Friday, June 15, 2012

                   நம்மிடமே இருந்தாலும் சிலநேரங்களில் நம் புலன்கள் நமக்கு எதிராகவே செயல்படுகின்றன. மெய், வாய், கண், செவி, மூக்கு என ஒவ்வொரு புலன்களும் நமக்கு எதிராக எப்போதெல்லாம் செயல்படுகின்றன என்பதைக் கொஞ்சம் உற்றுநோக்கிப் பார்த்தால்.

 • உடல்நிலை பாதித்தல்
 • மனநிலை பாதித்தல் 
என்னும் இருநிலைகளை நாம் அடையாளம் காணமுடியும். இன்று ஒரு அகப்பாடலைக் காண இருக்கிறோம். இதில் தலைவியின் காதுகள் அவளிடம் பொய் சொல்கின்றன. இது உடல்நிலை பாதிப்பா? மனநிலை பாதிப்பா? என்று பார்க்கலாம் வாங்க..


 • காது பேசுமா?
 • பேசினால் பொய்பேசுமா? 

என்று தோன்றுகிறதா? பாடலைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.


                    திருமண நாள் குறிக்கப்பட்ட இடைப்பட்ட நாளில் தலைவனின் நினைவாகவே வாடியிருக்கிறாள் தலைவி. அவளிடம் உன்னால் அவன் நினைவைத் தாங்கிக்கொள்ளமுடியுமா? என்று கேட்கிறாள் தோழி. அதற்குத் தலைவி பதிலளிப்பதாக இப்பாடல் அமைகிறது.

                    நள்ளிரவுப் பொழுதில் பனைமரத்தில் கட்டப்பட்ட கூட்டில் தம் அருகில் ஆண்அன்றில்பறவை இருந்தாலும் பெண் அன்றில் ஆண்அன்றிலை எண்ணி ஒலி எழுப்பும். அப்போது ஊர்மன்றத்தைப் பிளந்து கொண்டு செல்வதுபோன்ற பேரொலியுடன் தலைவனின் நெடிய தேர் வரவில்லை என்றாலும் வருவதுபோலவே என் காதில் ஒலிக்கிறது அதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன் என்கிறாள் தலைவி.

பாடல் இதுதான்.


முழவு முதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக்

கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போலச்
செவி முதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே.


குறுந்தொகை 301, 
குன்றியனார், 
இப்பாடலின் ஆங்கில வடிவம்...


My friend! In the middle of the night

my eyes have abandoned  sleep,
and even though I know that he isn’t coming
I feel I hear his tall chariots
with many bells, splitting the earth
and arriving in our town’s common grounds
as the black-legged anril bird
with her first set of eggs
in her nest woven
with small twigs from the luxuriant fronds
of the palm trees with drum-like trunks
calls out in pain for her loving mate.              

பாடலின் அழகுக்கு மேலும் அழகுதரும் கூறுகள்

 • ஒரே கூட்டில் வாழ்ந்தாலும் உடனிருக்கும் தம் துணையைப் பிரிந்ததாக எண்ணி அன்றில் பறவை வருந்தும் என்ற புலவரின் கூற்று அஃறிணை உயிரினங்களின் காதலுக்குத் தக்க சான்றாக அமைகிறது.
 • தலைவனின் தேர் வரவில்லை என்றாலும் பேரொலியுடன் விரைந்து வருவதுபோல ஓசை என்காதுகளில் ஒலிக்கும் என்ற தலைவியின் நினைவு தலைவன் மீது தலைவி கொண்ட பெருங்காதலுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
தொடர்புடைய இடுகைகள்

17 கருத்துகள்:

 1. வணக்கம் முனைவரே,
  புலவர்களின் கற்பனா சக்திக்கு
  அளவே இல்லை தான்...
  காதுகள் இங்கே பேசுகின்றன
  அதுவும் பொய் பேசுகின்றன..
  ஆனாலும் அந்தப் பொய்களில்
  ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது...

  "இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று
  இருக்கும் நேரத்தில்..... சாலையில் தலைவன் கொண்ட
  அதே இருசக்கர வாகனம் எது சென்றாலும் அதன்
  சத்தத்தை கேட்டு .. வந்துவிட்டார் என வாசலுக்கு
  வரும் வேலை போல..."

  இலக்கிய நயம் மனம் நிறைத்தது முனைவரே..

  ReplyDelete
  Replies
  1. சங்ககாலத்தை இக்காலத்தோடு
   தாங்கள் ஒப்பிட்டு உணர்ந்ததையும்,
   அதை உரைத்தமையையும்
   எண்ணி மகிழ்ந்தேன் அன்பரே.

   Delete
 2. ம்ம்ம் ரெம்ப அருமை முனைவரே

  ReplyDelete
 3. இந்த template நல்லா இருக்கு முனைவர் சார்.!

  ReplyDelete
 4. தலைவியின் ஆதங்கம்...

  ReplyDelete
 5. பறவை ஆனாலும பாவை ஆனாலும் துயரம் ஒன்றுதானே

  அருமை முனைவரே!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 6. ஆமாம் ஆமாம்..

  வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி புலவரே

  ReplyDelete

உள்ளடக்கம்

1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் அறிவிப்பு ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 உன்னையறிந்தால் உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) உளவியல் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கதை கருத்தரங்க அறிவிப்பு கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை சிலேடை சென் கதைகள் சொல்புதிது தன்னம்பிக்கை தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொன்மம் தொல்காப்பியம் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நற்றிணை நல்வழி நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிற்றுப்பத்து பழமொழி பழைய வெண்பா பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பிள்ளைத்தமிழ் புதிர் புறத்துறைகள் புறநானூறு புள்ளிவிவரங்கள் புவிவெப்பமயமாதல் பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு யுடியுப் வலைச்சரம் ஆசிரியர் பணி. வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து