்ணங்களை புரட்டிபோடும் அளவுக்கு
  பதில்கள் வருகையில், மாற்றங்களை எண்ணி
  வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

  இங்கே அழகாய் தமிழர்களின் பண்பாட்டை
  ஒன்றொன்றாய் சொல்லியிருக்கிறீர்கள்.
  ஒவ்வொன்றையும் புரிந்து கொள்வதற்கே
  நெடுநாட்கள் பிடிக்கும்.

  இதில் ஏறுதழுவுதலை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
  மதுரைக்கருகில் அலங்காநல்லூரில் சிறுவயதில்
  கண்டிருக்கிறேன், அது ஒரு கண்கொள்ளாக் காட்சி
  முனைவரே. இன்னும் நெஞ்சில் நிழலாக .....

  ReplyDelete
 9. நம் பன்பாடுகள் பற்றியும், விளையாட்டைப் பற்றியும் அறிந்து கொண்டேன்... நண்பரே...

  பகிர்வுக்கு மிக்க நன்றி...

  வாழ்த்துகள்....

  ReplyDelete
 10. நல்ல தகவல்கள் முனைவரே. மாணவர்களின் பதில்கள் :)

  ReplyDelete
 11. 10ம் வகுப்பில் பண்டைத்தமிழா பண்பாடு என்று புத்தகம் பாடமாக இருந்தது நினைவு வருகிறது.மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 12. மாணவர்களின் புத்திசாலிதனம் பாராட்டலாம்... வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 13. <a href="http://sezhunkaarikai.blogspot.com/2011/08/blog-post_06.html#more>மிகச்சிறந்த பதிவு. நமது பண்பாடுகள் இன்னமும் உண்டு. ஒரு சிலவற்றை இங்கே வாசிக்கலாம்.</a>

  ReplyDelete
 14. நல்ல தகவல்கள் முனைவரே. மாணவர்களின் புத்திசாலித்தனத்துக்கு பாராட்டுகள். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. உண்மைதான் கடம்பவனக்குயில்..
  வருகைக்கு நன்றி கருன்
  கருத்துரைக்கு நன்றி சின்னத்தூரல்
  மகிழ்ச்சி இராஜா

  ReplyDelete
 16. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நெல்லி மூர்த்தி

  நன்றி விக்கி

  ஆம் சத்ரியன் ஆனால் இந்த சொத்தைப் பங்குபோட்டுக்கொள்ளத்தான் ஆட்களைக் காணவில்லை.

  ReplyDelete
 17. மகிழ்ச்சி மணி

  இந்த இடுகையுடனேயே பல்வேறு இணைப்புகளை அளிததுள்ளேன் கீதா.. இனிவரும் காலங்களில் இதற்கும் சிறுகுறிப்புகளுடன் வெளியிடுகிறேன் அறிவுறுத்தலுக்கு நன்றிகள்..

  உண்மைதான் மதுரன்

  ReplyDelete
 18. உண்மைதான் மகேந்திரன்...

  தமிழ்ப்பண்பாட்டின் நிழலில் தங்கியவர்கள் அதன் இனிமையை மறத்தல் அரிது.

  ReplyDelete
 19. மகிழ்ச்சி இராஜா
  நன்றி சென்னைப்பித்தன் ஐயா
  நன்றி சூர்யா
  நன்றி வெங்கட்
  நன்றி இலங்காதிலகம்

  ReplyDelete
 20. உண்மைதான் மாயஉலகம்
  பார்க்கிறேன் இரஜினி
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமார்.

  ReplyDelete
 21. நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 22. நல்ல தகவல் தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 23. தமிழர் பண்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. தங்கள் தகவலல்கள் மூலம் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். தொடருங்கள்.

  ReplyDelete
 24. நன்றி சதீஷ்
  நன்றி சசிகலா

  ReplyDelete