Saturday, November 19, 2011

விலை ஏற்றம் - சில நன்மைகள்!!

தமிழகத்தில் தற்போது கொண்டுவந்துள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் இருக்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்..

இதோ சில நன்மைகள்.

பால் விலையேற்றம்


 • நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக்கொள்வார்கள்.
 • சோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணிக்கை குறையும், அங்கு செல்வோர் எண்ணிக்கையும் குறையும்.

எரிபொருள் விலையேற்றம்

 • வாகனப் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
 • வாகன நெரிசல் குறைவதோடு, சாலைவிபத்துக்களும் குறையும்.

மின்சார விலையேற்றம்

இரவு படிக்கும் மாணவர்கள், மின்செலவைக் குறைக்க இரவு படிப்பதை நிறுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் மின்சாரம் தானே நின்றுவிடும்.

காற்றுக்காகவாவது வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற சிந்தனை மக்கள் மனதில் மலரும்.

மக்கள் தொகை குறையும்

 • வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் வாழமுடியாமல் கொலை, கொள்ளை என ஈடுபடுவார்கள்.. அவ்வாறு வாழ முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்.

புரிதல்

 • அரசு என்னென்னவோ இலவசமாகத் தந்ததே..

 • இந்த விலையேற்றமும் இலவசங்கனின் வரிசையில் வந்த இலவசம் தான் என்பதையும்... • இது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த விலையேற்றம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.


சில்லறைத் தட்டுப்பாடு குறையும்

நம்மாளு - தேநீர் எவ்வளவுப்பா?
கடைக்காரர் - 6 ரூபாய்
நம்மாளு - ஏன்பா 6,7 ன்னு வெச்சுக்கிட்டு 10 ரூபாய்ன்னு வெச்சிடலாம்ல “சில்லறைத் தட்டுப்பாடு“ வராது பாருங்க..

கடைக்காரர் - !!! இவன் திட்டுறானா!! யோசனை சொல்றானா!!


எல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின் விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..

அட!!
ஏம்பா புலம்பறீ்ங்க..
எல்லாத்தையுமே அரசு ஒரு “தொலைநோக்குப் பார்வை“யோட தான் செய்திருக்கிறது!!

தொடர்புடைய இடுகை


56 comments:

 1. அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்
  இப்படி ஆறுதல் பெற்றுக் கொள்ளவேண்டியதுதான்
  வேற வழி ?
  த.ம 2

  ReplyDelete
 2. //கடைக்காரர் - !!! இவன் திட்டுறானா!! யோசனை சொல்றானா!!//  உங்க பதிவும் இப்படியே தோணுது.

  ReplyDelete
 3. //எல்லாத்தையுமே அரசு ஒரு “தொலைநோக்குப் பார்வை“யோட தான் செய்திருக்கிறது!!//
  அது "தொலை நோக்கு பார்வை" இல்லண்ணே.கொலை நோக்கு பார்வை.எழுத்து பிழையை சரி பண்ணுங்க.

  ReplyDelete
 4. நன்று முனைவரே! நன்று!

  நையாண்டி மேளம் நன்றாகவே ஒலிக்கிறது
  நன்றி!

  ReplyDelete
 5. அட இப்படிகூட நன்மை இருக்கா ?

  ReplyDelete
 6. வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க...ஆனால்...

  ReplyDelete
 7. // எல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின் விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..//

  மிக நல்ல யோசனை .... செய்யலாம் தான் .

  ReplyDelete
 8. //இது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த விலையேற்றம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.//

  இது கொஞ்சம் கஷ்டம் நண்பா.

  சிறப்பான எள்ளல் பதிவு.

  ReplyDelete
 9. இவர் திட்டுறாரா!! யோசனை சொல்றாரா!!
  எனக்கு இதே ஐயம் முனைவரே

  ReplyDelete
 10. தொலை நோக்கு அல்ல கொலை நோக்கு

  ReplyDelete
 11. தங்களின் சிந்தனை அருமை...

  இலவசங்களை விரும்பும் வரை விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் நல்லது....

  ReplyDelete
 12. //நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக்கொள்வார்கள்.//

  எல்லாமே சரியாக இருக்கு முனைவரே, ஆனா இந்த ரசிகன் திருந்த மாட்டான்

  ReplyDelete
 13. என்ன முனைவரே இப்படி சொல்லிடிங்க .........

  ReplyDelete
 14. இதுவும் ஒரு தொலை நோக்குப்பதிவு தான்!

  கடைசி விஷயம் நடந்தா நல்லது!

  ReplyDelete
 15. நீங்கள் சொல்வது உண்மை தான் மக்களின் வாழ்க்கை தரம் உயரும் ...........
  ( சத்தியமா சிரிக்கவில்லை )

  ReplyDelete
 16. வித்தியாசமான சிந்தனை தான் நண்பரே

  ReplyDelete
 17. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். போதைபொருட்களின் விலையேற்றத்தை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.

