வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 14 மார்ச், 2012

காலம் (காசியானந்தன் நறுக்குகள்)


காலம் எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறது.இடையில் வந்த நாம் அதற்கு ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறோம். 

ஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம். 

காலத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. 

காலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது! 
காலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது! 

காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!
காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!! 

மேலும் சுவாசிக்க.........


18 கருத்துகள்:

  1. //காலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது!
    காலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது! //

    உண்மைதான். காலத்தைப்பற்றிய சரியான கணிப்பு.

    பதிலளிநீக்கு
  2. //காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!
    காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!! //

    நல்லா நற்க்குன்னு சொன்னீங்க முனைவரே

    பதிலளிநீக்கு
  3. /////////காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்! காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!! ///////////////


    அருமையான சிந்தனை சார் ..!

    பதிலளிநீக்கு
  4. நானும் காலத்தினைப் புரிந்து கொள்ளாத ஒருவந்தான். கால்த்தினைப் பற்றிய நல்ல சிந்தனை.

    பதிலளிநீக்கு
  5. கடிகாரத்தின் கையிலா நான் என்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன்

    பதிலளிநீக்கு
  6. காலத்தின் கணிப்பில் தான்
    காவியங்கள் உருவாகிறது
    என்பதை ஆணித்தரமாக
    நிலைநிறுத்தும் வார்த்தைகள் முனைவரே....

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான சிந்தனை ! மனித வாழ்வில், போனா வராதது... நேரம் தான் !

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்! கணிக்க முடியாத காலத்தைப் பற்றிய உங்கள் கணிப்புகள் நல்ல சிந்தனைகள்.

    பதிலளிநீக்கு