இன்று (மார்ச் 20 ) உலக குருவிகள் தினத்தை நினைவுபடுத்த..
என்னும் மூன்று இடுகைகளையும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
சில சிந்தனைகள்..
• இயற்கைக்கு முன் மனிதன் என்றுமே குழந்தைதான்.
• இயற்கையின் சமநிலைக்கோட்பாட்டை நாம் அறிவியல் வளர்ச்சி கொண்டு மாற்றினால், இயற்கையின் சீற்றங்களை நாம் எதிர்கொள்ளநேரிடும்.
• முன்பெல்லாம் கூட்டம் கூட்டமாக சிறகடித்துச்செல்லும் குருவிகளைப் பரவலாகக் காணமுடியும். ஆனால் இன்று தொலைக்காட்சிகளில் மட்டுமே அரிதாக இவ்வினத்தைக் காணமுடிகிறது. அலைபேசியின் கோபுரங்களே இவற்றின் அழிவுக்குக் காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
• எங்கள் வீட்டிலும் எனக்கு விவரம் தெரிந்த நாள்முதலாகவே சிட்டுக்குருவிகள் வளர்கின்றன. கூடுகளில் அல்ல! எங்கள் வீடே அவற்றுக்கு கூடு. எங்கள் வீட்டு முற்றத்தில் கூடுகட்டிய சில குருவிகள் உரிமையோடு வீட்டுக்குள் வந்து அரிசி.. மற்றும் சிறுசிறு உணவுப்பொருள்களை உண்டு தம் துணைக்கும் எடுத்துச்செல்கின்றன…
• ஏதோ ஒரு மாநிலத்தில் சிட்டுக்குருவிகள் அழிவைத்தடுக்க நியாயவிலைக் கடைகளிலேயே மக்களுக்கு குருவிக்கூடுகளை இலவசமாகத் தந்தார்கள் என்றொரு நாளிதழ் செய்தி படித்தேன்.
• உயிர்களில் என்ன ஏற்றத்தாழ்வு..
குருவிகளும் வாழட்டுமே..
இனிமேலாவது..
நம் வீடடுக்கு முன் மரம் வளர்க்கலாம்..
நம் வீட்டு வாயிலில் கொஞ்சம் அரிசிவைக்கலாம்..
சிட்டுக்குருவிகளைக் கண்டால்
இவை அழிந்துவரும் இனம்
என்பதை உணரலாம்
என்பதை உணரலாம்
இளம் தலைமுறையினருக்கும்
இதை அறிவுறுத்தலாம்...
இதை அறிவுறுத்தலாம்...
தொடர்புடைய இடுகைகள்
கூடு இங்கே குருவி எங்கே
(முத்துச்சரம் வழங்கிய இடுகைகளின் தொகுப்பு)
(திருமதி பக்கங்ள் வழங்கிய இடுகை)
//எங்கள் வீடே அவற்றுக்கு கூடு. //
ReplyDeleteஅறிவதில் மகிழ்ச்சி. தங்கள் பதிவையும் இப்போதுதான் தொகுப்பில் சேர்த்து விட்டு வருகிறேன்.
இங்கு தரப்பட்டிருக்கும் இணைப்புக்கு நன்றி.
//இளம் தலைமுறையினருக்கும்
இதை அறிவுறுத்தலாம்...//
அவசியம் செய்ய வேண்டும்.
பார்த்தேன் ராமலட்சுமி நன்றி.
Deleteunmai ayya!
ReplyDeletekodumai ennaventraal-
nam kuzhanthaikal kooda-
kuruvikalai neril paarppaarkalaa?
theriyavillai!
உண்மைதான் சீனி்
Deleteவணக்கம்! இந்த பதிவோடு, தங்கள் மூன்று இடுகைகளையும் படித்தேன். அகமும் புறமும் கலந்த அருமையான இலக்கிய நினைவுகள்
ReplyDeleteநன்றி இளங்கோ
Deleteஎங்கள் வீட்டிலும் எனக்கு விவரம் தெரிந்த நாள்முதலாகவே சிட்டுக்குருவிகள் வளர்கின்றன. கூடுகளில் அல்ல! எங்கள் வீடே அவற்றுக்கு கூடு. எங்கள் வீட்டு முற்றத்தில் கூடுகட்டிய சில குருவிகள் உரிமையோடு வீட்டுக்குள் வந்து அரிசி.. மற்றும் சிறுசிறு உணவுப்பொருள்களை உண்டு தம் துணைக்கும் எடுத்துச்செல்கின்றன…//
ReplyDeleteஇப்போதும் வருகிறதா குருவிகள்?
அந்த கூட்டைப் பார்க்க ஆவல்.(எங்கள் வீடே அவற்றுக்கு கூடு)
என் பதிவின் சுட்டியை இங்கு அளித்தமைக்கு நன்றி.
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கோமதிஅரசு
Deleteநல்ல பகிர்வு முனைவரே....
ReplyDeleteநன்றி அன்பரே
Deleteஇயற்கையின் சமநிலைக்கோட்பாட்டை நாம் அறிவியல் வளர்ச்சி கொண்டு மாற்றினால், இயற்கையின் சீற்றங்களை நாம் எதிர்கொள்ளநேரிடும்.
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html
ReplyDeleteசிங்காரச்சிட்டுக் குருவிகள்..
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இரஜேஸ்வரி
Deleteஇயற்கைக்கு முன் மனிதன் என்றுமே குழந்தைதான்.
ReplyDeleteநல்ல ஒரு பதிவுக்கு நன்றி.
http://eniyavaikooral.blogspot.com
நன்றி இனியவைகூறல்
Deleteதற்போது கிராமங்களில் சிட்டுக்குருவிகளை அதிகமாக காண இயலவில்லை ..!
ReplyDeleteஉண்மை நண்பா.
Deleteநல்ல பகிர்வு. அவசியமானது.
ReplyDeleteசிட்டுக்குருவிகளை வாழவைப்போம்.
நல்ல சிந்தனை! வாழ்த்துகள்!
ReplyDelete