  ReplyDelete
 18. What's so special? vilaivaasi has always been on the rise. Can you provide a graph of vilaivaasi and salary rise of middle class people? Without that, it is difficult to say if this is out of the ordinary.

  ReplyDelete
 19. இப்படிக்கூட மனதைத் தேற்றிக்கொள்ளலாமா....!!!
  அருமை!..நேர சொன்னால் விவாதிப்பார்கள் இழப்பை
  எதிர் மறையாகச் சொன்னால் சிந்திப்பார்கள்.உங்கள்
  ஆக்கத்தின் உள் நோக்கமும் இதுவென புரிந்துகொண்டே
  இந்த ஆக்கத்திற்குத் தலை வணங்குகின்றேன் .
  வாழ்த்துக்கள் சகோ .என் தளத்தில் இன்று ஓர் ஆக்கம் இதில்
  கண்ணகி சுயநலவாதி அதனால்த்தான் மதுரையை எரித்தாள்
  என்பது குற்றச் சாட்டு .இதற்கு எதிரான என் ஆக்கம் என்
  சிற்றறிவுக்கு உட்பட்டு வகுத்துள்ளேன் .இதில் உங்களைப்
  போன்ற நல்ல அறிவாளிகளின் கருத்தினை மிக ஆவலுடன்
  எதிர்பார்க்கின்றேன் .தவறாமல் உங்கள் எண்ணக் கருத்தினை
  உள்ளபடி விரிவாகத் தாருங்கள் சகோ .இது என் அன்பான
  வேண்டுகோள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 20. அனுபவி ராஜா அனுபவி!
  இலவச விலையேற்றம்!

  ReplyDelete
 21. @சேக்காளி தவறா எழுதியிருந்தாலும் சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்களே..

  பெரிய ஆளுதான் நண்பா நீங்க..

  ReplyDelete
 22. @சத்ரியன் நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா..

  ஏதோ நம்மால் ஆன நம்பிக்கை விதைகளை விதைப்போம்..

  ReplyDelete
 23. @veeduயோசனை சொன்னாலோ
  திட்டினாலோ யாரும் திரும்பிப்பார்க்கப்போவதில்லை..

  அதனால் இப்படி ஏதாவது புதிதாக முயற்சிப்போமே என்றுதான் நண்பா..

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 24. @ராஜா MVS தங்கள் தொடர்வருகைக்கு நன்றிகள் நண்பா.

  ReplyDelete
 25. @suryajeeva காலம் போற போக்கில் நீங்கள் சொல்வதுதான் உண்மையாக இருக்கிறது அன்பரே.

  ReplyDelete
 26. @stalin wesley ஏன் என்ன ஆச்சு நண்பா..

  ஏதோ என் மனக் குமுறலைக் கொட்டித் தீர்த்தேன் அவ்வளவுதான்..

  ReplyDelete
 27. @கோகுல் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா.

  ReplyDelete
 28. @"தமிழ் இணையதளம்" நீங்க சிரிக்கலைன்னா சிந்தித்திருக்கிறீங்கன்னு நினைக்கிறேன்..

  மகிழ்ச்சி நண்பா..

  ReplyDelete
 29. @Anony Munna தங்கள் வருகைக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 30. @Anony Munna தங்கள் வருகைக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 31. @சேகர்தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 32. @அம்பாளடியாள் தங்கள் ஆழ்ந்த பார்வைக்கு நன்றி அம்பாள்.

  ReplyDelete
 33. தலைப்பே கனகச்சிதம் !
  விலையேற்றம் நன்மையே !

  ReplyDelete
 34. இந்த விஷயத்தை இப்படியும் எடுத்துக்கொள்ளலாமா???

  ReplyDelete
 35. அருமை....

  மதுபானம், புகையிலை ஆகியவற்றின் விலையை ஏற்றி பணத்தட்டுப்பாடை அரசு சரி செய்து இருக்கலாம்...
  ஆனால் , அப்படி செய்தால் அரசின் முக்கிய வருவாயான டாஸ்மாக் நொடிந்து விடுமே??

  பள்ளிகளை நடத்த வேண்டிய அரசு மதுக்கடைகளை நடத்தினால் இப்படித் தான்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி நண்பா.

   Delete
 36. இந்த ஆட்சியில் ,நகைச்சுவை கூட டிராஜடி நகைச்சுவையாகத்தான் கிடைக்கும் போல ..நல்ல பதிவு ..இதை நினைத்து மனதை திடப்படுத்திக் கொள்ளலாம்

  ReplyDelete
 37. நீங்களும் நானும்தான்

  ReplyDelete