Friday, July 13, 2012

அந்த மகராசன் மிக நல்லவன்


ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். மிகவும் 

கொடுமைக்காரன்மக்களை வரிகளால் வாட்டி 
வதைத்துக்கொண்டிருந்தான்.
மக்களுக்கு வீட்டுக்கு ஒரு மூட்டை நெல்கொடுத்தான்அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசி வாங்கிக்கொண்டான். அதனால் மக்களுக்கு அந்த அரசன் மீது கடுமையான கோபம்.
இவன் எப்படா இறப்பான் என்று மனம் நொந்துபோயிருந்தார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரு நாள் அந்த அரசன் நோய்வாய்ப்பட்டான்.அப்போது அந்த அரசனுக்கு ஒரு எண்ணம் வந்தது.இத்தனை ஆண்டுகாலம் மிகவும் சுயநலமாகவே வாழ்ந்துவிட்டோம். நாட்டில் ஒருவருக்குக் கூட தன் மீது மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. தன்னை நல்லவன் என்று ஒருவர் கூட சொல்லவில்லையே என்ற வருத்தம் வந்தது. தன் மகனை அழைத்து.“இதே மக்கள் தங்கள் வாயால் என்னை அந்த மகராசன் மிக நல்லவன் என்று சொல்லவேண்டும்“ என்று தன் கடைசி ஆசையைச் சொல்லிவிட்டு உயிர்துறந்தான்.  தன் தந்தையின்  இறுதி ஆசையல்லவா இதை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று முடிவு செய்த இளவரசன் மக்களிடம் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு செய்தான்.

“ஒவ்வொரு வீட்டுக்கும் நான் ஒரு மூட்டை உமி தருவேன். அதற்குப் பதிலாக நீங்கள் ஒரு மூட்டை அரிசி தரவேண்டும்“  என்பது தான் அந்த அறிவிப்பு.

மக்களுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அதனை வெளிப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப்பார்த்து தம் தலைவிதி என்று எண்ணிக்கொண்டு இந்த இளவரசனுக்கு அந்த மகராசனே பரவாயில்லை. அவன் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம் 'அந்த மகராசன் மிக நல்லவன்' அவன் நெல்லை கொடுத்துவிட்டாவது அரிசிகேட்டான். இவன் உமியைக் கொடுத்துவிட்டல்லவா அரிசிகேட்கிறான் என்று சொன்னார்கள்..

இறந்துபோன அரசனின் ஆன்மா நிறைவடைந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டான் இளவரசன்.

இப்படியொரு கதை உண்டு.

இந்தக் கதை ஏன் இதோடு முடியவேண்டும்..

இதை இன்றைய சூழலோடு கொஞ்சம் வளர்க்கலாமே..

             அந்த இளவரசனுக்கு முதுமைக்காலத்தில் தன் தந்தையைப் போலவே எண்ணம் வந்தது. நம்ம ஊரு அரசியல்வாதிகளை அழைத்து..

என்னைப் போல மகராசன் உலகத்திலே இல்லை என்று இதே மக்கள் தம் வாயால் சொல்லவேண்டும்“ என்று கேட்டுக்கொண்டான்.


நம்மாளுங்க எப்படிப்பட்டவங்க.

கோடிக்கணக்குல ஊழல் செய்பவர்களுக்கு இது பெரிய செயலா என்ன..?

ஒரு சாக்கை மட்டும் கொடுத்து ஒரு மூட்டை  அரிசி கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்..

வழக்கம் போல புலம்பிக்கொண்டு மக்கள் ஒரு மூட்டை அரிசி கொடுத்தார்கள்.

இப்போது  சொன்னார்கள் அந்த மக்கள் “அந்த மகராசன் மிக நல்லவன்“ என்று இளவரசனை.

இன்றைய அரசியல்வாதிகள் கொடுத்த சாக்கு என்பதை இலவசம் என்றும்
மக்கள் கொடுத்த ஒரு மூட்டை அரிசி என்பதை, மக்கள் தேர்தலில் அளிக்கும் ஓட்டு என்று எண்ணிக்கொண்டாலும் தவறில்லை.
 தொடர்புடைய இடுகைகள்

37 comments:

 1. அருமையான படைப்பு முனைவர் குணசீலன்.
  பாராட்டுகள்.

  உரையாடல்களுக்கு மேற்கோள் குறியிடுதல் போன்ற சிறுகதைக்குரிய அம்சங்களைச் சேர்த்து, கதைக்கு இன்னும் மெருகேற்றுங்கள், தாங்கள் விரும்பினால்.

  மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவரே.

   Delete
 2. இன்றைய அரசியல் கூத்துக்களை அழகான கதையால் உணர்த்திய விதம் நெத்தியடி. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  ReplyDelete
 3. இன்றைய அரசியல்வாதிகள் கொடுத்த சாக்கு என்பதை இலவசம் என்றும்
  மக்கள் கொடுத்த ஒரு மூட்டை அரிசி என்பதை, மக்கள் தேர்தலில் அளிக்கும் ஓட்டு என்று எண்ணிக்கொண்டாலும் தவறில்லை.

  நிதர்சன உண்மைகள்..

  ReplyDelete
  Replies
  1. மறுமொழிக்கு நன்றி இராஜராஜேஸ்வரி

   Delete
 4. அன்பின் குணா - நல்ல கற்பனை - இரசித்தேன் - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும்மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   Delete
 5. இன்றைய. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற கதை!முனைவரே!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 6. சிறப்பான பதிவு பாரட்டுக்கள்...!

  ReplyDelete
 7. இக்கால சூழலுக்கு ஏற்ற நல்ல ஒப்புமை சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. நம்மை ஆள்பவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். முன்பு இருந்தவர்கள் பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு நடந்து கொள்கிறார்கள்.
  உதாரணம்: சென்னை கவுன்சிலர்கள்.

  ReplyDelete
 9. இதை வேறு மாதிரி ஏற்கனவே நான் பதிவிட்டிருக்கிறேன்.. காண்க..http://muransuvai.blogspot.com/2011/12/blog-post_16.html

  ReplyDelete
 10. எப்பொழுதுமே இக்கரைக்கு அக்கரை
  பச்சையாகத்தான் தெரியும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் முனைவர் ஐயா...
  அருமையான பதிவுங்க.

  ReplyDelete
 11. நாட்டு நடப்பை இதை விட பச்சையாகச் சொல்லமுடியாது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி அன்பரே.

   Delete
 12. பாராட்டுக்கு உரியது . நன்றி

  ReplyDelete
 13. நல்ல கதை மூலம் அரசியலை எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.

  ReplyDelete
 14. இடித்துரைக்கும் வண்ணம் எழும்பப்பட்ட பதிவானது அருமையானதாகவும் நினைவலைகளை அவ்வப்போது எழுப்பக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது.

  வாழ்த்துகள்.!

  ReplyDelete
 15. காலத்திற்கேற்ற பொருத்தமான கதை குணசீலன்.
  அரசியல்வாதிகளுக்கு இப்படிப்பட்ட கதைகளை யாரேனும் கூறினால் என்றாவது ஒருநாள் (திருந்துவதைப் பற்றிச்)சிந்திப்பார்களா???.....(உலகம் அழியும் முன்)

  ReplyDelete
 16. இன்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களின் மூளையை இலவசம் என்ற சலவை செய்துவிட்டனர்.

  நன்றி ஐயா.

  ReplyDelete
 17. அருமை... அருமை... இன்றைய சூழலுக்கேற்ற கதை. மக்களுக்குப் புரிந்தால் சரி. https://www.sigaram.co

  ReplyDelete